Advertisment

'மோடி பிரச்சாரத்திற்கு தடை வேண்டும்': கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் மனு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் இந்திய ஒற்றுமை இயக்கதத்தினர் மனு அளித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
coimbatore Indian Unity Movement plea to disqualify PM Modi from contesting elections Tamil News

மோடியின் பேச்சுக்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இந்திய ஒற்றுமை இயக்கத்தினர் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

 Coimbatore | Pm Modi Election Campaign: நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள்  எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் முதன்மை உரிமை இஸ்லாமியர்களுக்கு தான் உள்ளது என்று சொன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சார கூட்டத்தில் மோடி திரித்து மதவெறுப்பு பிரச்சாரத்தை செய்துள்ளார் என்று கூறியுள்ள இந்திய ஒற்றுமை இயக்கத்தினர், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் மனு அளித்தனர்.

மோடியின் பேச்சுக்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும், சமூகத்தில் மத மோதலை தூண்டுவதாகவும், அமைதியை சீர்குலைப்பதாகவும் தெரிவித்துள்ள இந்திய ஒற்றுமை இயக்கத்தினர், தேர்தல் ஆணையம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு அவர் தேர்தலில் நிற்பதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

இந்த மனுவை இந்திய ஒற்றுமை இயக்கத்தின்  கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நேருதாஸ், பேராசிரியர் காமராஜ், டென்னிஸ் கோவில்பிள்ளை ஆகியோர் அளித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore Pm Modi Election Campaign
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment