Coimbatore, Madurai, Trichy News updates: மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு: மேயரின் கனவர் பொன்வசந்த்தின் ஜாமின் மனு தள்ளுபடி

Coimbatore, Madurai, Trichy News: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mayor husband Madurai HC

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Sep 16, 2025 20:46 IST

    செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இல்லத்தில்
    தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்தது.



  • Sep 16, 2025 20:20 IST

    வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய மாணவர்களிடம் போலீஸ் விசாரணை

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய மாணவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கதவு ஜன்னலைத் தட்டி ரகளையில் ஈடுபட்டது குறித்து கேட்ட ஆசிரியரை பிளஸ் 2 மாணவர்கள் தாக்கி உள்ளனர். வகுப்பறையி உள்ள மின்விசிறி விளக்குகளை உடைத்து மாணவர்கள் சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பயிற்சி ஆசிரியர்கள் மணிகண்டன், ஸ்ரீநிதி அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Advertisment
    Advertisements
  • Sep 16, 2025 19:18 IST

    மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கு: மேயரின் கனவர் பொன்வசந்த்தின் ஜாமின் மனு தள்ளுபடி

    மதுரை மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவர் பொன்வசந்த்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு  உத்தரவிட்டுள்ளது.



  • Sep 16, 2025 18:46 IST

    ஆம்பூர் வழக்கில் 4 பேரின் தண்டனை நிறுத்தம்

    ஆம்பூர் கலவர வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தலா 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஃபயாஸ் அகமது உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனு Live மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேரின் மனுவுக்கு நவ. 24ம் தேதிக்குள் பதிலளிக்க ஆம்பூர் நகர போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



  • Sep 16, 2025 18:31 IST

    ”கடைசியில் பிங்க் பேருந்து தான் ஜெயிக்கும்”

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் த.வெ.க தலைவர் விஜயை துணை முதலமைச்சர் உதயநிதி மறைமுகமாக விமர்சித்து உள்ளார். ஒருவர் பச்சை கலர் பேருந்தில் செல்கிறார், மற்றொருவர் மஞ்சள் கலர் பேருந்தில் செல்கிறார் என்றும் கடைசியில் விடியல் பயணத் திட்டத்தில் மகளிரை பயணம் செய்யும் பிங்க் பேருந்துதான் எல்லோரையும் ஓவர்டேக் செய்யும் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.



  • Sep 16, 2025 18:30 IST

    நாகையில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி

    நாகையில் வரும் 20-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள த.வெ.க தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 7 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், புத்தூர் ரவுண்டானா அருகே மட்டும் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



  • Sep 16, 2025 18:17 IST

    சேலம்: உதயநிதி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

    சேலத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர், எம்.பி, உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.



  • Sep 16, 2025 17:36 IST

    பேரீட்சம்பழத்தில் கஞ்சா - தாய் மீது வழக்குப்பதிவு

    பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தனது மகனுக்கு பேரீட்சையில் மறைத்து வைத்து கஞ்சா எடுத்து வந்த தாய். பேரீட்சையில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்து வந்த தாய் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 16, 2025 17:14 IST

    நிகிதாவிடம் 2-வது நாளாக சிபிஐ விசாரணை

    மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பில் சம்பந்தப்பட்ட நிகிதாவின் நகை திருட்டு வழக்கில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை. கோவில் ஊழியர்களிடம் 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை. 7 பேர் விசாரணை முடிந்து சென்ற நிலையில் 42 பேரை விசாரணைக்கு உட்படுத்த சிபிஐ திட்டமிட்டுள்ளனர்.



  • Sep 16, 2025 17:03 IST

    கரூரில் நாளை தி.மு.க. முப்பெரும் விழா

    பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா கரூர் அருகேயுள்ள கோடங்கிபட்டியில் நாளை (17.09.2025) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி வரவேற்று பேசுகிறார். அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.



  • Sep 16, 2025 17:02 IST

    சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் +4 பெட்டிகள்

    பயணிகளின் கோரிக்கையை ஏற்று 24-ந் தேதி முதல் மேலும் 4 பெட்டிகள், அதாவது 20 பெட்டிகளுடன் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனால், கூடுதலாக 312 பேர் பயணிக்க முடியும். இதன் மூலம் ஒரே நேரத்தில், 1,440 பயணிகள் வந்தே பாரத் ரெயிலில் செல்லலாம். இதில், 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் அடங்கும். மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.



  • Sep 16, 2025 16:35 IST

    பாமக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை

    செங்கல்பட்டு மாவட்டம், இளந்தோப்பு பகுதியில் பாமக பிரமுகர் வாசு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தனியார் நிறுவனங்களுக்கு கேட்டரிங் மற்றும் குடிநீர் விநியோகம் செய்துவந்த வாசு, தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



  • Sep 16, 2025 16:33 IST

    கார் ஓட்டுநரை தாக்கிய அரசுப் பேருந்து ஊழியர்கள்

    கடலூர் மாவட்டம், கல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஊழியர்கள், கர்ப்பிணியுடன் பயணித்துக் கொண்டிருந்த கார் ஓட்டுநர் ஒருவரைத் தாக்கினர். பேருந்து ஓட்டுநர் முறையாக இண்டிகேட்டர் பயன்படுத்தாமல் திடீரென பாதை மாறியதாகவும், அதை கேள்வி கேட்ட கார் ஓட்டுநரை தாக்கி, கர்ப்பிணி இருந்த அந்த காரின் கண்ணாடியை உடைத்ததாகவும் தெரிகிறது.

    தாக்குதலில் காயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.



  • Sep 16, 2025 16:32 IST

    சிவகிரி வார்டு மக்கள் பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம்

    தென்காசி: கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது சிவகிரி பேரூராட்சி ஆறாவது வார்டில் திமுகவை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் உலகேஸ்வரி வெற்றி பெற்றிருந்தார்; இதை மனதில் வைத்துக் கொண்டு, 4 வருடங்களாக அந்த வார்டிற்கு அடிப்படை வசதிகளேதும் செய்து தராமல் இழுத்தடிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வார்டு மக்கள், இதுதொடர்பாக பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.



  • Sep 16, 2025 16:02 IST

    உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    இ-மெயில் மூலம் மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மாணவ, மாணவிகளை கல்லூரியில் இருந்து வெளியேற்றி மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.



  • Sep 16, 2025 16:00 IST

    தவெகவினருக்கு தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை

    தூத்துக்குடியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ள நிலையில், தவெகவினருக்கு தூத்துக்குடி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஜய் தூத்துக்குடி வரும்போது, தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அனுமதி வழங்கப்படும் இடங்களில் தொண்டர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், திருச்சியில் நடந்தது போல் தேவையில்லாத முறையில் நடந்துகொண்டால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். பிரசாரம் நடத்தப்படும் இடங்களில் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 16, 2025 15:29 IST

    ஓசூர் ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டு: ஹரியானா கொள்ளையர்கள் கைது

    ஹரியானாவில் இருந்து வந்த 3 கொள்ளையர்கள் ஓசூர், அஞ்செட்டி பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் நூதனமான முறையில் பணத்தைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டனர். கொள்ளையர்கள், பணம் வெளியே வரும் இடத்தில் ஃபெவிகுயிக் பசையைத் தடவி, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



  • Sep 16, 2025 14:46 IST

    பா.ம.க-வினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் - சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    சேலத்தை சேர்ந்த இரு பாமக எம்.எல்.ஏக்கள் போட்டி போட்டு அரசை பாராட்டினார்கள். இருவரும் ஒரே மாதிரி பேசினார்கள். அவர்கள் எப்போதும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என உதயநிதி தெரிவித்தார். சேலத்தில் நடந்த அரசு விழாவில் அன்புமணி தரப்பு எம்.எல். ஏ சதாசிவம், ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் அருள் அரசை பாராட்டி பேசியதை சுட்டிக்காட்டி துணை முதலமைச்சர் உதயநிதி பேசினார்.



  • Sep 16, 2025 14:38 IST

    கடலூரில் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய மாணவர்களிடம் போலீசார் விசாரணை

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களை தாக்கிய மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கதவு, ஜன்னலைத் தட்டி ரகளையில் ஈடுபட்டது குறித்து கேட்ட ஆசிரியரை பண்ணிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தாக்கியுள்ளனர்.



  • Sep 16, 2025 13:51 IST

    தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

    ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



  • Sep 16, 2025 12:12 IST

    கூவத்தூரில் வாக்களித்துதான் எடப்பாடி முதல்வரானார்... தினகரன் விமர்சனம்!

    தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி முதல்வராகவில்லை கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததுதான் எடப்பாடி முதல்வரானார். நான்தான் முதல்வர் வேட்பாளர் என தெரிந்தால் கையெழுத்து போடமாட்டார்கள் என கூறியவர் பழனிசாமி. எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து போட்டபிறகு முதல்வர் வேட்பாளராக என்னை அறிவியுங்கள் என கூறினார் என்று தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.



  • Sep 16, 2025 11:56 IST

    திருச்சி மாணவி உயிரிழப்பு வழக்கு : திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

    திருச்சி பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12ம் வகுப்பு மாணவி மர்மமரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்து தலைமை ஆசிரியர் கொலை செய்ததாக மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மாணவி தாய் தொடர்ந்த வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. பதில் அளிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது.



  • Sep 16, 2025 10:38 IST

    ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி

    ரூ.12.86 கோடி வருமான வரி பாக்கி உள்ளதாக நோட்டீஸ் வந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார். ஏழ்மை நிலையில் உள்ள எனக்கு ரூ.12 கோடி வருமான வரி நோட்டீஸ் வந்திருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த கிளமென்ஸி (47) என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.



  • Sep 16, 2025 08:56 IST

    காரைக்குடியில் விஜய் பரப்புரை - தவெக மனு

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காரைக்குடியில் நவம்பர் 29ஆம் தேதி மக்களை சந்திக்கிறார். இதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி தவெக நிர்வாகிகள் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளனர். 



  • Sep 16, 2025 08:05 IST

    தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி,சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: