/indian-express-tamil/media/media_files/2025/01/31/0T4UhCgOWrkFUe6RKlye.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.90 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.49 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயுவின் விலை லிட்டருக்கு ரூ.90.50ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
Jan 31, 2025 19:40 IST
திருச்சியில் தான் படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்பு
திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 90-வது ஆண்டு விளையாட்டு பரிசளிப்பு விழா மற்றும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல நடிகரும், பள்ளியின் முன்னாள் மானவருமான சிவ கார்த்திகேயன் கலந்துக் கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாணவர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்வில் நாடகம், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-
Jan 31, 2025 19:34 IST
ஈரோட்டில் நா.த.க-வினர் மறியல் போராட்டம்
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென, மேடை அமைக்க போலீசார் கெடுபிடி காட்டியதாலும், மேடை அமைக்க கூடாது என போலீசார் கட்டுப்பாடு விதித்ததாலும் நா.த.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Jan 31, 2025 19:31 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 24 வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவிகள்; கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்குச் செல்லும் 24 வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் செல்லும் இடங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
Jan 31, 2025 18:01 IST
கடலூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இருவர் மரணம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இருவர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
-
Jan 31, 2025 17:13 IST
காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல்
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிராம கமிட்டி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது. நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகரத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறி வாக்குவாதம் நடைபெற்றது
-
Jan 31, 2025 17:08 IST
மதுரையில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்
மதுரை சோழவந்தான் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். தற்காலிக ஓட்டுநர் பிரேம்குமார் என்பவர் மதுரை அண்ணா பேருந்து நிலையம் நோக்கி பேருந்தை அதிவேகமாக இயக்கியுள்ளார். அப்போது நிலை தடுமாறிய பேருந்து, வைகை ஆற்றுக்கரை ஓரம் உள்ள 10 அடி பள்ளத்தில் இறங்கி தென்னை மரத்தின் மீது பலமாக மோதியது .இதில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Jan 31, 2025 16:44 IST
கள்ளச்சாராய வழக்கு - சிபிஐ மனு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிஐ மனு கொடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சிபிஐ அதிகாரிகள் மனு கொடுத்துள்ளனர்.
-
Jan 31, 2025 16:43 IST
உலக நன்மைக்காக நடைபெற்ற யாகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
சீர்காழியை அடுத்த புத்தூர் அருகே கோவிலில் உலக நன்மைக்காக நடைப்பெற்ற யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குமிளங்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை , மழை வளம் உள்ளிட்டவை வேண்டி யாகம் நடைபெற்றது. முன்னதாக யாகத்தை தேவேந்திர அடிகளார் நாகாத்தம்மன் அருள் பெற்று துவங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
-
Jan 31, 2025 16:42 IST
கோயிலில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் - கொதித்தெழுந்த மக்கள் போராட்டம்
அறந்தாங்கி அருகே அறநிலைய துறைக்கு கோவில் சொந்தமானது என அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வணி கிராமத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் அதிகாரிகள் ஒட்டிய நோட்டீஸை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து, மறியல் போராட்டத்தை ஊர்வணி கிராமமக்கள் கைவிட்டனர்.
-
Jan 31, 2025 16:03 IST
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்
தருமபுரி, திண்டுக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருப்பத்தூர், நெல்லை, திருவாரூர் ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
Jan 31, 2025 15:36 IST
வெடிகுண்டு தொடர்பான பேச்சு; சீமான் மீது வழக்கு
ஈரோடு கிழக்கு பரப்புரையில் வெடிகுண்டு குறித்து பேசியதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
Jan 31, 2025 15:29 IST
தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
நெல்லை, திண்டுக்கல், தருமபுரி உள்பட 9 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
Jan 31, 2025 14:55 IST
தோண்டி எடுக்கப்படும் ஜெகபர் அலி உடல்
புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூரில் புதைக்கப்பட்ட ஜெகபர் அலி உடல் தோண்டி எடுக்கப்படுகிறது விசாரணை அதிகாரி சிபிசிஐடி ஆய்வாளர் புவனேஸ்வரி முன்னிலையில் ஜெகபர் அலி உடலை தோண்டி எடுக்கும் பணி தீவிரம்
-
Jan 31, 2025 13:48 IST
கோவையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
"சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்புலகம் பன்முக ஆய்வு" என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. சிந்தனை கவிஞர் கவிதாசன் பன்னாட்டு கருத்தரங்கின் தகவலை வெளியிட்டார். தமிழ் மீது இருக்கக்கூடிய ஆர்வம் குறைந்து வருவதாக போக்கு இருக்கிறது. தற்போது மேல்நிலை வகுப்புகள் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பிளஸ் - 1 படிப்பவர்களுக்கு தமிழ் கிடையாது அந்த அளவிற்கு தமிழ் மீது இருக்கக்கூடிய ஆர்வம் குறைந்து வருவது வேதனை அளிப்பதாகவும் அவற்றை மாற்றி அமைப்பதற்காக தான் இத்தகைய பன்னாட்டு கருத்தரங்கங்கள் நடைபெறுகிறது என சிந்தனை கவிஞர் கவிதாசன் தெரிவித்தார்.
-
Jan 31, 2025 13:19 IST
கண்ணீரில் ராமேஸ்வர மீனவர்கள் குடும்பத்தினர்
"தூங்கி எழுந்ததும் அப்பா எங்கனு புள்ளைங்க கேட்டா நாங்க எங்க போவோம்?" - கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் பேட்டி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். ஏராளமானோர் பங்கேற்பு.
-
Jan 31, 2025 13:18 IST
நெல்லை புத்தக கண்காட்சி
"சமூகவலைதள Addiction-ல் இருந்து வெளிய வரணும்னா இத பண்ணுங்க.." நெல்லையில் நடைபெறும் 8வது பொருநை புத்தகத் திருவிழா பற்றிக் கேட்டதும், பட்டிமன்ற பேச்சாளர்போல கல்லூரி மாணவி ஒருவர் பட பட வென பேசியுள்ளார்.
-
Jan 31, 2025 13:16 IST
ராமேஸ்வரம் பாம்பன் பாலம்
ராமேஸ்வரம்: பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தில், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலை இயக்கி சோதனை நடத்திய ரயில்வே துறை அதிகாரிகள். திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதை அடுத்து, மேடை அமைத்து ஒத்திகையுத் நடைபெற்று வருகிறது.
-
Jan 31, 2025 11:17 IST
ஈரோடு-சம்பல்பூர் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகளின் வசதிக்காக ஈரோட்டில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூர் ரெயில் நிலையத்திற்கு செல்லும் சிறப்பு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி, ஈரோட்டில் இருந்து வருகிற (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சம்பல்பூர் செல்லும் சிறப்பு ரெயிலில் (வண்டி எண்-08312) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி மற்றும் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
அதேபோல, சம்பல்பூரில் இருந்து வருகிற 5-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ஈரோடு வரும் சிறப்பு ரெயிலிலும் (08311) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி மற்றும் 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது." என்று கூறப்பட்டுள்ளது.
-
Jan 31, 2025 09:28 IST
சேலத்தில் வெடித்துச் சிதறிய சிலிண்டர்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சாலையில் வெள்ளைக்கோடு வரையும் பணியின்போது வாகனத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் திடீரென பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில் மாதவன் என்ற இளைஞர் காலில் தீ காயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் அப்போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்படுள்ளது.
-
Jan 31, 2025 08:52 IST
பாம்பன் புதிய ரயில் பாலம் - காலி ரயில் முதல் பயணம்
கன்னியாகுமரி - ராமேஸ்வரம், திருப்பதி - இராமேஸ்வரம் ஆகிய ரயில்களின் பராமரிப்பு பணிகள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை கன்னியாகுமரி - இராமேஸ்வரம் ரயிலின் காலிப்பெட்டி தொடர் புதிய பாம்பன் பாலத்தில் தன் முதல் பயணத்தை முத்திரை பதித்துள்ளது. மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் 25 நிமிடங்களில் காலை 06.25 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேர்ந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.