கோவை நகைக் கடையில் கொள்ளை: சி.சி.டி.வி வீடியோவில் சிக்கிய கொள்ளையன்
Coimbatore SRI Balaji jewellery Robbed by unknown person; police on tracking Tamil News: கோவையில் நகை வாங்குவது போல் நடித்து நகைக்கடையில் 2 சவரன் தங்க நகையை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Coimbatore SRI Balaji jewellery shop robbery: Robber caught on CCTV
பி. ரஹ்மான், கோவை மாவட்டம்
Advertisment
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பாலாஜி ஜீவல்லரி என்ற பெயரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் எப்போது வாகனங்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும்.
இந்நிலையில் நேற்று மாலை இக்கடைக்கு வந்ந ஒருவர் பிரபல வங்கியின் மேலாளர் என கூறி தங்கச்சங்கிலிகளை காண்பிக்க சொல்லியிருக்கிறார். இதனையடுத்து கடையின் ஊழியர் அவருக்கு தங்கச்சங்கிலிகளை எடுத்துக்காண்பித்துள்ளார். அப்போது அப்பெண் ஊழியர் டீ சாப்பிட செல்லும் போது உரிமையாளரின் தாயிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறார்.
Advertisment
Advertisement
இந்நிலையில், அந்த மர்ம நபர் அவரிடம் தங்கச்சங்கிலியை பார்த்து விட்டதாகவும் உள்ளே இருக்கும் காமாட்சி விளக்கு வேண்டும் என கேட்டதை தொடர்ந்து அவர் அதனை எடுக்க உள்ளே சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2 சவரன் தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து சப்தம் கேட்டு வந்த ஜெயகுமாரின் தாய் மர்ம நபரை விரட்டியுள்ளார். பின்னர் வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து சென்று, திருடு போன நகை கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இருக்கும் நகைக்கடையில் நடைபெற்ற இத்திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.