கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வந்தது.
கோவை மாநகர பகுதிகளான காந்திபுரம், ரயில் நிலையம், வடகோவை, உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் புறநகர் பகுதிகளான கணுவாய், பெரியநாயக்கன்பாளையம், மருதமலை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“