கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியை தெரு நாய்கள் கடிக்கச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் பல நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்பதால் இதயம், சிறுநீரகம், மகப்பேறு, பெண்கள் நலன், எலும்பு முறிவு, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலன் என பல்வேறு துறைகளில் நவீன சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபமாக மருத்துவமனை வளாகத்திற்குள் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
இந்நிலையில் அங்கு நடந்து சென்ற நோயாளியை அங்கு சுற்றித் திரிந்த நாய்கள் கடிக்க வருவது போல் பயமுறுத்தி குலைத்துக் கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இது அங்குள்ள நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அரசு அதிகாரிகள் அங்கு சுற்றித் திரியும் தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காக்க தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“