Coimbatore, Madurai, Trichy News: வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 காற்றழுத்த தாழ்வு பகுதி

Tamil news updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Tamil news updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
low depression2

வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிறது 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93-க்கும், டீசல் 92.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Sep 21, 2025 17:48 IST

    9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது

    நெல்லை மேலப்பாளையத்தில் மாணவிகள் விடுதியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். வார்டன் அபுபக்கர் பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் பெண் வார்டன் வகிதாவிடம் கூறியுள்ளனர். அபுபக்கர் பாலியல் தொல்லை தந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார் வார்டன் வகிதா. மாணவியின் பெற்றோர் தந்த புகாரை அடுத்து வார்டன்கள் அபூபக்கர், வகிதாவை போலீஸ் கைது செய்தது.



  • Sep 21, 2025 16:44 IST

    தூத்துக்குடி: ஒரே நாளில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 105 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று மேற்சொன்னவாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



  • Advertisment
    Advertisements
  • Sep 21, 2025 16:39 IST

    அடுத்தடுத்து உருவாகிறது 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 25-ம் தேதி வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Sep 21, 2025 16:38 IST

    சாத்தனூர் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    சாத்தனூர் அணை நிரம்பி வருவதை அடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி எல்லை பகுதியான பாகூர் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

     



  • Sep 21, 2025 16:37 IST

    இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

    சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     



  • Sep 21, 2025 13:59 IST

    27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் செப்.27 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 - 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Sep 21, 2025 13:13 IST

    திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

    மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் உள்வாங்கியது. கடல் சுமார் 50 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

     



  • Sep 21, 2025 12:36 IST

    8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தென்காசி, கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் காரைக்காலில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பிற்பகல் 2 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம்  தெரிவித்துள்ளது.



  • Sep 21, 2025 12:36 IST

    தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

    நாகை, புத்தூரில் விஜய் பிரசாரத்தின்போது தவெக தொண்டர்கள் ஏறி நின்றதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பொதுசொத்துக்கு சேதம் விளைவித்ததாக நாகை தவெக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • Sep 21, 2025 12:34 IST

    இன்று சூரிய கிரகணம் - இந்தியாவில் தெரியாது

    நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று இரவு நடக்கும் நிலையில் இந்தியாவில் தென்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10.59 மணிக்கு தொடங்கி, அதிகாலை 3.23 மணிக்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Sep 21, 2025 11:10 IST

    தடையை மீறி நடக்கும் ஹைட்ரோகார்பன் பணிகள்

    மாநில அரசின் தடையை மீறி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பணிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. பெரியகுடி, திருவாரூர், அன்னவாசநல்லூரில் தடையை மீறி ஹைட்ரோகார்பன் எடுப்பதாக குற்றச்சாட்டு.



  • Sep 21, 2025 11:04 IST

    எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு ஏன்?


    ஓ. பன்னீர் செல்வம், சசிகலா, டி.டி.வி.  தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்.



  • Sep 21, 2025 10:48 IST

    இபிஎஸ் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு

    சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநித் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பழனிசாமி சந்தித்துவிட்டு வந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்திப்பு



  • Sep 21, 2025 09:58 IST

    நாகையில் சுற்றுச்சுவர் இடிந்து சம்பவம் - த.வெ.க நிர்வாகிகள் மீது வழக்கு

    நாகை, புத்தூரில் விஜய் பிரசாரத்தின்போது தவெக தொண்டர்கள் ஏறி நின்றதால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தாக நாகை தவெக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு.



Tamilnadu Latest News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: