பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை,கரூர், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞரணியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் கார்த்திகேயன் கடந்தாண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவோடு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். செந்தில் பாலாஜியோடு நெருக்கமான இவர் வீட்டில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோல்ட்வின்ஸ் அருகே இருக்கும் இவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil