Advertisment

Coimbatore, Madurai, Trichy updates: அவனியாபுரத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
avaniyapuram

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றைய தினம் போகி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். பொங்கலை கொண்டாடும் விதமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.

  • Jan 14, 2025 00:42 IST

    ஊத்துக்குளி பேரூராட்சியில் பொங்கல் கொண்டாட்டம்!

    பொள்ளாச்சி அடுத்த ஜமீன் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில்  தூய்மைப் பணியாளர்கள் நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். பேரூராட்சித் தலைவர் சையது அபுதாஹிர், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து நடனம் ஆடினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.



  • Jan 13, 2025 19:15 IST

    ஸ்ரீரங்கத்தில் பா.ஜ.க-வினர் கைது

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் அதிகார துஷ்பிரயோகம் என குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க-வினரை போலீசார் கைது செய்தனர். 



  • Advertisment
  • Jan 13, 2025 19:08 IST

    தஞ்சையில் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா

    தஞ்சாவூர் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் நாஞ்சிக்கோட்டை கிராம மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடினர். மாட்டு வண்டியில் அழைத்து வரப்பட்டு, மாலை அணிவித்து, பொங்கல் வைத்து, கும்மி, கரகாட்டம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர்.



  • Jan 13, 2025 17:53 IST

    சிறந்த வீரருக்கு கார், சிறந்த காளைக்கு டிராக்டர் 

    நாளை நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக அளிக்கப்பட உள்ளது. சிறந்த காளைக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக வழங்கப்பட உள்ளது. 



  • Advertisment
    Advertisement
  • Jan 13, 2025 17:51 IST

    கோவையில் நவீன மீன் அங்காடி

    கோவை உக்கடம் அருகே புல்லுக்காடு பகுதியில் கோவை மாவட்ட சில்லறை மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார் 



  • Jan 13, 2025 17:50 IST

    நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழா

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 



  • Jan 13, 2025 17:49 IST

    அவனியாபுரத்தில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு

    நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். 



  • Jan 13, 2025 17:04 IST

    யு.ஜி.சி வரைவு, ஆளுநருக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் 

    மத்திய அரசின் சார்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யு.ஜி.சி வரைவு அறிக்கையை ரத்து செய்யவும், தமிழ்நாடு வாக்காளர்கள் தேர்வு செய்த சட்டமன்றத்தை அவமதித்துச் சென்ற ஆளுநர் ஆர் என் ரவி கிண்டி மாளிகை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



  • Jan 13, 2025 16:24 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திங்கள்கிழமை 9 பேர் வேட்புமனுத் தாக்கல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய 2-ம் நாளில் 9 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ராஜசேகர், நூர் முகமது, தனஞ்செயன், இசக்கிமுத்து, ஆனந்தன், பானை மணி உள்ளிட்டோர் இன்று மனுத் தாக்கல் செய்தனர். முதல் நாளீல் 3 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். 



  • Jan 13, 2025 14:53 IST

    ஸ்டாலின் சார்பாக கார் பரிசு

    மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக ரூ. 8.50 லட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.



  • Jan 13, 2025 13:27 IST

    தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    ஜனவரி 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதிவரை தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jan 13, 2025 12:32 IST

    ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதிகட்ட பணிகள் தீவிரம்

    2,035 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றனர்

    மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாடுகளை பிடிக்க அனுமதி இல்லை என கட்டுப்பாடு. போலி டோக்கன்களை பயன்படுத்தி நுழைய முயற்சிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    வாடிவாசலுக்கு முன்பு தேங்காய் நார்கள் கொட்டுவது, தண்ணீர் தொட்டி வைப்பது, சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.



  • Jan 13, 2025 11:25 IST

    பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா கைது

    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  எம்.எஸ்.ஷாவுக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மீதும் போக்சோ வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி சொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



  • Jan 13, 2025 10:49 IST

    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோ வழக்குப்பதிவு! 

    மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல்ொல்லை கொடுத்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. தலைமறைவாக உள்ள ஷாவுக்கு போலீசார் வலைவீச்சு. 



  • Jan 13, 2025 10:46 IST

    குமரி மீனவர்கள் 10 பேர் கைது

    டிக்கோகார்சியா தீவு அருகே கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை கைது செய்தது. பிரிட்டிஷ் கடற்படை கைதான 10 மீனவர்களும் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தகவல். ஆழ்கடலில் தங்கு கடல் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் கைது. மீனவர்கள் கைது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே, 2 முறை எல்லை தாண்டியதாக இதே படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்.



  • Jan 13, 2025 09:56 IST

    ரூ.21 லட்சம் மோசடி - தம்பதி கைது

    கள்ளக்குறிச்சி, இருந்தை கிராமத்தில் பலர் பெயரில் வங்கியில் கடன் வாங்கி ரூ.21 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவணைத் தொகை கட்டாததால் வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்ததை அடுத்து 25 நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட அண்ணாமலை சுகந்தி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Jan 13, 2025 09:16 IST

    திருச்செந்தூர் கடற்கரையில் கிடைக்கும் சிற்பங்கள்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடலில், சமீப காலமாக கடல் சீற்றம், கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் இருந்து பல்வேறு விதமான வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வருகின்றன. இதனை தொல்லியல் துறை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



  • Jan 13, 2025 09:15 IST

    நடராஜருக்கு சீர்வரிசையுடன் படையலிட்ட மீனவர்கள்

    சிதம்பரம் பருவதராஜா குல மீனவர் சங்கத்தினர் நடராஜரை மருமகனாக கருதி மேளதாளங்கள் முழங்க மா, பலா, வாழை, ஆப்பிள், மாதுளை அடங்கிய சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்று தேரில் எழுந்தருளிய நடராஜருக்கு படையலிட்டனர். இதே போல மீனவர் குலத்தில் பிறந்த மகளாக கருதப்படும் சிவகாமசுந்தரிக்கும் சீர்வரிசை எடுத்துச் சென்று கொடுத்து வழிபட்டனர். 



  • Jan 13, 2025 09:15 IST

    மது அருந்தினால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை

    அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுயில் காளை மாடுகள் உடன் வரும் இருவரும் மது அருந்தி விட்டு வந்தால் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 



  • Jan 13, 2025 09:13 IST

    நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

    நெல்லையப்பர் கோயில் தாமிர சபையில் நடராஜமூர்த்தியின் ஆருத்ரா தரிசனம் மற்றும் திரு நடனக் காட்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



Tamil News Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment