கோவை உக்கடம் அருகே பாலத்தின் மீது பாலஸ்தீனக் கொடியை பறக்க விட்ட சம்பவத்தில் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 24 ம் தேதி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, உக்கடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் பாலத்தின் மீது ஏறி பாலஸ்தீன கொடியை சிலர் பறக்க விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சபீர் அலி, மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 341, 290 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“