கோவை 'ஹேப்பி ஸ்ட்ரீட்'… உற்சாக வெள்ளத்தில் குழந்தைகள் - பெரியோர்கள்!
‘Happy Street’ in Coimbatore city Tamil News: கோவை ஆர். எஸ். புரத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள 'ஹேப்பி ஸ்ட்ரீட்' குழந்தைகள் - பெரியோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘Happy Street’ in Coimbatore city Tamil News: கோவை ஆர். எஸ். புரத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள 'ஹேப்பி ஸ்ட்ரீட்' குழந்தைகள் - பெரியோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Coimbatore News in Tamil: கடந்த 2017ஆம் ஆண்டில் தனியார் நாளிதழின் முயற்சியாக கோவை, மதுரை, சென்னை போன்ற நகரங்களில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற முயற்சி துவங்கப்பட்டது. இந்த முயற்சியின் படி தனியார் நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகங்கள், அரசுத் துறைகள் மற்றும் காவல்துறை இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன்படி நகரின் குறிப்பிட்ட பகுதியில், ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒரு சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் பொது மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, விளையாடுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவர்.
நகரங்களில் காணப்படும் முக்கிய பிரச்சனைகளான போக்குவரத்து நெரிசல், பாதசாரிகளுக்கான நடக்க இடம் இல்லாமல் போவது, சைக்களுக்கான குறைவான மதிப்பு மற்றும் காற்று மாசுபாடு போன்ற இன்னல்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இம்முயற்சி கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.
Advertisment
Advertisements
கொரோனா பெருந்தொற்றின் விளைவுகள் இப்போது குறைந்துள்ள நிலையில், இன்று ஞாயிறு முதல் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு குழந்தைகள் மற்றும் பெரியோர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள டி பி ரோட்டில், தலைமை தபால் அலுவலகம் முதல் மேக்ரிகார் சாலை வரையான பகுதிகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துணைத் தலைவர் முத்துசாமி ஆகியோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil