Coimbatore Madurai Trichy News: திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: தந்தை, மகன் கைது

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ssi mrder case

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 06, 2025 19:48 IST

    திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: தந்தை, மகன் கைது

    திருப்பூரில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டி படுகொ*ல செய்யப்பட்ட விவகாரம் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த கொலையாளிகளான தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கப்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைய வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைக்காக உடுமலை குடிமங்கலம் காவல் நிலையம் அழைத்துச் செல்ல உள்ளனர். 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



  • Aug 06, 2025 19:21 IST

    படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ உடலுக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறை இறுதி மரியாதை

    திருப்பூரில் படுகொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உடலுக்கு, 30 குண்டுகள் முழங்க காவல்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தலைமையில் காவல்துறையினர் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உடலை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் உள்ளிட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் தோளில் சுமந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்றினர்.



  • Advertisment
  • Aug 06, 2025 18:47 IST

    புகார் தர வந்தவர் தற்கொலை; நயினார் நாகேந்திரன் சந்தேகம்

    கோவை பெரியகடைவீதி காவல்நிலையத்திற்கு புகார் தர வந்தவர் தற்கொலை செய்தது சந்தேகம் தருகிறது என சிவகாசியில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்



  • Aug 06, 2025 18:18 IST

    எஸ்.எஸ்.ஐ வெட்டி கொலை; டி.ஜி.பி நேரில் அஞ்சலி

    திருப்பூரில் வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ சண்முகவேலுக்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில்குமார், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உள்ளட்டோர் அஞ்சலி செலுத்தி உடலை சுமந்து சென்று ஆம்புலன்சில் ஏற்றினர்



  • Advertisment
    Advertisements
  • Aug 06, 2025 17:56 IST

    திருப்பூரில் வரதட்சணை கொடுமை: இளம்பெண் தற்கொலை

    திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  திருப்பூரை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பிரீத்தி குடும்பத்தின் சார்பில் 120 சவரன் நகை, ரூ.25 லட்சம், இன்னோவா கார் உள்ளிட்டவை கணவர் வீட்டாருக்கு தரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Aug 06, 2025 17:39 IST

    திருவிழாவுக்கு அனுமதி - 7 நாட்களில் பரிசீலிக்க உத்தரவு

    திருவிழாவுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை 7 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலதாமதத்தால் திருவிழாவுக்கு வசூலித்த நிதி, நீதிமன்றத்தில் வழக்கு செலவுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரியே விழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும் என நீதிபதி தெரிவித்துள்ளார். கோவை பாப்பம்பட்டி வீரமாத்தி அம்மன் கோயில் திருவிழாவில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



  • Aug 06, 2025 17:32 IST

    கவின் கொலை; சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதற்காக நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.



  • Aug 06, 2025 16:57 IST

    சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் 2 பேர் சரண்

    உடுமலை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் சரணடைந்துள்ளனர். எஸ்எஸ்ஐ சண்முகவேலை வெட்டிக் கொலை செய்ததாக மூர்த்தி, அவரது மகன் தங்கபாண்டி கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு மகன் மணிகண்டனுக்கு வலைவீசி வருகின்றனர். திருப்பூர் உடுமலை அருகே சிக்கனூத்துவில் தந்தை மகன்களுக்கு இடையிலான தகராறை விசாரிக்கச் சென்ற போது எஸ்எஸ்ஐ கொலை செய்யப்பட்டார். இன்று காலை எஸ்எஸ்ஐ சண்முகவேலை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய மூன்று பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.



  • Aug 06, 2025 16:12 IST

    சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை

    ஈரோட்டில் 16 வயது சிறுமையை வன்கொடுமை செய்த வழக்கில் சூர்யா என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூர்யாவுக்கு 20 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



  • Aug 06, 2025 16:11 IST

    வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை - புகார்

    திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ்வர் - திருப்பூரைச் சேர்ந்த பிரீத்திக்கு 2024 செப்டம்பர்.15ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பிரீத்தி குடும்பத்தின் சார்பில் 120 சவரன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் தந்துள்ளனர். கணவர் வீட்டாருக்கு இன்னோவா கார் ஒன்றையும் பிரீத்தி வீட்டார் தரப்பில் தந்துள்ளனர். பிரீத்தி குடும்பத்தில் சொத்து விற்பனையில் ரூ.50 லட்சம் வருவதை கேட்டு கணவர் வீட்டார் துன்புறுத்தியதாக புகார்.



  • Aug 06, 2025 15:48 IST

    திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

    பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு 9-ந்தேதி (சனிக்கிழமை) விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது. அன்று காலை 9.25 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. இந்த ரயில் வழியில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், ஆண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 



  • Aug 06, 2025 15:07 IST

    தஞ்சையில் ரூ.2 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு

    தஞ்சை: கண்டியூரில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆக்கிரமிப்பு கட்டடங்களை அதிகாரிகள் அகற்றி நிலங்களை மீட்டனர்.



  • Aug 06, 2025 15:01 IST

    கவின் கொலை வழக்கு - சிபிசிஐடி தீவிர விசாரணை

    கவின் கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி போலீசார் கொலை நடந்த இடத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 



  • Aug 06, 2025 14:46 IST

    தம்பியை கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை

    உளுந்தூர்பேட்டை அருகே சொத்து தகராறில் தம்பியை கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் கமலக்கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறையுடன் ரூ.10,000 அபராதம் விதித்தது. 2016ல் குடும்ப சொத்து பிரிப்பது தொடர்பான தகராறில் தம்பி இளையராஜா மீது கொலை முயற்சி தாக்குதல் நடைபெற்றது.



  • Aug 06, 2025 14:05 IST

    எஸ்.ஐ., காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    புகார் அளிக்க வந்த நபர் கோவை கடைவீதி காவல் நிலையத்தில் உயிரை மாய்த்து கொண்ட விவகாரம். பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் என 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம், மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். 



  • Aug 06, 2025 13:18 IST

    ஆட்டோ கவிழ்ந்து 4 வயது சிறுவன் பலி

    நாய் குறுக்கே வந்ததால் தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ, தந்தை கண்முன்னே 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம். குழந்தையை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. 



  • Aug 06, 2025 12:28 IST

    தி.மு.க-வில் இணைந்த புதுக்கோட்டை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ  

    “அதிமுக போகிற போக்கே சரியில்லை" என்று குற்றம் சாட்டியுள்ள புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் தி.மு.க-வில் இணைந்துள்ளார்.  



  • Aug 06, 2025 12:23 IST

    சிறப்பு எஸ்.ஐ. கொலை - 6 தனிப்படைகள் அமைப்பு

    திருப்பூரில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் கொலை தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. தோட்டத்தில் பணியற்றி வந்த தந்தை, மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குடும்ப சண்டை தொடர்பான விசாரணைக்கு சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் சென்றுள்ளார். பிரச்சினைக்கு காரணமான தந்தை, மகன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்களை பிடித்து விசாரித்தால் மட்டுமே
     முழு விபரம் தெரிய வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார் கூறியுள்ளார். 



  • Aug 06, 2025 11:28 IST

    காவல்நிலையத்தில் இளைஞர் தற்கொலை - கோவை காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் 

    கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்திற்குள் இரவு 11 மணி அளவில் புகாரளிக்க வந்த நபர் முதல் தளத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் பணிக்கு போலீசார் வந்த போது, தூக்கு போட்ட நிலையில் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபர் யார் என்பது குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். 

    இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், "உதவி காவல் ஆய்வாளர் அறையில் தற்கொலை செய்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. காலையில் பணிக்கு வந்தவர்கள் அறையை திறந்து பார்த்து தான் தெரிகிறது. நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்ட உள்ளது. உயிரிழந்த நபர் ராஜன் (60) பேரூர் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உதவி ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளபடும். பணியில் இருந்த காவலர்கள் விசாரணை நடத்தி, கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையத்தில நடைபெற்ற தற்கொலை தான் இது. லாக்கப் டெத் கிடையாது என தெரிவித்தார்.



  • Aug 06, 2025 09:54 IST

    ராமேஸ்வர மீனவர்கள் 14 பேர் கைது

    தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே  இன்று ஒரே நாளில் மட்டும் தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த நிலையில் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை அட்டூழியம் எனவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

     



  • Aug 06, 2025 09:53 IST

    நெல்லையில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு

    நெல்லையில், மாற்று சமூகத்தை சேர்ந்த சிறுமியுடன் பழகிய 16 வயது சிறுவனை அரிவாளால் வெட்டியுள்ளனர். சிறுமியின் தம்பி உட்பட 5 சிறுவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அடைத்துள்ளனர். 



  • Aug 06, 2025 09:51 IST

    நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு எனக் குறிப்பிட்டு சென்னை வானிலை மையம்
    ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. 



  • Aug 06, 2025 09:50 IST

    திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ கொலை - 5 தனிப்படைகள் அமைப்பு

    திருப்பூர் - உடுமலை அருகே எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றிய தங்கராஜ், மூர்த்தி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று தந்தை, மகன் சண்டையை பிரித்து மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல். 

    ஆத்திரத்தில் எஸ்.எஸ்.ஐ சண்முகவேலை தங்கராஜ் வெட்டிக் கொன்றுள்ளார். மற்றொரு காவலரையும் வெட்ட முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவான தந்தை தங்கராஜ், மகன்கள் மூர்த்தி மற்றும் மணிகண்டனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்றுகிறது. 



  • Aug 06, 2025 09:47 IST

    திருப்பூரில் எஸ்.எஸ்.ஐ கொலை - நிவாரணம் அறிவித்த ஸ்டாலின் 

    திருப்பூர் - உடுமலை அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. "சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. சண்முகவேல் குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

     



Madurai Coimbatore Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: