Coimbatore lockdown Bakery leaves breads to the needy
Coimbatore lockdown Bakery leaves breads to the needy : கொரோனா வைரஸ் தீவிரமாக பரப்பி வருகின்ற நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் ஆதரவற்றவர்கள் மற்றும் தெருவில் வசிப்பவர்கள் சரியான உணவின்றி கஷ்டப்படுகின்றனர். பணம் இருக்கும் மக்களும் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வீடுகளில் 21 நாட்களுக்கு வாங்கி வைத்துக் கொண்டதால், கடைகளிலும் போதுமான உணவு மற்றும் உணவுபொருட்கள் பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நெல்லை முத்து விலாஸ் சுவீட்ஸ் அண்ட் பேக்ஸ் என்ற கடையை நடத்தி வருகிறார். அங்கு மக்கள் பசியால் வாடக் கூடாது என்பதற்காக தினமும் 100 முதல் 150 பாக்கெட் ரொட்டியைத் தயார் செய்து கடையின் முன்னால் வைத்து விட்டு சென்று விடுகின்றார்.
Advertisment
Advertisements
அந்த கடையின் முகப்பில் ஒரு பாக்கெட் ரொட்டியின் விலை ரூ.30 என்றும், அதை அருகில் இருக்கும் பெட்டியில் போட்டு விட்டுச் செல்லவும் என்றும் எழுதியுள்ளார். மக்கள் தங்களின் பசிக்காக உணவு தேடி வரும்போது இந்த ரொட்டியைத் எடுத்துக்கொண்டு, அருகிலேயே பணத்தையும் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இந்நிகழ்வு வட்டாரத்தில் உள்ள அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.