/indian-express-tamil/media/media_files/2025/02/27/WObeBseBLjSZNRu7dBQi.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 10, 2025 20:34 IST
பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்த பின் கூட்டணி குறித்து தெரிவிப்போம் - டாக்டர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: “ஆகஸ்ட் 17-ம் தேதி நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசித்த பின், கூட்டணி குறித்து தெரிவிப்போம். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தெரிவிப்போம்” என்று கூறினார்.
- Aug 10, 2025 20:31 IST
கஞ்சா, மது தீமையை ஒழிப்பது பெரிய காரியம் இல்லை... 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள் - டாக்டர் ராம்தாஸ்
பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க மகளிர் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், “கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும்; அதை செய்வது பெரிய காரியம் இல்லை. 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள்; நான் சொல்வதை அவர்கள் கேட்டால் சமூக தீமை ஒழிக்கப்படும். பெண்களைவிட ஆண்கள் பின்னால் இருப்பதற்கு இந்த இரு தீமைகள்தான் காரணம்” என்று கூறினார்.
- Aug 10, 2025 20:22 IST
10.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது - டாக்டர் ராமதாஸ்
பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க மகளிர் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், “என்னுடைய அருமை நண்பர் கலைஞர் 20% இடஒதுக்கீடு அளித்தார். 10.5% உள்ஒடுக்கீட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் முதல்வருக்கு ஏன் தயக்கம்? 10.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது” என்று கூறினார்.
- Aug 10, 2025 20:18 IST
2026 தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் - டாக்டர் ராமதாஸ் உறுதி
பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க மகளிர் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள்; நான் சொல்வதுதான் நடக்கும்” என்று கூறினார்.
- Aug 10, 2025 20:00 IST
பெரியாருக்குப் பிறகு பெண்களை போற்றுகிற ஒரே தலைவர் ராமதாஸ்தான் - ஜி.கே. மணி பேச்சு
பெரியாருக்குப் பிறகு பெண்களை போற்றுகிற ஒரே தலைவர் ராமதாஸ்தான் - ஜி.கே. மணி பேச்சுபூம்புகார் பா.ம.க மகளிர் மாநாட்டில் ஜி.கே.மணி பேச்சு: “தந்தை பெரியாருக்குப் பிறகு பெண்களை போற்றுகின்ற, மதிக்கின்ற, அவர்களின் முன்னேற்றத்தை விரும்புகின்ற, அவர்களுக்காக போராடுகின்ற ஒரு தலைவர் என்றால் அவர் மருத்துவர் ராமதாஸ்தான்.” என்று பேசினார்.
- Aug 10, 2025 19:57 IST
தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; ராஜராஜன், ராஜேந்திரன் உதாரணம் - டாக்டர் ராமதாஸ் பேச்சு
பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க மகளிர் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், “தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; அதற்கு உதாரணம், ராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன்; பெரியகோவிலை மிஞ்சும் அளவுக்கு கோயில் கட்டக்கூடாது என இராஜேந்திர சோழன் நினைத்ததே இதற்கு சிறந்த உதாரணம்” என்று பேசினார்.
- Aug 10, 2025 19:50 IST
பெண்கள் இல்லாமல் நாம் இல்லை - பா.ம.க மகளிர் மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
பூம்புகாரில் நடைபெறும் பா.ம.க மகளிர் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், “பெண்கள் இல்லாமல் நாம் இல்லை; உலகமே இல்லை. பெண்களுக்குக் காக்கும் சக்தி உள்ளது. பெண்கள் எல்லா வகையிலும் முன்னேறுவதற்கு வழிகாட்டுவதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது” என்று கூறினார்.
- Aug 10, 2025 19:40 IST
வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுதுக - பா.ம.க மகளிர் மாநாட்டில் தீர்மானம்
பா.ம.க மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பெண்களுக்கு வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் நீங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்.
முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் மன வேதனைக்கு உள்ளாக்கப்படுவதற்கு கண்டனம்.
பள்ளிகளில் நடைபெறும் பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு பெண் காவலர்கள் நியமிக்க வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய பெண்களின் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேலை நாட்களின் எண்ணிக்கையையும், தினக் கூலியையும் அதிகரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண் கல்வி அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவிகள் கல்வி பெற கூடுதல் மகளிர் பல்கலைக் கழகங்கள் உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நடுத்தர குடும்பத்துப் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் கொடுமைகள் அதிகரித்து வருவதால் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீட்டை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை சரியாக நிர்ணயித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டின் காவிரி பாசன டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட வேண்டும்.
பூம்புகார் பகுதி மீனவர்கள் மற்றும் மீன்பிடி துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். - Aug 10, 2025 18:41 IST
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரேஷன் கடை ஊழியர் உயிரிழப்பு
சோளிங்கர் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரேஷன் கடை ஊழியர் இறந்தார். நேற்றிரவு ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் தூங்கினார். ரவிச்சந்திரன் சுவர் அருகே படுத்து தூங்கினார். இதற்கிடையில் அப்பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் ஈரமாக இருந்த வீட்டின் சுவர், இரவு சுமார் 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ரவிச்சந்திரன் இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- Aug 10, 2025 18:40 IST
பூம்புகாரில் மழை - பாமக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் அவதி
மயிலாடுதுறை பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். மகளிர் மாநாட்டில் திடீரென மழை பெய்ததால், இருக்கைகளை தலையில் வைத்து மாநாட்டினை மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
- Aug 10, 2025 18:13 IST
செஞ்சியில் 1,200 ஆண்டு பழமைவாய்ந்த சிற்பங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் மற்றும் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமங்களில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன், களஆய்வு மேற்கொண்டார். அப்போது 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டன.
- Aug 10, 2025 18:04 IST
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை தீவிரம்
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் மாநகராட்சி கமிஷனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி பில்கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் என 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேயரின் கணவர், 3-வது மண்டல தலைவரின் கணவர், திமுக கவுன்சிலர்கள் 3 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்களிடமும் போலீசார் அடுத்த வாரம் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Aug 10, 2025 16:37 IST
திருச்சி மத்திய சிறையில் 20 காவலர்கள் மீது வழக்குப்பதிவு
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் துணை ஜெயிலர் மணிகண்டன், தலைமைக் காவலர் அருண்குமார் மேலும் 20 சிறை காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைவாசி தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தநிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் கே.கே.நகர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- Aug 10, 2025 16:11 IST
ஆன்லைன் சூதாட்டத்தால் ஐடி ஊழியர் தற்கொலை
கும்பகோணம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரம் இழந்த ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் அரசமர தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சுரேஷ்குமார்(22). பிஎஸ்சி பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது வொர்க் பிரம் ஹோம் முறையில் வீட்டிலிருந்தே பணியாற்றினார்.
- Aug 10, 2025 16:06 IST
மிளகாய் பொடியை கரைத்து உடலில் ஊற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன்
கடலூர் மாவட்டம் முதுநகர் சாலக்கரையில் முத்து மாரியம்மன் கோயிலில் செடல் உற்சவம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதியுலா நடைபெற்று செடல் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, விரதமிருந்த திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசித்தனர். இந்த நிலையில், சில பக்தர்கள் மிளகாய் பொடியை கரைத்து உடலில் ஊற்றியும், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடை சுட்டும் முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் விநோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- Aug 10, 2025 14:52 IST
திருச்செந்தூரில் ரூ.18 கோடியில் அமைகிறது புதிய பேருந்து நிலையம்
திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் திருச்செந்தூர் - உடன்குடி இடையே புதிய பேருந்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- Aug 10, 2025 14:14 IST
மதுரையில் த.வெ.க 2வது மாநாடு - பணிகள் விறுவிறுப்பு
ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் முழு வீச்சில் மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன
- Aug 10, 2025 13:13 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டங்களை அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி உண்ணாவிரத போராட்டம், ஆகஸ்ட் 19 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
- Aug 10, 2025 12:24 IST
திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளையுடன் மண்டல பூஜை முடிய உள்ள நிலையில் 4 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் இருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
- Aug 10, 2025 11:17 IST
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- Aug 10, 2025 10:56 IST
அன்புமணி படம் இடம்பெறவில்லை
ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் சங்கத்தின் மகளிர் பெருவிழா மாநாட்டு முகப்பு வாயில் பதாகைகளில் அன்புமணியின் படம் இடம் பெறவில்லை
- Aug 10, 2025 10:22 IST
அந்தோணியார் தேர்பவனி
நாகை மாவட்டம் தெற்குபொய்கைநல்லூர் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி கோலாகலமாக நடந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தில் வண்ண காகிதங்களை பறக்கவிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
- Aug 10, 2025 09:51 IST
4ம் நாளாக கரடியை பிடிக்கும் பணி தீவிரம்
தென்காசிமாவட்டம்புளியங்குடியில் 4 வதுநாளாககரடியைபிடிக்கும்பணியில்வனத்துறையினர்தீவிரமாகஈடுபட்டுள்ளனர். கரடியைபிடிக்ககூண்டுவைத்தநிலையில்வனத்துறைஅதிகாரிகள்உள்ளிட்டோர்முகாமிட்டுள்ளனர். தென்காசிபுளியங்குடிஅருகேவனப்பகுதியில்கரடிகடித்து 3 பெண்கள்காயமடைந்தனர்.
- Aug 10, 2025 09:15 IST
பதினெட்டாம்படி கருப்பு - சன்னதி திறப்பு
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் இன்று திறந்தன.
- Aug 10, 2025 09:10 IST
வித்தியாசமான உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம் பகுதியில் வினோத உருவத்தில் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. ஆடு வித்யாசமான தோற்றத்தில் இருப்பதால் ஆட்டு குட்டியை வியப்புடன் பார்த்து சென்ற கிராம மக்கள் எதுவும் அசம்பாவிதம் ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.
- Aug 10, 2025 09:08 IST
மேட்டூர் அனை நீர் நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9200 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.54 அடியாகவும், நீர் இருப்பு 91.161 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து 14,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.