ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இந்தியா - பாகிஸ்தானின் வாகா எல்லையில் நடைபெறும் 'பீட்டிங் ரிட்ரீட் செரிமனி' உலக பிரசித்தி பெற்ற நிகழ்வு. இதில் இந்தியா, பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெறும்.
இதனிடையே வாகா எல்லையில் நடக்கும் அணிவகுப்பை போலவே கோவையில் இந்த முறை நடத்த ஆயுதப்படை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக வாஹா எல்லையில் பயிற்சி பெற்ற கமொண்டா அதிகாரி, போலீசாருக்கு தீவிர பயிற்சி அளித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் முதன்முறையாக வாகா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பை போலவே நடத்தபட்டது. இதில் பெண் போலீசாரும், ஆண் போலீஸரும் எல்லையில் நிற்பது போல் தனித்தனியாக அணிவகுப்பை நடத்தி காட்டினர்.
சுதந்திர தினவிழாவுக்கு வருகை புரிந்த பொதுமக்கள் இந்த அணிவகுப்பை கண்டு களித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“