Advertisment

மருத்துவ முகாமில் அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: கோவை ஈஷா யோகா மைய டாக்டர் போக்ஸோ வழக்கில் கைது

மருத்துவ முகாமில் அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறி கோவை ஈஷா யோகா மையத்தின் மருத்துவ முகாமின் மருத்துவர் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore Isha Yoga Center doctor arrested under POCSO Act for Sexual molestation govt school students in medical camp Tamil News

மருத்துவ முகாமின் போது மாணவிகளுக்கு மருத்துவர் சரவணன் மூர்த்தி என்பவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர்.

கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருகின்றனர். அதில் மருத்துவ முகாம்கள் அமைத்து, நடமாடும் மருத்துவ முகாம்கள் போன்ற இலவச முகாம்கள் அமைத்து இலவச மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள் போன்ற சேவைகளை செய்து வருகின்றனர். 

Advertisment

இந்நிலையில், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத் துறையினர் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அங்கு நடந்த முகாமின் போது  மாணவிகளுக்கு  மருத்துவர் சரவணன் மூர்த்தி என்பவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, குழந்தைகள் நலத் துறையினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் சரவணன் மூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் (Cr.No:16/24 U/S 9(e) r/w 10 of POCSO Act) வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore Pocso Act
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment