தங்கம் – வெள்ளி நகை கடையின் நோட்டீஸ் புகைப்படம் கோவையில் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ராஜவீதி காவல் நிலையம் செல்லும் வழி வரும் போது முன் புறமுள்ள கடைகளில் அவர் கடை தெரியாமல் இருக்க விளம்பர பலகை வைத்து மறைத்து இருப்பார்கள்
எனவும் மறைவை தாண்டி வந்தால் அவர் கடை இருப்பதாகவும் – அங்கு வந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கிச் செல்லலாம் என நோட்டீஸ் அடித்து உள்ளார்.
இதனை புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் தற்போது உள்ள தொழில் போட்டி காரணமாக விற்பனையை அதிகரிக்க வேண்டும் என மற்ற கடை நிறுவனங்களை மறைத்து தங்கள் நிறுவனம் தான் தெரிய வேண்டும் என நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் பெரிய நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன ஆனால் சிறிய நிறுவனங்கள் நோட்டீஸ், பிளக்ஸ் போர்டு போன்றவற்றில் விளம்பரம் செய்து தனது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் கடை விளம்பரத்திற்காக இதுபோன்று நோட்டிஸ் அச்சு அடித்தாரா…? அல்லது உண்மையிலே அவர் முன்பு உள்ள மற்ற கடைக்காரர்கள் இதுபோன்று விளம்பர பலகை வைத்து உள்ளனரா.? என்பது அனைவரின் கேள்விக்குறியாக உள்ளது…? மேலும், இந்த நோட்டீசை பார்க்கும் பொது மக்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“