scorecardresearch

உரிய காரணம் இன்றி சஸ்பெண்ட்; கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி

உரிய விளக்கம் அளிக்காமல் மாணவர்களை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வளாகம் முன்பு மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

Coimbatore
Coimbatore

கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஷேக் முகமது என்ற மாணவர் அவரது மனைவியான ஹாரிதா (இருவரும் கல்லூரி மாணவர்கள்) வின் டிசி தொடர்பாக கல்லூரி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு தகாத வார்த்தைகளால் மிரட்டியதாக கூறப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

அதே சமயம் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணீஸ் என்ற மாணவரையும் சஸ்பென்ஸ் செய்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் உரிய விளக்கம் அளிக்காமல் மாணவர்களை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி வளாகம் முன்பு  மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

செவ்வாய் கிழமை மதியம் முதல் 24 மணி நேரமாக விடிய விடிய தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஹரிதா ஷேக் முகமது மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்து –  அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்பட்டு சரி செய்யப்படும் என வடவள்ளி காவல் ஆய்வாளர்  லெனின் அப்பாதுரை உறுதி அளித்தார்.

மேலும் கல்லூரி சார்பில் நடத்தப்படும் விசாரணை குழுவில் மாணவர்கள் சார்பாக மாணவர் பிரதிநிதி நிச்சியம் இடம் பெறுவார் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் பிற்காலத்தில் எடுக்கப்பட மாட்டாது என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து நாளை காலை வழக்கம் போல் கல்லூரி இயங்கும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்                       

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore law students protests

Best of Express