/tamil-ie/media/media_files/uploads/2023/04/New-Project26.jpg)
car race
கோவையை அடுத்த மலுமிச்சாம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பாக தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார் பந்தயப் போட்டி இன்று (ஏப்ரல் 2) நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், சோலார் வாகனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த கார் பந்தய போட்டியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-02-at-13.40.33.jpeg)
இதில் தமிழகம்,கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 30 அணிகளைச் சார்ந்த 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பொறியியல் துறை மாணவர்களால் உருவாக்கப்பட்ட கார் முழுக்க முழுக்க பெட்ரோல், டீசல் இல்லாத சூரிய மின்சக்தி ஆற்றலால் இயங்கி பந்தயச் சாலையில் சீறிப் பாய்ந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-02-at-13.40.32.jpeg)
இதுகுறித்து கார் உருவாக்கிய மாணவர்கள் கூறுகையில், "தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக பெட்ரோல், டீசல் இல்லாத சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சோலார் கார் உருவாக்கப்பட்டுள்ளது. சோலார் பயன்பாடு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது" என்று கூறினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.