Advertisment

Coimbatore, Madurai, Trichy News: வால்பாறை தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்: வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Leopard wandering

இன்றைய மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

திருப்பதி தரிசனம்: வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்துக்கு இலவச தரிசன டோக்கன் வாங்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர், கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Jan 09, 2025 20:15 IST
    வால்பாறை தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்: வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

    கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் உலவிய சிசிடிவி காட்சிகள் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை



  • Jan 09, 2025 18:48 IST
    நா.த.க மாவட்டத் தலைவர் கட்சியில் இருந்து விலகல்

    நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மகாதேவன் கட்சியில் இருந்து விலகியுள்ளார்



  • Advertisment
    Advertisement
  • Jan 09, 2025 18:19 IST
    சிதம்பரம் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய இயலாது - தீட்சிதர்கள் கடிதம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய இயலாது என மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு, சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் கடிதம் எழுதியுள்ளனர்



  • Jan 09, 2025 17:54 IST
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் வாக்குகளை செலுத்தலாம் என தேர்தல் நடத்தும் அதிகாரி மணிஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இதற்கான படிவங்களை வழங்கி வரும் 15ம் தேதிக்குள் ஒப்புதல் பெற உள்ளது. பின்னர், வீட்டுக்கே வந்து தபால் வாக்குகள் பெறப்படும், முன்னரே நேரம், தேதி ஆகியவை குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Jan 09, 2025 17:51 IST
    அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம்

    பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது



  • Jan 09, 2025 17:33 IST
    புளியமரம் முறிந்து, பள்ளி வாகனம், ஆட்டோ மீது விழுந்து விபத்து

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலையில் உள்ள பழமையான புளியமரம் முறிந்து, பள்ளி வாகனம் மற்றும் ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு இல்லை. மரத்தை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்



  • Jan 09, 2025 16:57 IST
    கோவையில் பீப் கடை நடத்தும் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க பிரமுகர்; 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    கோவையில் சாலையோர பீப் கடையில் சென்று கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க பிரமுகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடை உரிமையாளர் அளித்த புகாரில், உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சுப்பிரமணி மீது துடியலூர் காவல் நிலையத்தில் 126(2), 192, 196 மற்றும் 351/2 ஆகிய நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



  • Jan 09, 2025 16:54 IST
    திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து காவல் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.



  • Jan 09, 2025 14:39 IST
    கோவை மாநகராட்சியை 2 ஆக பிரிக்க கோரிக்கை 

    "சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரித்தது போல, கோவை மாநகராட்சியை 2 ஆக பிரிக்க வேண்டும். கோவையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும்" என்று சட்டப்பேரவையில் கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். 



  • Jan 09, 2025 14:26 IST
    மேலூர் பகுதியில் ரேஷன் பொருள் வாங்க மறுப்பு 

    மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய ஏல உத்தரவை முழுமையாக ரத்து செய்யும் வரை ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அரசின் எந்த சலுகையும் வேண்டாம் என அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். 1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை கொண்ட மக்கள் பொருட்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 



  • Jan 09, 2025 13:46 IST
    திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி  வருகிறது. அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகிறார்கள். மேலும், பால்குடம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். இதனால், கோவில் வளாகம், கடற்கரை, பேருந்து நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.



  • Jan 09, 2025 13:36 IST
    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் மாணவர்கள் போராட்டம் 

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில்  ஈடுப்பட்டு வருகிறார்கள். 

     



  • Jan 09, 2025 13:29 IST
    குமரியில் உணவு கழிவு ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் - 9 பேர் கைது

    கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் உணவு கழிவுகள் ஏற்றி வந்த 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை 5 வாகனங்களை பறிமுதல் செய்தது. கைதான 9 பேரும் அசாம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரிக்கும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 



  • Jan 09, 2025 12:29 IST
    ஈரோடு கிழக்கு - பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழல்

    இடைத் தேர்தல் அறிவிப்பு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் "தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரியுள்ளோம்" என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 

    "அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்" எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது. 



  • Jan 09, 2025 11:29 IST
    வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி

    தமிழ்நாட்டில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது; ஒரு காலத்திலும் டங்ஸ்டன் திட்டத்தை முதலமைச்சர் வர விட மாட்டார்; பேரணியில் ஈடுபட்ட மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேலூர் கிராம மக்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 



  • Jan 09, 2025 11:21 IST
    சாலையில் திடீரென தீப்பிடித்த கார்

    குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

    காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 



  • Jan 09, 2025 10:48 IST
    டங்ஸ்டன் சுரங்கம் - சண்முகம் பதிவு

    மதுரையில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடப்பட்ட ஏலம் ரத்து செய்ய வேண்டுமென சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. அதே‌ சமயம்,‌ ஜனவரி 7 அன்று நடந்த டங்ஸ்டன் எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற 5000 பேர் மீது வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சண்முகம் பதிவிட்டுள்ளார்.



  • Jan 09, 2025 10:46 IST
    இபிஎஸ் உறவினர் வீட்டில் 3 ஆவது நாளாக தொடரும் சோதனை

    எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபர் ராமலிங்கத்தின் வீட்டில் 3 வது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. ஈரோடு, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 ஆவது நாளாக சோதனை.



  • Jan 09, 2025 09:37 IST
    கோவை - அனுமதியின்றி ஐயப்ப பக்தர்களை ஏற்றிச் சென்ற பஸ் சிறைபிடிப்பு 

    கோவையில் உரிய அனுமதியின்றி, தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களை ஏற்றிச் சென்ற கேரளா பேருந்து திருமலையாம்பாளையம் அருகே சிறை பிடிக்கப்பட்டது. கேரளா பேருந்து உரிமையாளருக்கு ரூ.40,000 அபராதம் விதிக்கப்பட்டது. கேரளா பேருந்து ஓட்டுநரிடம் சோதனையிட்ட போது, உரிய அனுமதி பெறாமல், பழைய அனுமதி சீட்டை வைத்து பேருந்தை இயக்கியது தெரியவந்தது. 



Coimbatore Trichy Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment