/indian-express-tamil/media/media_files/Rs48vVtdRRRJKqogdwn4.jpg)
முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் பயணம்:
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்கிறார்.
அணைகளின் நிலவரம்:
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 403 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 110.98 அடியாகவும், நீர் இருப்பு 79.807 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. மேலும், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 4000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
Jan 27, 2025 20:21 IST
கோவையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை: சேகர்பாபு தகவல்
கோவை மருதமலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைய உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.160 அடி உயரத்துக்கு கல்லால் ஆன முருகன் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பாக விரைவில் வல்லுநர் குழு ஆய்வு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
Jan 27, 2025 18:34 IST
விமானத்தில் இயந்திர கோளாறு - பயணிகள் அவதி
மதுரையிலிருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இயந்திர கோளாறு காரணமாக புறப்பட தாமதம் ஏற்பட்டது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்
-
Jan 27, 2025 18:26 IST
வேலூர் இப்ராஹிம் கைது
பா.ஜ.க தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்த வேலூர் இப்ராஹிமை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
-
Jan 27, 2025 17:53 IST
ஸ்ரீரங்கத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால்
ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மா நகர், அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச் சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் பகுதி, சன்னதிவீதி, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கர் நகர், பஞ்சக்கரைரோடு, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டீ.நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழ கொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் நாளை (28.01.2025) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார். -
Jan 27, 2025 17:42 IST
திருச்சி ஏர்போர்ட்டில் 50 ஆயிரம் சிகரெட்டுகள் பறிமுதல்
சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.7.82 லட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Jan 27, 2025 17:17 IST
தஞ்சை பா.ஜ.க கூட்டத்தில் அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் கட்சியினர் வாக்குவாதம்
தஞ்சாவூரில் நடந்த பாஜக உட்கட்சி கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் பதவிக்கு ஜெய் சதீஷ் என்பவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பட்டியலில் பெயரே இல்லாத ஒருவரை எப்படி அறிவிக்கலாம்? என கூட்டத்தில் இருந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்
-
Jan 27, 2025 16:14 IST
பரமக்குடியில் ‘நம்மவர் படிப்பகம் - கமல் ஹாசன் நெகிழ்ச்சி
கமல் பண்பாட்டு மையம் மற்றும் வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம் இணைந்து பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் டிஜிட்டல் நூலகத்துடன் கூடிய ‘நம்மவர் படிப்பகம்’ திறந்து வைத்துள்ளனர். நாளைய தலைவர்கள் இந்த படிப்பகத்தில் இருந்து பயின்று வந்தால் நாங்கள் பெருமைப்படுவோம் என்று கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு நிகழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
Jan 27, 2025 14:58 IST
பல்லடம் அருகே நீரில் மூழ்கி தாய் - 2 மகள்கள் உயிரிழப்பு
ருப்பூர், பல்லடம் அருகே செயல்படாத கல்குவாரியில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். துணி துவைக்க சென்ற போது நீரில் மூழ்கி தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்தனர். உடலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Jan 27, 2025 14:52 IST
பழனி முருகன் கோயில் தேர் வெள்ளோட்டம் - தொடங்கிவைத்த அமைச்சர்கள்
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலின் புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியை அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ரூ.47 லட்சம் செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
-
Jan 27, 2025 14:48 IST
பழனி கோயிலில் 3 நாட்களுக்கு இலவச தரிசனம் - அமைச்சர் சேகர் பாபு
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3 நாட்களுக்கு சிறப்புக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது; தைப்பூச நாள் மற்றும் அதற்கு அடுத்த 2 நாட்களுக்கு சிறப்பு கட்டணம் ரத்து செயய்ப்பட்டு, இலவசமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
-
Jan 27, 2025 14:41 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - பண மாலையுடன் வந்த சுயேட்சை வேட்பாளர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும் எனக் கூறி, சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் என்பவர் தலைமைச் செயலகத்திற்கு பண மாலையுடன் வந்துள்ளார்.
-
Jan 27, 2025 14:39 IST
திருப்பூரில் கல்குவாரி நீரில் மூழ்கி தாய், 2 மகள்கள் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்தனர். வேம்பாலையத்தில் உள்ள செயல்படாத கல்குவாரியில் துணி துவைக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உடலை மீட்கும் பணியில் பல்லடம் தீயணைப்பு துறை மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
Jan 27, 2025 14:10 IST
4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
வரும் 30, 31ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Jan 27, 2025 13:49 IST
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
காரைக்குடி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அரியக்குடி, இலுப்பக்குடி, சங்கராபுரம் உள்ளிட்ட கிராமத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
100 நாள் வேலை திட்டம் பறிபோவதாக குற்றச்சாட்டு வைத்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jan 27, 2025 13:12 IST
வேங்கைவயல் வழக்கு - சி.பி.சி.ஐ.டி மனு தாக்கல்
வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக, குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள 3 பேரின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, "வேங்கைவயல் வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்" என்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி மனு தாக்கல் செய்துள்ளது.
-
Jan 27, 2025 13:11 IST
ராமேஸ்வரத்தில் இன்று வேலை நிறுத்தம்
மீனவர்கள் கைதை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள ராமேஸ்வர மீனவர்கள் வரும் வெள்ளி கிழமை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராமேஸ்வரம் மீன்படி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300 பேரின் விசைப்படகில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகள், மீனவர்களின் வலைகள் மற்றும் 33 மீனவர்களை சிறைபிடித்தனர்.
-
Jan 27, 2025 11:07 IST
பாலியல் தொல்லை வழக்கில் முதியவர் கைது
விருதுநகர் மாவட்டத்தில், வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்வராஜ் என்ற முதியவர் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
-
Jan 27, 2025 10:41 IST
பூத் சிலிப் வழங்கும் பணி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கியது. அதன்படி, அங்கன்வாடி பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்குகின்றனர்.
-
Jan 27, 2025 09:27 IST
பைக் ரேஸில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். அதன்படி, மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவர் அதிவேகமாக பைக்கில் சென்றத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது.
-
Jan 27, 2025 09:22 IST
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில், சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவத்தின் கால் மற்றும் சிறுவர் விளையாட பயன்படுத்திய சிறிய மண் குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
Jan 27, 2025 09:20 IST
விழுப்புரம் செல்லும் ஸ்டாலின்
2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கிறார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.