/indian-express-tamil/media/media_files/2025/07/28/sivagangai-madapuram-ajith-kumar-custodial-death-case-cbi-investigate-for-15th-day-tamil-news-2025-07-28-19-58-16.jpg)
Sivagangai Madapuram Ajith Kumar Custodial Death Case:
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Aug 09, 2025 14:02 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அண்மையில் 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை 11 அட்டூழியம்.
-
Aug 09, 2025 13:11 IST
சாத்தூர் வெடி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். விஜயகரிசல் குளம் கிராமத்தில் வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
Aug 09, 2025 12:31 IST
தீண்டாமை சுவர் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
கரூர் மாவட்டம் முத்துலாடம்பட்டி தீண்டாமை சுவர் அகற்றுவதை எதிர்த்து நள்ளிரவில் ஒரு பிரிவினர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து முத்துலாடம்பட்டியில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு, தீண்டாமை சுவர் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
-
Aug 09, 2025 11:40 IST
மதுபான மனமகிழ் மன்றம் - மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை
மதுரை செக்கானூரணியில் பள்ளி அருகே மதுபான மனமகிழ் மன்றத்துக்கு தடை கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான விடுதிக்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் கூறியதை மீறி அனுமதி தந்தால் கடையை இடிக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனு குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Aug 09, 2025 11:21 IST
அஜித் குமார் கொலை வழக்கு - பொய் புகார் என சி.பி.ஐ சந்தேகம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், காரில் வைத்திருந்த நகை மாயமானதாக நிகிதா புகார் அளித்த விவகாரத்தில் கோவில் பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை எனவும், அஜித் மீது நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் எனவும் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணையில், நிகிதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததும் தெரிய வந்துள்ளது
-
Aug 09, 2025 10:51 IST
மதுரை அழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழா
மதுரை அழகர் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவின் 9வது நாளான இன்று கோலாகலமாக நடந்த திருத்தேரோட்டம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்
-
Aug 09, 2025 10:25 IST
விமான அறையில் லேசர் லைட் அடித்த மர்ம நபர்கள்: போலீஸ் விசாரணை
பெங்களூரில் இருந்து கோவை வந்த விமானத்தின் விமானி அறையில் மர்ம நபர்கள், லேசர் லைட் அடித்த நிலையில், தரையிறங்கிய பின்னர் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார் இதனையத்து லேசர் லைட் அடிக்கப்பட்டது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Aug 09, 2025 10:14 IST
திருவண்ணாமலை: கொட்டும் மழையிலும் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமியான, நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் பக்தர்கள் முண்டியடித்து ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Aug 09, 2025 10:14 IST
திருப்பத்தூரில் கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ளது. இதன் காரணமாக இன்று (09-08-2025) வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை என்பதால் ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.