Coimbatore, Madurai, Trichy News Updates: தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக உருவாக்க அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - இ.பி.எஸ்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
EDAPPADI K PALANI SAMY ADMK coimbatore election campaign Tamil News

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.93-க்கும், டீசல் 92.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Sep 20, 2025 06:31 IST

    தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக உருவாக்க அ.தி.மு.க-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - இ.பி.எஸ்

    ராசிபுரம் பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு: “தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக உருவாக்க அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

     



  • Sep 19, 2025 18:12 IST

    இ.பி.எஸ் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயண தேதி மாற்றம்

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்திற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த பரப்புரை, அடுத்த மாதம் 4 மற்றும் 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது



  • Advertisment
    Advertisements
  • Sep 19, 2025 17:30 IST

    வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறை!

    ஊட்டி, கொடைக்கானல் போன்று வால்பாறையிலும் நவம்பர் 1 முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த, அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக வரும் டிசம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஜி., ஐ.ஜி.எம்., குழு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.



  • Sep 19, 2025 17:24 IST

    திருக்கழிப்பாலை ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

    கொள்ளிடம் ஆற்றில் பல தடுப்பணைகளை கட்டி விவசாயத்தையும் பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையும் தமிழக அரசு போக்க வேண்டும் என கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



  • Sep 19, 2025 17:21 IST

    11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.



  • Sep 19, 2025 17:17 IST

    தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

    சேலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் கடிக்கு 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், 200-க்கும் மேற்பட்ட தெருநாய்களைக் கூண்டு வைத்துப் பிடித்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டது.



  • Sep 19, 2025 16:54 IST

    நாளை மின் தடை இல்லை!

    விஜய் பரப்புரை செய்யும் நாளில் மின் தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மின் பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. நாளை மின் தடை இல்லை என வாரியம் அறிவித்துள்ளது.



  • Sep 19, 2025 16:25 IST

    ஆசிரியர் மீது வழக்கு பதிவு!

    புதுக்கோட்டை கீர எம்பலில் 3ஆம் வகுப்பு மாணவரை தாக்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



  • Sep 19, 2025 15:30 IST

    நாகை வந்தது விஜயின் பிரச்சார வாகனம்

    விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள கேரவன் வாகனத்தை, ஆர்வத்துடன் பார்த்து செல்லும் தவெக தொண்டர்கள். நாகை தனியார் மண்டபம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கேரவன் வாகனம் முன்பு செல்பி எடுத்துக் கொள்ளும் தவெக தொண்டர்கள். 



  • Sep 19, 2025 14:50 IST

    சிலையை மறைத்த பேனர் - டிவிகே விஜய் பேனரால் சர்ச்சை

    நாகையில் நாளை தவெக தலைவர் விஜய் உரையாற்ற உள்ள புத்தூர் அண்ணாசிலை பகுதியில், தந்தை பெரியார் சிலையை மறைத்தபடி வைக்கப்பட்ட பேனர். தவெக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாரின் சிலையை மறைத்து பேனர் வைத்துள்ளாதால் விமர்சனம் எழுந்துள்ளது.



  • Sep 19, 2025 14:49 IST

    தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

    எடப்பாடி பகுதியில் சுற்றித்திரியும் 200க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம். கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரியும் நாய்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.



  • Sep 19, 2025 14:18 IST

    வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர்

    வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலு நாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலு நாச்சியாரின் வரலாறு இந்த மண் யாருக்கும் தலைகுனியாது என்பதை உரக்கச் சொல்லும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Sep 19, 2025 13:50 IST

    விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் மாற்றம்... 20 நிபந்தனைகளுடன் அனுமதி!

    நாகையில் நாளை த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில் புத்தூர் அண்ணா சிலை அருகே பேச காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நாளை பகல் 12 மணியிலிருந்து 1 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி அளித்துள்ளதையடுத்து  20 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.



  • Sep 19, 2025 13:29 IST

    பொங்கலுக்கு தரமான பரிசு... எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!

    சேலம் மாவட்டம் வலசையூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல லட்சம் மதிப்பில் ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும். திருமண உதவி திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் தாய்மார்கள், சகோதரிகளுக்கு சேலை வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு தரமான பரிசு வழங்கப்படும் என்றார்.



  • Sep 19, 2025 11:59 IST

    ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம்

    புதுக்கோட்டை கீழஏம்பல் கிராமத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம். தலைமை ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த 3ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் அனுமதி; நாடோடி பழங்குடியின மாணவன் மீது தலைமை ஆசிரியர் தாக்குதல் என குற்றச்சாட்டு வைத்துள்ளனர். 



  • Sep 19, 2025 11:40 IST

    மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

    மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திய தனியார் நிறுவனம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.



  • Sep 19, 2025 11:37 IST

    விஜய் பரப்புரை இடம் மாற்றம்

    நாகையில் தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை செய்யும் இடம் மாற்றம்; புத்தூர் அண்ணா சிலை அருகே பேச காவல் துறை அனுமதி. பகல் 12.30 மணிக்குத் தொடங்கி அரை மணி நேரத்தில் பேசி முடிக்க வேண்டும்; வாகனத்தை யாரும் பின்தொடரக்கூடாது, மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது என நிபந்தனை வைத்துள்ளது காவல் துறை 



  • Sep 19, 2025 11:14 IST

    நத்தம் கருப்பூரில் நேற்றிரவு பெய்த மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

    கும்பகோணம் அருகே நத்தம் கருப்பூரில் நேற்றிரவு பெய்த மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாதே நெய்பயிர்கள் மழைநீரில் மூழ்க காரணம் என புகார் எழுந்துள்ளது.



  • Sep 19, 2025 11:03 IST

    எல்லை தாண்டிய 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது

    எல்லை தாண்டிய 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். தனுஷ்கோடி பகுதியில் 2 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.



  • Sep 19, 2025 09:13 IST

    அரசு மருத்துவமனை வளாகத்தை சூழ்ந்த வெள்ளம் - வாணியம்பாடியில் நோயாளிகள் கடும் அவதி

    தமிழகத்தில் ஆந்திரா கலோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் அரசு மருத்துவமனை வளாகம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது, இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், வாணியம்பாடி – பெரியபேட்டி இடையே தரைப்பாலத்தில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



  • Sep 19, 2025 08:05 IST

    30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு. சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி,விழுப்புரம், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: