/tamil-ie/media/media_files/uploads/2018/06/periyar-university...................jpg)
மதுரையில் 144 தடை உத்தரவு:
மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Feb 04, 2025 00:01 IST
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லை: பெரியார் பல்கலை விளக்கம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 3 ஆண்டுகள் இளநிலை கல்வி, அதனை தொடர்ந்து 2 ஆண்டுகள் முதுநிலை கல்வி முடித்தவர்கள் மட்டுமே PhD படிப்புக்கு தகுதியானவர்கள். 4 ஆண்டுகள் இளநிலை கல்வி படித்தாலே புதிய கல்வி கொள்கைப்படி PhD படிப்பில் சேரலாம் என வெளியான தகவலில் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளது,
-
Feb 03, 2025 20:58 IST
வட மாநில வாலிபரிடம் பணம் பறித்து காதலிக்கு அனுப்பிய வாலிபர் கைது
கோவையில் வட மாநில இளைஞர்களிடம் ஜிபேவில் பணம் பறித்து, அதை தனது காதலிக்கு அனுப்பிய வாலிபர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Feb 03, 2025 19:40 IST
தி.மு.க - நாம் தமிழர் நேரடி மோதல்: ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் முடிவு
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நாளை மறுநாள் (பிப் 5) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 43 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
-
Feb 03, 2025 18:18 IST
இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்துள்ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவும், வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
-
Feb 03, 2025 16:48 IST
கேரளா மருத்துவ கழிவுகள் விவகாரம்
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டுவந்து தமிழ்நாட்டில் கொட்டுவது தீவிரமான குற்றமாகும்; இதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
Feb 03, 2025 16:31 IST
மண்டபம் மீனவர்களுக்கு காவல்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு, பிப்.17 வரை காவல் அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை வவுனியா சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது.
-
Feb 03, 2025 16:09 IST
வேலூர், நெய்வேலிக்கு விரைவில் விமான சேவை தொடங்கும்
வேலூர் மற்றும் நெய்வேலிக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என ஒன்றிய அரசு தகவல். மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய விமான போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் பதில் அளித்துள்ளார்.
-
Feb 03, 2025 16:08 IST
"உயர் கல்வித்துறை ஆலோசனைக்குப் பின் நல்ல பதில் வரும்"
பெரியார் பல்கலை. முனைவர் படிப்பிற்கான அறிவிக்கையில் புதிய கல்விக் கொள்கை அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பதில் அளித்துள்ளார்.
-
Feb 03, 2025 15:24 IST
நெல்லை மருத்துவக் கழிவு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொட்ட பயன்படுத்திய லாரியை நெல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
-
Feb 03, 2025 13:25 IST
கையேந்தச் செய்யவே தமிழ்ப் புதல்வன் திட்டம் - சீமான்
திராவிட பிள்ளைகளை கையேந்தச் செய்யவே தமிழ்ப் புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுநர் நியமிக்கும் துணைவேந்தர்களுக்கு அவரே ஊதியம் தரட்டும் என அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
-
Feb 03, 2025 12:56 IST
தூத்துக்குடி - விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை அண்டாவில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் - காஞ்சனாதேவியின் இரண்டு வயது மகள் சபீனா பானு என்ற குழந்தை அண்டா-வில் நிரம்பியிருந்த தண்ணீரில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அண்டா தண்ணீரில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து குழந்தையை காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது அண்டா தண்ணீரில் கிடந்த குழந்தையை மீட்டு பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
-
Feb 03, 2025 12:40 IST
மருத்துவ கழிவு - அதிரடி உத்தரவு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து, நெல்லை போலீசார் பறிமுதல் செய்த லாரியை திரும்ப ஒப்படைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது இதுபோல மருத்துவக் கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Feb 03, 2025 12:19 IST
பெரியார் பல்கலை.யில் புதிய கல்வி கொள்கையா?
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை புகுத்த சேலம் பெரியார் பல்கலை. முயற்சி செய்கிறது. முனைவர் பட்ட படிப்புக்கான கையேட்டில் புதிய கல்வி கொள்கையை மறைமுகமாக அமல்படுத்த முயற்சி என புகார் 4 ஆண்டுகள் இளநிலை படித்திருந்தாலும் பி எச் டி-க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டதாக இந்திய மாணவர் சங்கம் புகார் அளித்துள்ளது.
-
Feb 03, 2025 12:06 IST
இந்து முன்னணி வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
திருப்பரங்குன்றம் கோவில் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றக்கிஸ்ஹே மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவாக தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
-
Feb 03, 2025 11:25 IST
வேங்கைவயல் வழக்கு - நீதிமன்றம் மாற்றம்
வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ஏற்கப்பட்டு, வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலிருந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வன்கொடுமை வழக்கு இல்லை என்பதால் வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிசிஐடி ஏற்கனவே மனு கொடுத்துள்ளது.
-
Feb 03, 2025 11:03 IST
போதை மாத்திரைகள் விற்பனை செய்துவந்த மூன்று இளைஞர்கள் கைது.
கோவை காந்தி நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துவந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்திரைகள், மருந்து ஊசிகள், பணம் ஆகியவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான சியாம் பெட்ரின் (22), சதீஷ் (24) மற்றும் தினகரன் (22) மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இருந்து கொரியர் மூலமாக ஒரு மாத்திரை ₹25க்கு வாங்கி, இங்கே ₹300க்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்று தகவல்.
-
Feb 03, 2025 10:42 IST
"திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு சொந்தமானது": எச். ராஜா
திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு சொந்தமானது என பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் வாருங்கள் என அழைத்தால் கைது செய்வீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சிக்கந்தர் என்பவர் கோயிலை இடிக்கச் சென்றதால் தான் அவரை முருக பக்தர்கள் தாக்கினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 03, 2025 08:58 IST
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று காலை 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 03, 2025 08:19 IST
மன்னார்குடியில் என்.ஐ.ஏ சோதனை
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பாபா பக்ரூதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்க உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டும் இவரது வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Feb 03, 2025 07:24 IST
144 தடை உத்தரவு
மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 4-ஆம் தேதி இந்து முன்னணி, ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.