/indian-express-tamil/media/media_files/2025/01/28/klhJac2Reld2mPkHckQi.jpg)
கீழக்கரை அரங்கத்தில் ஜல்லிக்கட்டு:
மதுரை மாவட்டம், கீழக்கரை நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
-
Feb 16, 2025 18:52 IST
சாகச சுற்றுலாவை ஊக்கப்படுத்த கொல்லிமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு
சாகச சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்காக பூண்டி, கொல்லிமலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இயற்கையை சார்ந்த இடங்களும், கோயில்களும், கடல்களும் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகம் வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் சாகச சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தமிழக சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் சாகச சுற்றுலாவை அமைப்பதற்காக 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
Feb 16, 2025 15:38 IST
சங்கரன்கோவில் பூ மார்கெட்டில் கேந்தி பூக்களின் விலை வீழ்ச்சி
தென்காசி சங்கரன்கோவில் பூ மார்கெட்டில் கேந்தி பூக்களின் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ60க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ10 ஆக குறைந்துள்ளது
-
Feb 16, 2025 14:39 IST
திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருப்பு
ஞாயிறு விடுமுறை நாளில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
Feb 16, 2025 12:31 IST
நாமக்கலில் மாணவருக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியருக்கு குண்டாஸ் சட்டம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே தனியார் பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பான வழக்கில், சிறையில் இருக்கும் ஆசிரியர் பிரகாஷ் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது
-
Feb 16, 2025 11:55 IST
ராமேஸ்வரத்தில் தி.மு.க ஆர்ப்பாட்டம்
மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தி.மு.க-வினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை தாங்கினார்.
-
Feb 16, 2025 11:38 IST
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அகற்றப்படாது - கே.என். நேரு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஒருபோதும் அகற்றப்படாது என அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், திருச்சி பறவைகள் பூங்கா கட்டண குறைப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Feb 16, 2025 09:50 IST
கார் விபத்தில் சிக்கிய யோகி பாபு
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்பு மீது ஏறி விபத்து ஏற்பட்டது. இதில் எந்த காயங்களும் இன்றி நடிகர் யோகி பாபு உயிர் தப்பினார்.
-
Feb 16, 2025 09:36 IST
கீழக்கரை அரங்கத்தில் ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம், கீழக்கரை நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில், 1020 மாடுகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.