/indian-express-tamil/media/media_files/M6y5jSoLv0KQojO8b402.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 07, 2025 17:57 IST
கோயிலுக்கு வந்த இடத்தில் தீப்பிடித்து எரிந்த கார்
சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்த இடத்தில் தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது
- Sep 07, 2025 16:55 IST
இ.பி.எஸ்-க்கு செங்கோட்டையன் கெடு விதிக்க முடியாது - தளவாய் சுந்தரம்
எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதிக்க முடியாது. பொது வெளியில் பதவி வேண்டாம் எனக் கூறும் ஓ.பி.எஸ், மோடிதான் தனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததாக கூறுகிறார். 10 நாள் காலக்கெடு என்று சொன்னால் பொதுச்செயலாளர் என்ன செய்ய முடியும்? செங்கோட்டையனுக்கு பின்னால் அ.தி.மு.க இரத்தம் என்று யார் கூறுகிறார்களோ அவர்கள் தான் இருக்கின்றனர் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்
- Sep 07, 2025 16:53 IST
ஆவணி மாத பௌர்ணமி - திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டுவருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்
- Sep 07, 2025 16:16 IST
திருச்செந்தூர் கோயில் கண்காணிப்பாளர் - காவலர் இடையே மோதல்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மோதல் திருச்செந்தூர் கோயில் கண்காணிப்பாளர், காவலர் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மூத்த குடிமக்கள் வரிசையில் தனது உறவினர்களை காவலர் அனுப்பியதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது
- Sep 07, 2025 15:51 IST
திருச்செந்தூர்: 4 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வழிகளில் மதியம் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- Sep 07, 2025 15:46 IST
குமரி: மக்களை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட பலரை தெருநாய்கள் விரட்டி விரட்டி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலை 7:30 மணியளவில் சுந்தர் என்பவரின் மனைவி-மகன் கடையிலிருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். கடைக்கு பொருட்கள் வாங்க வந்த மேலும் இருவரை அந்த நாய் கடித்துள்ளது. காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தெருநாய்களை உடனடியாகப் பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- Sep 07, 2025 15:03 IST
இன்றிரவு வேளாங்கண்ணி மாதா தேர் பவனி விழா
வேளாங்கண்ணி மாதாவின் பெரிய தேர் பவனியில் பங்கேற்க திரளான பக்தர்கள் காத்திருக்கின்றனர். கடந்த மாதம் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
- Sep 07, 2025 15:00 IST
திருத்தணி முருகன் கோயில் இன்று திறந்திருக்கும்
திருத்தணி முருகன் கோவில் இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில், முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. இந்த திருக்கோவிலில் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் திறந்திருக்கும் என்றும், இரவு எப்போதும் போல் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- Sep 07, 2025 14:23 IST
திருச்சி: வீடு இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சோகம்
திருச்சி சத்தியமூர்த்தி நகரில், 11 வயது சிறுமி கார்த்திகா தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட சிறுமியின் உறவினர் கொளஞ்சியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Sep 07, 2025 13:35 IST
சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயிவிலில் நடை அடைப்பு
இன்று முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இரவு 9:56 க்கு துவங்கி 1:26 வரை சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. கிரகண நேரங்களில் கோயில்களை மூடிவிடுவது வழக்கம். இந்த நிலையில், சந்திர கிரகணத்தையொட்டி, உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் நடை அடைக்கப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- Sep 07, 2025 13:12 IST
த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரம்
த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது. 13ம் தேதி திருச்சி சத்திரம் பகுதியில் தொடங்கி அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளிலும் பிரசார பயணத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார். `தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
- Sep 07, 2025 13:11 IST
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
- Sep 07, 2025 13:10 IST
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்டநெரிசல்
திருவண்ணாமலையில் கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆவணி மாதம் பௌர்ணமியானது இன்று அதிகாலை 1.46 மணிக்கு தொடங்கியுள்ளது. விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை மார்க்கமாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வந்தடைந்தவுடன் ரயில் ஏறுவதற்காக காத்திருந்த மக்கள் ஒவ்வொருவரும் முண்டியடித்து செல்ல்கின்றனர். இதனால் ரயில் இருந்து இறங்க கூடிய மக்களும் இறங்க முடியாமல் தவிக்கின்றனர்.
- Sep 07, 2025 11:39 IST
24 மணி நேரமும் மதுவிற்பனை என புகார்
கரூரில் டாஸ்மாக மதுபாரில் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர், மது விற்பனையைக் கண்டித்து முழக்கம். டாஸ்மாக் மதுபான பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
- Sep 07, 2025 11:04 IST
திருச்செந்தூர் கோவிலில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவில் நடை பிற்பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 07, 2025 10:26 IST
பௌர்ணமியை முன்னிட்டு தி.மலையில் போக்குவரத்து நெரிசல்
திருவண்ணாமலையில் பௌர்ணமி தினமான இன்று ஆட்டோ ஓட்டுனர்களால் போக்குவரத்து நெரிசலில் பக்தர்கள் சிக்கி தவித்தனர். சன்னதி தெரு, தாளகிரி ஐயர் தெரு, கோபால் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பக்தர்களை ஆங்காங்கே இறக்கிவிட்டு, ஏற்றிச் செல்வதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
- Sep 07, 2025 09:50 IST
400 கிலோ குட்கா கடத்தில் ஈடுபட்ட வட மாநில இளைஞர் கைது!
வேலூர் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையின்போது ஆந்திராவில் காரில் கடத்திவரப்பட்ட சுமார் 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் பாவாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
- Sep 07, 2025 09:24 IST
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை, சேலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Sep 07, 2025 09:15 IST
வாணியம்பாடியில் அதிகாலை திடீர் தீவிபத்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசம். மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.