பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவராக ரமேஷ் குமார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.
பாஜக-வின் கோவை மாவட்ட தலைவராக இருந்த பாலாஜி உத்தமராமசாமி உடல் நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மாவட்ட பொதுச் செயலாளராக இருந்த ரமேஷ் குமாரை கோவை மாவட்ட தலைவராக நியமித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதையடுத்து ரமேஷ் குமார் பதவியேற்பு விழா கோவை சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/an3TdhmbwtgpgVcTmTBu.jpeg)
மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல் முருகன் புதிய மாவட்ட தலைவர் ரமேஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ரமேஷ் குமார் 4 முறை கோவை மாநகர மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“