கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு எட்டிமடைப்பிரிவு போலாம்பட்டி காப்பு காட்டிற்கு உட்பட்ட அட்டமலை சரக பகுதியில் நேற்று மாலை, வன களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது காப்புகாட்டில் இருந்து 30 மீட்டர் தொலையில் சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது கண்டறியபட்டது.
பின்னர், இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட வன அலுவலர், உதவி வன பாதுகாவலர், வன கால்நடை மருத்துவர், மட்டத்துகாடு கிராம வனக்குழு தலைவர் மற்றும் வன பணியாளர்கள் இன்று பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர், சிறுத்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அந்த பெண் சிறுத்தைக்கு மற்ற விலங்குகளுடன் சண்டையிட்டு காயப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாகவும், மோதல் காரணமாக உயிரிழந்திருக்க கூடும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil