/indian-express-tamil/media/media_files/4lQ1SjOMCjD8Lq76b7Tx.jpg)
கோவை நகைக்கடை கொள்ளை வழக்கு: கைதான மனைவி நர்மதா; கணவன் விஜய் இன்னும் கைது செய்யப்படவில்லை
கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்படும் விஜய் என்பவரின் மனைவி நர்மதா கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் இருந்து 3 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/i4ez3qOzi3RW19CtF8Ee.jpeg)
கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவை காந்திபுரம் நூறடிச் சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கண்டுபிடித்து, களவு சொத்துகள் மீட்கப்பட்டது. அறிவியல் ரீதியான தடவியல் நிபுணர்கள் உதவியுடன் புலன் விசாரணை மேற்கொண்டதில், களவை செய்தவர் தருமபுரியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.
/indian-express-tamil/media/media_files/tAHX0IYU2zqJxBt0vy5J.jpeg)
விஜய் இன்னும் கைது செய்யப்படவில்லை. கூடிய விரைவில் அவர் கைது செய்யப்படுவார். இந்த வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை நடைபெறும். வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/0mAu8kqPj7xQErWfreH1.jpeg)
இந்த திருட்டில் விஜய்யின் மனைவி நர்மதா உடந்தையாக இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிக்க திட்டமிடவும், நகைகளை மறைத்து வைக்கவும், தப்பி செல்லவும் என நர்மதாவின் பங்களிப்பு இருந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/4lQ1SjOMCjD8Lq76b7Tx.jpg)
முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 2 கிலோ தங்க நகைகள், வைரம், பிளாட்டிணம், வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
புலன் விசாரணையில் 4 கிலோ 600 கிராம் தங்க நகைகள், வைரம், பிளாட்டிணம், 700 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விஜய் மீது அரூர், ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட பகுதிகளில் பணம் திருடியதாக திருட்டு வழக்குகள் உள்ளது. கட்டுமான பணிகள் நடைபெறும் போது, சரியாக எப்படி உள்ளே நுழைந்தது மூன்றாவது மாடிக்கு எப்படி சென்றார் என்பது குறித்தும், கடையில் பணியாற்றுபவர்கள் தகவல் அளித்தார்களா என்பது குறித்தும் விஜயை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் தெரியவரும்.
ஆனைமலை பகுதியை சேர்ந்த விஜய்யின் நண்பர் சுரேஷ் என்பவரிடம் விசாரணை நடைபெறுகிறது. விஜய் இதற்கு முன்பு சிறிய அளவிலான பணம் திருட்டில் ஈடுபட்டுள்ளார். நகைக்கடைக்குள் சென்றதும் அவர் முதலில் பணம் இருக்கிறதா என சோதனை செய்துள்ளார்.
பணம் கிடைக்காததால் நகையை எடுத்துள்ளார். நகைகளை அவர் தேர்வு செய்து எடுக்கவில்லை. ரேண்டம் ஆக எடுத்துள்ளார். கூடிய விரைவில் விஜய் கைது செய்யப்படுவார் எனத் தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.