/indian-express-tamil/media/media_files/2025/09/30/tambaram-railway-2025-09-30-18-06-25.jpg)
தொடர் விடுமுறை - தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 30, 2025 19:36 IST
விஜய்யின் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாணம்; காசோலை வழங்கிய செந்தில் பாலாஜி
கரூர் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரிடம் நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார்.
- Sep 30, 2025 18:52 IST
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு விசாரணை அக்.7க்கு ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணை அக்.7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் யாரும் வராத நிலையில் இவ்வழக்கின் விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.
- Sep 30, 2025 18:07 IST
தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையால் தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் பொதுப் பெட்டிகளில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றனர்.
- Sep 30, 2025 17:17 IST
தசரா திருவிழா: குலசையில் பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார்
குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 2.10.2025 அன்று சூரசம்கார நிகழ்வு மற்றும் 3.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைகிறது. அதன்படி திருவிழாவின் முக்கிய நாட்களான 1.10.2025 முதல் 3.10.2025 ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக மாவட்ட எஸ்.பி. தலைமையில் சுமார் 3,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- Sep 30, 2025 16:55 IST
விஜய் பிரசாரத்திற்கு குறுகிய இடம் ஒதுக்கியது தவறு - ஹேமமாலினி
விஜய் பிரசாரத்திற்கு குறுகிய இடம் ஒதுக்கியது தவறு. பெரிய இடம் கொடுத்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது. இதுபோன்ற சம்பவம் எங்கும் நடந்ததில்லை. நிகழ்ச்சி ஏற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என என்.டி.ஏ எம்.பி.,க்கள் குழுவைச் சேர்ந்த ஹேமமாலினி கூறியுள்ளார்
- Sep 30, 2025 15:20 IST
த.வெ.க கூட்டநெரிசலில் காயமடைந்த 53 பேரும் இன்று டிஸ்சார்ஜ் - அமைச்சர் மா.சு
கரூரில் நடைபெற்ற தவெக கூட்டநெரிசலில் காயமடைந்த 53 பேரும் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
- Sep 30, 2025 14:18 IST
சிறுத்தையை பார்த்து தெறித்து ஓடிய நபர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பூனையை வேட்டையாட கேண்டீனுக்குள் சிறுத்தை புகுந்தது. சிறுத்தையை பார்த்ததும் நபர் ஒருவர் தெறித்து ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.
- Sep 30, 2025 13:41 IST
பாஜக எம்.பி ஹேமமாலினி சென்ற கார் விபத்து
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்றபோது, பாஜக எம்.பி ஹேமமாலினி சென்ற கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
- Sep 30, 2025 10:46 IST
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பொறுப்புகள் பறிப்பு
ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் 3ம் கட்டமாக செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்
- Sep 30, 2025 10:42 IST
2 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Sep 30, 2025 10:41 IST
இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளோம் - ஹேமா மாலினி
கரூரில் என்ன நடந்தது என விசாரிப்போம். இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளோம் என்று கோவையில் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழுத் தலைவர் ஹேமா மாலினி பேட்டியளித்துள்ளார்.
- Sep 30, 2025 10:38 IST
விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
"முதலமைச்சரின் உத்தரவை தொடர்ந்து உடனடியாக கரூர் வந்தோம். பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் உயிரிழந்ததை கண்டு கண்கலங்கினேன். பிடித்த தலைவர்களின் பின்செல்ல உரிமை உள்ளது. ஆனாலும், உயிர் முக்கியம். சம்பவ இடத்தில் யாராக இருந்தாலும் கண்கலங்கி இருப்பார்கள்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
- Sep 30, 2025 10:25 IST
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோர உள்ளதாக தகவல்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோர உள்ளதாக தகவல். தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரும் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்ய உள்ளார்; கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக மாவட்ட செயலாளர்கள் இருவர் ஏற்கெனவே கைது; கரூர் கூட்ட நெரிசல் முதல் தகவல் அறிக்கையில் ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் பெயர்களும் உள்ளன
- Sep 30, 2025 10:22 IST
கரூர் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். இதனை முன்னிட்டு மருத்துவமனைக்கு சிறப்பு பாதுகாப்புடன் அழைத்து செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- Sep 30, 2025 10:18 IST
சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சீல்
சேலம் எடப்பாடியில் கருவில் உள்ள குழந்தை பாலினத்தை ஸ்கேன் செய்து தெரிவித்து வந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஸ்கேன் செய்ய அனுப்பி வைத்து, திடீரென உள்ளே நுழைந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். மருத்துவர் கண்ணன், அவரது மனைவி ஜோதி, மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- Sep 30, 2025 10:06 IST
கொடைக்கானலில் அதிகரித்துவரும் நாய்க்கடி சம்பவங்கள்
கொடைக்கானலில் ஒடிசாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி கங்காதர் என்பவரை தெரு நாய்கள் கடித்துக் குதறியது. கங்காதர் பல்வேறு இடங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 நாட்களில் 8க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்துள்ளன. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- Sep 30, 2025 09:08 IST
விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி - பாஜகவின் குழு இன்று வருகை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி - பாஜக சார்பில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழு இன்று கரூர் வர உள்ளது. இக்குழு சம்பவத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து, பாஜக தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
- Sep 30, 2025 08:13 IST
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Sep 30, 2025 08:13 IST
கரூர் துயர சம்பவம் - மற்றொரு தவெக நிர்வாகி கைது
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு த.வெ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். பிரசாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு, கரூர் நகர காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர் பவுன்ராஜ் என தகவல் வெளியாகியுள்ளது.
- Sep 30, 2025 08:08 IST
கரூர் துயர சம்பவம் - இன்று மனுக்கள் தாக்கல்
கரூர் துயர சம்பவம் தொடர்பாக த.வெ.க.சார்பில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. சிபிஐ விசாரணை கோரியும் சிசிடிவி பதிவுகளை பத்திரமாக வைத்திருக்க கோரியும் தாக்கல் செய்யப்படும் மனு. தவெக-விற்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.