Coimbatore, Madurai, Trichy News Updates: ’விஜய்க்கு பா.ஜ.க ஆதரவாக நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது' - சீமான் விமர்சனம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Seeman sivakasi

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment
  • Oct 02, 2025 21:27 IST

    ‘தி.மு.க - த.வெ.க இடையே ரகசிய தொடர்பு’; திருமாவளவன் கருத்துக்கு சீமான் ஆதரவு

    சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பா.ஜ.க-வுக்கு விஜய் ஆதரவாக நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தி.மு.க, த.வெ.க இடையே ரகசிய தொடர்பு உண்மையாக இருக்கலாம்” என்று திருமாவளவன் கருத்துக்கு ஆதரவாக சீமான் ஆதரவாகப் பேசினார்.



  • Oct 02, 2025 21:24 IST

    அதிகமானோர் பட்டப்படிப்பு படிக்க காரணம் அ.தி.மு.க அரசு - இ.பி.எஸ்

    தருமபுரியில் பரப்புரையில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க ஆட்சியில் ஏழை, எளிய மாணவர்கள் கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்தது. 10 ஆண்டுகளில் 68 கலை, அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்தோம். 21 பாலிடெக்னிக் கல்லூரிகளை கொண்டு வந்தோம்.” என்று கூறினார்.



  • Advertisment
    Advertisements
  • Oct 02, 2025 20:08 IST

    ‘விஜயின் முட்டாள் ரசிகர்கள் திருந்தவேண்டும்’ - வேல்முருகன் காட்டம்

    திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்: “விஜய் கவனத்தை ஈர்ப்பதற்காக கூட்டத்தில் இருந்தவர்கள் கையில் கிடைத்த செருப்பு, தேங்காய் போன்றவற்றை அவரை நோக்கி வீசியுள்ளனர்; இதை அந்த ஊர் மக்களே கூறியுள்ளார்கள்... அவருடைய முட்டாள் ரசிகர்கள் திருந்த வேண்டும்” என்று காட்டமாகக் கூறியுள்ளார்.



  • Oct 02, 2025 20:06 IST

    ‘விஜயின் காணொளியை பார்க்கும்போது அவர் இதயத்தில் காயமோ வலியோ இல்லை’ - சீமான் விமர்சனம்

    வகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,இவ்வளவு பேர் இறந்து கிடக்கும்போது குஷி படத்தின் மறுவெளியீட்டில் இளைஞர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். அதைப் பார்க்கையில் மனம் நிம்மதியை இழக்கிறது. எதை நோக்கி சமூகம் செல்கிறது என உறக்கம்கூட வரவில்லை. விஜயின் காணொளியை பார்க்கும்போது அவர் இதயத்தில் காயமோ வலியோ இல்லை; விஜய் போகவில்லை என்றால் அங்கு அந்த நிகழ்வு ஏற்பட்டிருக்காதுதானே... எனில் அதற்கு காரணம் யார்? ஏன் கரூரில் மட்டும் இத்தனை இறப்புகள் என கேட்போர், பிற இடங்களிலும் இத்துயரம் நடக்க வேண்டும் என நினைக்கிறார்களா? த.வெ.க-வின் எல்லா கூட்டத்திலும் பலர் மயங்கினார்கள். அப்படித்தான் கரூரில் மயங்கினார்கள். ஆனால், கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன. நானே பாதிக்கப்பட்டவர்கள் இருந்த மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அங்கு கத்திகுத்து, கீறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒருவர்கூட இல்லை; மயங்கி கீழே விழுந்துவிட்டோம் என்று அவர்களே சொன்னார்கள்” என்று  கூறினார். 



  • Oct 02, 2025 19:58 IST

    விஜய்க்கு பா.ஜ.க ஆதரவாக நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது - சீமான் விமர்சனம்

    சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜய்க்கு பா.ஜ.க ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிகிறது. செந்தில் பாலாஜி ஏன் உடனே வந்தார் என்பதைவிட விஜய் ஏன் செல்லவிலலி என்பதுதான் கேள்வி. கரூர் நெரிசல் சம்பவத்துக்கு விஜய் முதலில் பொறுப்பேற்க வேண்டும். பின்னர் வருந்த வேண்டும்.” என்று கூறினார்.



  • Oct 02, 2025 19:29 IST

    பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என நினைக்கிறார் கரூர் எம்.எல்.ஏ - இ.பி.எஸ் விமர்சனம்

    தருமபுரி பரப்புரையில் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பணத்தை கொடுத்து மக்களை விலைக்கு வாங்கலாம் என கரூர் எம்.எல்.ஏ நினைக்கிறார்; உங்களின் போலி வாக்குறுதிகளும், கொலுசு கொடுக்கும் வேலையும் இனி எடுபடாது. இங்கு பற்றி எரியும்பொழுது, துணை முதலமைச்சர் உல்லாசமாக வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டார்” என்று  என்று கூறினார்.



  • Oct 02, 2025 18:44 IST

    உரிய பாதுகாப்பு வழங்காததால் கரூரில் 41 பேர் மரணம் – இ.பி.எஸ்

    கரூரில் விஜய் பிரசாரத்தின் போது அரசு உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். உரிய பாதுகாப்பு வழங்காததால் கரூரில் 41 பேர் மரணம் அடைந்துள்ளனர். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கரூரில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்



  • Oct 02, 2025 18:30 IST

    கரூர் த.வெ.க கூட்டநெரிசல்; அமைச்சர் முத்துசாமி பேட்டி

    மனசாட்சியோடு சொல்லுங்கள். அங்கே இருந்தவர்கள் காவல்துறை சொன்னதை கேட்டார்களா? காவலர்களும் மனிதர்கள்தானே? இச்சம்பவத்தை திசைதிருப்பிக் கொண்டே சென்றால், என்றுதான் திருத்திக்கொள்வது? ஏறத்தாழ 8 மணி நேரம் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் நிற்கின்றனர் என கரூர் த.வெ.க கூட்டநெரிசல் குறித்து அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்



  • Oct 02, 2025 17:40 IST

    நெல்லை- திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

    குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி நெல்லை- திருச்செந்தூர் இடையே இன்றும் நாளையும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது



  • Oct 02, 2025 16:38 IST

    ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை; கைதான 2 காவலர்கள் பணிநீக்கம்

    திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 காவலர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்



  • Oct 02, 2025 16:30 IST

    ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

    சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே வண்டிமேடு பகுதியில் போலீசாரின் சோதனையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 75 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்து இதனை கடத்தி வந்து விற்க முயன்ற மதிவாணன் (28), மணிவண்ணன் (27), சர்மா பாத்திமா (30), கெளசியா (35) ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்



  • Oct 02, 2025 15:18 IST

    காதலித்து ஏமாற்றிய இளைஞர் வீட்டின் முன்பு பெண் தர்ணா

    சேலம்: தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக தினகரன் என்ற இளைஞர் வீட்டின் முன்பு பெண்ணொருவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு; அப்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



  • Oct 02, 2025 14:47 IST

    கரூர் நெரிசல் - ஜெனரேட்டர் ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை

    கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஜெனரேட்டர் ஒப்பந்ததாரர், ஜெனரேட்டரை ஆஃப் செய்தவரிடம் விசாரித்து காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றனர்.
    ஜெனரேட்டர், மின் விளக்குகளுக்கு கே.ஆர். நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 



  • Oct 02, 2025 14:43 IST

    ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் கடும் அழுத்தம் கொடுத்தனர்: திருமா

    ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் கடும் அழுத்தம் கொடுத்தனர்; அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக்கூடாது என மிகவும் எச்சரிக்கையாகக் கட்சி தொடங்குவதைத் அவர் தவிர்த்துவிட்டார். அவருக்குப் பதவி, அதிகாரம் மீது மோகம் இல்லை; முதலமைச்சராகும் வெறி, வேட்கை இல்லை. அதனால் அவர் அமைதியாக ஒதுங்கிவிட்டார்.

    விஜய்க்கு வந்ததில் இருந்து அதிகாரமும், ஆட்சியின் மீதும்தான் மோகம்; அடுத்த முதலமைச்சராக நாற்காலியில் உட்கார வேண்டுமென்பதுதான் மோகம்; அதற்குக் குறிவைத்து திமுகவைச் சாடுகிறார்.

    திருமாவளவன் திருச்சியில் பேட்டி



  • Oct 02, 2025 14:20 IST

    3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் வரும் 4-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    இன்று (அக். 02) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்

    -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!



  • Oct 02, 2025 13:31 IST

    கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் - ஸ்டாலின் உத்தரவு

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெம்மேலி கிராமம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெம்மேலி கிராமம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த 28.9.2025 அன்று மாலை சுமார் 5.00 மணியளவில் சென்னை, பெரம்பூர் அகரம் பகுதியிலிருந்து மகேந்திரா வேன் மூலம் சுற்றுலா வந்த 17 நபர்களில் பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் த/பெ.சந்திரன் என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

    மேலும், அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா (வயது 17) மற்றும் துளசி (வயது 16) ஆகிய இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு 30.9.2025 அன்று மேற்படி இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இம்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.



  • Oct 02, 2025 12:48 IST

    ஊட்டியில் வாகன நெரிசலை தவிர்க்க புதிய உத்தரவு

    கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களில், பஸ்களை தலைகுந்தா பகுதியில் நிறுத்த உத்தரவிடப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வேறு வாகனங்களில் ஊட்டி நகருக்குள் செல்லவும், சோதனை சாவடிகளில் இந்த தகவலை தெரிவித்து அனுமதியளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்தாலும், சுற்றுலா பயணிகள் மன உளைச்சலுடன் வந்து செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.



  • Oct 02, 2025 08:40 IST

    மதுரையில் பூக்களின் விலை நிலவரம்

    தென் மாவட்டங்களில் முக்கிய பூ மார்க்கெட்டாக விளங்குவது மதுரை மாட்டுத்தாவணி, அலங்காநல்லூர், பாலமேடு, உசிலம்பட்டி, வளையங்குளம், எலியார்பட்டி, அருப்புக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடு வெளி மாநிலங்களுக்கும் விமான மூலமும் பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை ஒட்டி மதுரை மல்லி கிலோ 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சம்பங்கி 200 ரூபாய் பிச்சி 600 ரூபாய் முதல் 200 ரூபாய் முதல் 200 ரூபாய் முல்லை 600 முதல் 700 ரூபாய் வரை கணகாம்பரம் 500 ரூபாய் முதல் 600 வரை அரளி பூ 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது. மரிக்கொழுந்து 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும் துளசி 40 முதல் 60 ரூபாயும் பன்னீர் 200 ரூபாயும் வில்வம் 200 ரூபாயும் சென்ட் பூ 50 ரூபாயும் தாமரை ஒன்று பத்து ரூபாய் என விற்பனையானது.



  • Oct 02, 2025 08:11 IST

    குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்

    தூத்துக்குடிகுலசேகரன்பட்டினத்தில்முத்தாரம்மன்கோயில்தசராதிருவிழாவின்சிகரநிகழ்ச்சியானசூரசம்ஹாரம்இன்றுநள்ளிரவுகோலாகலமாகநடைபெறுகிறது. இன்றுஇரவுசிறப்புஅலங்காரபூஜைக்குபின்இரவு 12 மணிக்குமகிஷாசூரசம்ஹாரம்நடைபெறும்.

     



  • Oct 02, 2025 08:06 IST

    மதுரை மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை

    முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் நிகழ்ச்சிக்கு செல்வதால் மதுரை மாவட்ட எல்லை மற்றும் முதல்வர் பயணிக்கும் பாதைகளில் இன்றும் நாளையும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் பறக்க விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: