கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சி.எஸ் மீல்ஸ் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் உணவகத்தில் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டு இருந்த வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்து உள்ளார்.
பின்னர் கல்லாப்பெட்டி இருக்கும் இடத்தை தேடி பிடித்து அதில் பணம் இருக்கிறதா தேடி உள்ளார்களா..? ஆனால் பணம் ஏதும் இல்லாததால் அங்கு இருந்து வந்த வழியே திரும்பி சென்று உள்ளார். இதனை தொடர்ந்து காலையில் உணவகத்தை திறந்தனர். அப்போது உணவகத்தில் திருட முயற்சி நடைபெற்றது தெரியவந்தது.
இது குறித்து உணவக உரிமையாளர் ஹிகார் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரின் உருவம் பதிவாகி உள்ளதா..? என ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நள்ளிரவில் திருட முயன்ற உணவகம் அருகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், எஸ்.பி.அலுவலகம் அமைந்திருந்தும் முக்கியமான சாலையில் போதிய மக்கள் பாதுகாப்பு இல்லாதது போன்று
வெண்டிலேட்டர் வழியாக ஓட்டலுக்குள் புகுந்து திருட முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: பி.ரஹ்மான்