பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில், நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் எதிர்பாராத விதமாக கழிவு நீர் பெருமளவில் வெளியேறியுள்ளது. மருத்துவமனையில் உள்ள பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் மக்கள் வெளியே செல்லும் வழி மூடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள துர் நாற்றத்தால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வந்த பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
இதேபோல கடந்த மாதம் கோவை தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவு நீர் தொட்டி நிரம்பி கழிவு நீர் வெளியேறியது. இதனால் அங்குள்ள நோயாளிகள், மக்கள், செவிலியர் மற்றும் இதர நபர்கள் பெரும் சிரமத்துக்குள் ஆகி இருந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதற்கு உடனையாக தீர்வு காண வேண்டும் என்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#VIDEO || கோவை அரசு மருத்துவமனையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் வெளியேறும் வழி மூடல்; கடும் துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதி!https://t.co/gkgoZMHWlc |📹@rahman14331 | @Subramanian_ma | @DrSenthil_MDRD | @CollectorCbe | #coimbatore pic.twitter.com/7CLIBOXIQ6
— Indian Express Tamil (@IeTamil) April 13, 2023
— Indian Express Tamil (@IeTamil) April 13, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil