/indian-express-tamil/media/media_files/2025/09/29/karur-hospital-2025-09-29-22-08-36.jpg)
கூட்ட நெரிசலில் காயமடைந்த 51 நபர்கள் டிஸ்சார்ஜ்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 29, 2025 21:40 IST
41 பேர் பலி - த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் கைது
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதியழகன் மீது காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் கைது செய்தனர். - Sep 29, 2025 21:11 IST
அலங்காநல்லூர் அருகே முயல் வேட்டை: 5 பேர் கைது
மதுரை அலங்காநல்லூர் அருகே பாலமேடு வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியை வைத்து 2 முயல்களை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். வேட்டை நாய்களுடன் முயல்களை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இவர்களிமிடருந்து துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட முயல்கள், வேன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் அழகர்கோவில் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
- Sep 29, 2025 20:05 IST
காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர்
கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
- Sep 29, 2025 19:16 IST
திருச்சி அருகே பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப் பேருந்து
திருச்சி துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- Sep 29, 2025 16:58 IST
அக். 2ஆம் தேதி இராமநாதபுரம் செல்கிறார் ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் இன்று (செப்.29) ராமநாதபுரம் செல்லவிருந்த பயணம் இரத்து செய்யப்பட்ட நிலையில், அக்.2, 3 ஆம் தேதிகளில் ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- Sep 29, 2025 16:15 IST
ரோந்து போலீசிடம் சிக்கிய திருடன்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகிலுள்ள தச்சூரில், டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருட முயன்றபோது, அந்த நபர் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கிய பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Video: Sun News
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் திருட, ஷட்டரை உடைத்துக் கொண்டிருந்த நபர் ரோந்து போலீசில் சிக்கிய சிசிடிவி காட்சி#SunNews | #Ponneri | #CCTVpic.twitter.com/gFMsSeKU3L
— Sun News (@sunnewstamil) September 29, 2025 - Sep 29, 2025 16:13 IST
மதுரைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்
ஆயுத பூஜையை ஒட்டி மக்கள் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இன்று இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரம், தஞ்சை, திருச்சி வழியாக வரும் அக்டோபர் 1-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு மதுரைக்குச் செல்லும்.
- Sep 29, 2025 15:50 IST
பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும்: அன்புமணி
பசுமை பட்டாசுகள் பற்றி அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உரிய தீர்வு காண வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். 40 திமுக எம்.பி.க்கள் இருந்தும், தமிழகத்திற்கு ஏதும் செய்யவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
சிவககாசி அருகே துரைச்சாமிபுரத்தில் பட்டாசுத் தொழிலாளர்களுடன் கலந்தாலோசித்தப் பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
- Sep 29, 2025 14:59 IST
கரூர் கூட்ட நெரிசல் - சமூக வலைதள வீடியோக்களை ஆராயும் போலீஸ்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட வீடியோக்களை காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாகவும், தேவைப்பட்டால் அதனை பதிவிட்டவர்களை அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 29, 2025 13:43 IST
ஆயுத பூஜை விடுமுறை- மதுரை, செங்கோட்டை, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு இடையே நாளை (30ம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (06076) திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
- Sep 29, 2025 11:52 IST
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல் முருகன் நேரில் ஆறுதல்
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல் முருகன் ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். கரூரில் விஜய் பரப்புரையின்போது நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.
- Sep 29, 2025 11:01 IST
மேட்டூர் அணையில் நீர்வரத்து 6,723 கன அடியாக சரிவு
மேட்டூர் அணையில் நீர்வரத்து 7,593 கன அடியில் இருந்து 6,723 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.14 அடியாக சரிவான நிலையில், நீர் இருப்பு 90.534 ஆக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 15,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்துக்காக 15,000 கனஅடி, கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- Sep 29, 2025 11:00 IST
சிபிஐ விசாரணை கோரும் தவெக
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் கூட்ட நெரிசலில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு உள்ளதாக தவெக தரப்பு குற்றச்சாட்டு கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டதாகவும், சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்ததாகவும் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- Sep 29, 2025 10:57 IST
மின்கம்பம் முறிந்து மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
கச்சிராப்பாளையம் அருகே மின்கம்பம் முறிந்து தற்காலிக மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். புதிய மின்கம்பம் நடும்போது மின்கம்பம் முறிந்து தெங்கியநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் பலியானார்.
- Sep 29, 2025 10:28 IST
விஜய் பிரச்சார களத்தில் பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கரூரில் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 41 ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரூர், வேலுச்சாமிபுரத்தில், நேற்று முன்தினம் இரவு, த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில், 39 பேர் உயிரிழந்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கரூர், சணப்பிரட்டி தொழிற்பேட்டையைச் சேர்ந்த நவீன், 34, என்பவர், நேற்று மதியம் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களின் உடல்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில், 13 ஆண்கள், 18 பெண்கள், 9 குழந்தைகள் என, 40 பேர் உயிரிழந்தனர். அதில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 32 பேர், ஈரோடு மாவட்டம் - 2, திருப்பூர் - 2, திண்டுக்கல் - 2, சேலம் - 2 பேர் அடக்கம்.
இந்நிலையில் இன்று (செப் 29) அதிகாலை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த நல்லுசாமி என்பவரின் மனைவி சுகுணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 11 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.செய்தி: க.சண்முகவடிவேல்
- Sep 29, 2025 10:10 IST
கரூர் செல்லும் ஆதவ் அர்ஜுனனா
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, தவெக தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்திக்க முடிவு. கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட உடனே கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்
- Sep 29, 2025 10:05 IST
கரூர் சம்பவம்: புதிய விசாரணை அதிகாரி நியமனம்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- Sep 29, 2025 09:34 IST
த.வெ.க ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டம்
கரூரில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க பொதுச்செயவாளர் ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயாலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப, போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, சி.டி.நிர்மல்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் மதியழகன், ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
- Sep 29, 2025 09:00 IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: நீதிபதி, அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை
கரூரில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி, அருணா ஜெகதீசன், தலைமையிலான ஒருநபர் ஆணையம், 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். மருத்துவமனை, சம்பவம் நடந்த இடம், மரணமடைந்தவர்கள் வீடுகளில், சென்று விசாணை நடத்தி வருகிறார்.
- Sep 29, 2025 08:34 IST
விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் தேவை: அருணா ஜெகதீசன்
கரூர் கூட்ட நெரிசல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது, பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பதை அறிய சம்பவ இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க கால தாமதம் ஏற்படும் என வேலுச்சாமிபுரத்தில் விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் பேட்டியில் கூறியுள்ளார்.
- Sep 29, 2025 08:31 IST
விஜய் கூட்ட நெரிசல் சம்பவம் - நிர்மலா சீதாராமன் இன்று கரூர் வருகை
கரூரில் நடந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவக்க கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வலியுறுத்தலின் படி மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு L.முருகன் அவர்கள், மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், மாவட்ட தலைவர் திரு V.V.செந்தில்நாதன் அவர்கள் இன்று 29.9.25 திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் & மருத்துவமனைக்கு
வருகை தருகிறார்கள். செய்தியாளர்கள் அனைவரும் வருகை புரிந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. - Sep 29, 2025 08:26 IST
த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பிரசாரத்தின்போது விதிகளை மீறியதாக நாமக்கல்லில் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் மீதும் நாமக்கல் தவெக மாவட்ட செயலாளர் சதீஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி வழங்கிய நேரத்தில் பிரசாரம் செய்யாததால் , 5 பிரிவுகளில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- Sep 29, 2025 08:06 IST
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு
கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சுகுணா (65) என்பவர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.