Coimbatore, Madurai, Trichy News Updates: கரூர் சம்பவம் - மருத்துவமனையில் இருந்து அனைவரும் வீடு திரும்பினர்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Karur stampede

கரூர் சம்பவம் - மருத்துவமனையில் இருந்து அனைவரும் வீடு திரும்பினர்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90-க்கும், டீசல் 92.48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment
  • Oct 04, 2025 22:11 IST

    குலசேகரன்பட்டினம்: அரசு பஸ் மீது பைக் மோதி 2 பேர் பலி

    திருநெல்வேலி மாவட்டம், ஆவுடையாள்புரத்தை சேர்ந்த 3 பேர் மாலை அணிந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று, திருவிழா முடிந்து ஒரே பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மணப்பாடு செல்லும் சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே நாகர்கோவிலில் இருந்து வந்த அரசு பஸ் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேரும் துாக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். 



  • Oct 04, 2025 21:22 IST

    எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை திட்டத்தில் மாற்றம்

    எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட பிரசார சுற்றுப்பயணம் தேதி மாற்றம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின்படி திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் அக்டோபர் 8ஆம் தேதி பரப்புரையும், அக்.9 ஆம் தேதி பரமத்திவேலூரிலும், அக்.10 ஆம் தேதி மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார்



  • Advertisment
    Advertisements
  • Oct 04, 2025 20:56 IST

    கரூர் சம்பவம்: மருத்துவமனையில் இருந்து அனைவரும் வீடு திரும்பினர்

    கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் (59 பேரும்), குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சியில் 2 பேர், மதுரையில் 2 பேர் என மொத்தம் 4 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேரும் விரைவில் குணமடைய உயரிய சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

     



  • Oct 04, 2025 19:52 IST

    பிரேமலதா வேன் பிரசாரத்திற்கு தடை

    கிருஷ்ணகிரியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சாலைவலம் மற்றும் வேன் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தை தொடர்ந்து சாலைவலம், சாலை பிரசாரத்திற்கு  உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேடை அமைத்து பரப்புரை மேற்கொள்ள பிரேமலதாவுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.



  • Oct 04, 2025 19:27 IST

    மதுரை அண்ணாநகரில் பழமையான வீடு இடிந்து விழுந்துள்ளது

    மதுரை அண்ணாநகர் அருகே யாகப்பா நகர் சாலையில், சக்தி மாரியம்மன் கோவில் தெருவில் பழமையான வீடு ஒன்று உள்ளது. நேற்று மதுரையில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று திடீரென வீடு இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இரண்டு குழந்தைகள் அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளை தீயணைப்பு துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.



  • Oct 04, 2025 19:26 IST

    தி.மலையில் திரளான பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் புரட்டாசி மாத சனி மகா பிரதோஷம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



  • Oct 04, 2025 18:53 IST

    'விஜயை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால்'.. துரைமுருகன் பேட்டி

    கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது ஆனாலும், அவர் உண்மையை கூறியிருக்கிறார் என வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். விஜயை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள், ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.



  • Oct 04, 2025 18:19 IST

    பர்வத மலையேறியவர் பலி

    பர்வத மலையின் மீது ஏறிய சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த பழனிவேல்(46) வலிப்பு ஏற்பட்டதால் ஏணிப்படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தவறி விழுந்து உயிரிழந்தார்



  • Oct 04, 2025 18:15 IST

    வந்தே பாரத் கோவில்பட்டியில் நின்று செல்லும்...

    சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில்கள், கோவில்பட்டி ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என்று 2023-ல் தென்னக இரயில்வே பொது மேலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

    தற்போது, அந்த ரயில்கள் கோவில்பட்டியில் நின்று செல்வதற்கான ஆணையைப் பிறப்பித்திருக்கிறது ரயில்வே வாரியம்; கோவில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை மாநிலத்தின் தலைநகருடன் இணைக்கும் இந்த ரயில் சேவையால் அப்பகுதி மக்கள் பெரும் பயனடைவர் 

    எம்.பி. கனிமொழி கருணாநிதி



  • Oct 04, 2025 18:14 IST

    நம் ஒரே எதிரி திமுக தான்: எஸ்.பி.வேலுமணி

    நம் ஒரே எதிரி திமுக-தான்; அந்த எதிரியை வீழ்த்த ‘கழகம்தான் பெரிது, கட்சிதான் பெரிது’ என்று உணர்ந்து நாம் அனைவரும் (அதிமுக-வினர்) செயல்பட வேண்டும். நம் பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்கள்தான். அவர் என்ன ஆணையிட்டாலும் அதை கேட்டு செயல்பட வேண்டும்

    - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி



  • Oct 04, 2025 17:51 IST

    இபிஎஸ் ருசி கண்ட பூனை: டிடிவி

    உணர்ச்சிவசப்படும் சீமான் கூட கரூர் விவகாரத்தை நிதானமாகக் கையாள்கிறார். பழனிசாமி மோசமான அரசியல் செய்கிறார். ருசி கண்ட பூனை மாதிரி எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டுமென்று பதவி வெறியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி

    - டிடிவி தினகரன், 



  • Oct 04, 2025 17:42 IST

    தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி

    கரூரில் நடந்தது விபத்துதான். எந்தத் தலைவரும் சொந்தக் கட்சித் தொண்டர் இறப்ப​தை விரும்ப மாட்டார் என்ற முதலமைச்சரின் கருத்து சரி​யே. கரூர் சம்பவத்திற்கு விஜய் தார்மீகப் பொறுப்பேற்று இருந்தால் நீதிமன்றம் கூட இவ்வளவு கண்டனம் தெரிவித்திருக்காது.

                             

    ஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி!



  • Oct 04, 2025 17:36 IST

    பழமையான வீடு இடிந்து ஒருவர் உயிரிழப்பு

    மதுரை: அண்ணாநகர் அருகே சுரேந்திரன் என்பவரின் பழமையான வீடு இடிந்தபோது அவ்வழியே சென்ற ஜெமிலா (56) உயிரிழந்தார். இரண்டு குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜேசிபி இயந்திரம் மூலம் இடிந்த வீட்டை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.



  • Oct 04, 2025 17:07 IST

    மதுரை கோவில்களுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலும், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் மலைமேல் உள்ள தர்காவிற்கும் இன்று ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு படையினரின் உதவியுடன் முழுமையான சோதனை நடத்தினர்.

    மீனாட்சியம்மன் கோயிலும், முருகன் கோவிலும், தர்கா வளாகமும் சுற்றியுள்ள பகுதிகளும் முழுமையாக சோதனை செய்யப்பட்டன. எந்தவித வெடிகுண்டு பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.



  • Oct 04, 2025 16:56 IST

    கரூர் துயரம் - பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த தவெக நிர்வாகிகள்

    கரூர் சம்பவத்திற்கு பின் முதல்முறையாக விஜய் உத்தரவின் பேரில் நேரில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் தவெக நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.



  • Oct 04, 2025 15:40 IST

    பரப்புரை விதத்தை இனி மாற்றிக்கொள்ள வேண்டும் - சீமான் அறிவுரை

    திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மேலை நாடுகளில் உள்ளதுபோல நாமும் பரப்புரை விதத்தை இனி மாற்றிக்கொள்ள வேண்டும். கரூர் துயரச்சம்பவத்தில் ஒருவருக்கொருவர் பழிபோட்டுக்கொள்வதென்பது, நேர்ந்த உயிரிழப்புகளைவிட கொடுமையாக இருக்கிறது. எப்படியாவது விஜயை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என பாஜக நினைக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 



  • Oct 04, 2025 14:52 IST

    விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் செய்வோம் - காட்பாடியில் துரைமுருகன் பேட்டி


    காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "கரூர் விவகாரத்தில் தவெக குறித்து நீதிபதிகள் சொல்வதுதான் முக்கியம், என்ன சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் நீதிபதிகள் உண்மையை கூறி உள்ளார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி என எடப்பாடி கூறுகிறார்.

    ஒவ்வொருத்தரும் அப்படித்தான் சொல்வார்கள். ஏன் சீமான் கூட சொல்லுவார் தேர்தல் நெருங்கும்போதும், தேர்தலில்தான் தெரியும். 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல. உலகமே பார்த்த ஒன்று. விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம். தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம்." என்று அவர் கூறினார்.



  • Oct 04, 2025 13:09 IST

    நாமக்கல் எடப்பாடி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

    நாமக்கல் மாவட்டத்தில் நாளையும், அதற்கு அடுத்த நாளும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள இதுவரை காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கேட்ட 4 இடங்களும் நெடுஞ்சாலைகளுக்கு அருகே வருவதால் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அனுமதி மறுப்பு.



  • Oct 04, 2025 12:19 IST

    12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

    மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களிலும் இரு நாட்கள் கனமழை பெய்யக் கூடும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.

     



  • Oct 04, 2025 12:05 IST

    கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் விசாரணை

     

    கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்த ஆம்புலன்ஸ்களை இயக்கிய ஓட்டுநர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ்கள் வந்து மயக்கமடைந்தவர்களை ஏற்றி சென்றன. 108 அவசர உதவி எண்ணுக்கு எத்தனை அழைப்புகள் வந்தன என்றும் காவல்துறை விசாரணை



  • Oct 04, 2025 11:24 IST

    கடல் மாநாடு நடத்த கடலில் சீமான் ஆய்வு

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே 'மரங்களின் மாநாடு', அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் 'மலைகளின் மாநாடு'ஆகியவற்றை நடத்தினார்.

    இதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சீமான் சென்றிருந்தார். அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடிய அவர், கடல் மாநாடு நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்



  • Oct 04, 2025 10:58 IST

    கரூர் துயரம் - கவிஞர் வைரமுத்து கருத்து

    கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும்; அரசியல் கூட்டங்களிலோ ஆன்மிகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும். 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு வேலையும் இன்றி 27,000 பேர் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க முடியுமென்றால் அவர்களின் வாழ்வியல் என்ன? அவர்களால் இழக்கப்படும் மனிதவளம் என்ன? என்று  கவிஞர் வைரமுத்து கருது தெரிவித்துள்ளார். 



  • Oct 04, 2025 10:37 IST

    தவெக நாமக்கல் மாவட்ட செயலாளரை பிடிக்க தனிப்படைகள்

    தவெகவின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரை பிடிக்க காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைப்பு. செப். 27இல் விஜயின் நாமக்கல் பரப்புரையின்போது போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக புகார்; சதீஷ் குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் அவரது முன்ஜாமின் மனுவை நேற்று தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்



  • Oct 04, 2025 09:41 IST

    கரூர் துயர சம்பவம்: புலனாய்வு குழுவில் மேலும் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி

    கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில், கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள, ஐ.ஜி. அஸ்கா கர்க்-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த குழுவில் நாமக்கல் எஸ்.பி.விமலா, சி.எஸ்.சி.ஐ.டி எஸ்.பி.ஷியமளா தேவி ஆகியோரை இணைத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



  • Oct 04, 2025 08:06 IST

    உளுந்தூர்பேட்டையில் கனமழை காரணமாக சாய்ந்த 126 அடி அதிமுக கொடி கம்பம்

    உளுந்தூர்பேட்டை - சேலம் ரோடு ரவுண்டானா அருகே இருந்த 126 உயர அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்தது. கடந்த ஜூன் மாதம் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட 126 உயர அதிமுக கொடிக்கம்பம் காற்றில் சாய்ந்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கொடிக்கம்பம் உயர்மின்னழுத்த கம்பியில் விழுந்தது. விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து அதிமுக கொடிக்கம்பத்தை அகற்றினர்.



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: