போலி நகைகளை அடகு வைத்து மோசடி: கோவையில் நிதி நிறுவன நிர்வாகி கைது
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ICL Fincorp என்ற தங்கநகை கடன் நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலி நகைகளை வைத்து பணம் எடுத்து மோசடி செய்த உதவி மேலாளர் சத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது ICL fincorp நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் தங்க நகைகளை அடமானமாக பெற்றுக்கொண்டு அவற்றுக்கு பணம் வழங்கி வருகிறது.
Advertisment
இந்நிறுவனத்தின் கோவை குனியமுத்தூர் கிளையின் தலைவராக கார்த்திகா என்பவரும், மேலாளராக சரவணன் என்பவரும், உதவி மேலாளராக சத்யா என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த நிறுவனத்தில் வழக்கமான தணிக்கை நடைபெற்றது. அப்பொழுது அந்த நிறுவன கிளையில் போலி தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கிளையில் உள்ள அனைத்து நகைகளையும் தணிக்கை செய்து பார்த்தபோது வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி 598 கிராம் போலி தங்க நகைகள் வைக்கப்பட்டு அதற்கு ஈடாக 40.80 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
Advertisment
Advertisement
கிளை தலைவர் கார்த்திகா, மேலாளர் சரவணன், உதவி மேலாளர் சத்யா ஆகியோர் கூட்டு சேர்ந்து 40.80 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் வினோத்குமார் கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்தார். புகாரன் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் சத்யா என்பவரை கைது செய்தனர்.
மேலும் தலைமுறைவாக உள்ள கிளை தலைவர் கார்த்திகா மற்றும் மேலாளர் சரவணன் ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி நிறுவன ஊழியர்களே 40.80 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான், கோவை
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news