கோவை புலியகுளம் - சௌரிபாளையம் சாலையில் உள்ள ஏரி மேடு அருகே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
கோவை புலியகுளம் - சௌரிபாளையம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதால் பள்ளி கல்லூரிகள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்காக, இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் சிரமத்துக்குள் ஆகியுள்ளனர்.
குறிப்பாக புலியகுளம் ஏரி மேடு இறக்கம் அருகே, சாலையில் பல்வேறு பகுதிகள் உடைந்த நிலையில் உள்ளது.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல குறுகிய சாலையான இதில், பேருந்துகளும் செல்வதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் நெரிசலில் காத்திருக்கின்றனர்.
இது அவசர காலங்களில் பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.
இந்த நிலையில் புலியகுளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கிய உள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“