/indian-express-tamil/media/media_files/2025/08/07/tirupur-2025-08-07-11-03-57.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Aug 07, 2025 12:33 IST
மினி வேன் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு
கேரள மாநிலம் கொல்லம் கொட்டரைகரையில் மினி வேன் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த 2 பெண்கள் மீது மினி வேன் மோதி விபத்து ஏற்பட்டது.
-
Aug 07, 2025 11:06 IST
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் பெண் மரணம் - 3 பேர் கைது
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பிரீத்தி திருமணமான 11 மாதத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரீத்தியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
-
Aug 07, 2025 10:58 IST
உடுமலை என்கவுன்ட்டர் - மாவட்ட எஸ்.பி விளக்கம்
திருப்பூர், உடுமலை சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3-வது நபர் மணிகண்டன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். "கொலைக்கு பயன்படுத்திய அதே அரிவாளை கொண்டு போலீசாரை தாக்க முயன்றதால் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது. மணிகண்டன் அரிவாளை எடுத்து போலீசாரை தாக்க முயன்றபோது தான் துப்பாக்கியால் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரிவாளை கீழே போட சொல்லி பலமுறை அறிவுறுத்தியும் மணிகண்டன் கேட்கவில்லை 2 முறை துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு மணிகண்டன் மீது பாய்ந்து உயிரிழந்துள்ளர்." என்று திருப்பூர் மாவட்ட எஸ்.பி கிரிஸ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-
Aug 07, 2025 10:26 IST
திருப்பூரில் மீண்டும் ஒரு ரிதன்யா!
திருமணமான 10 மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட இளம்பெண், 125 சவரன் நகை, 25 லட்சம் ரொக்க பணம், 38 லட்சம் மதிப்புள்ள கார் என இத்தனையும் கொடுத்தும் போதாமல், பூர்வீக சொத்தில் ரூ.50 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமை என்று உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
-
Aug 07, 2025 10:25 IST
கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு - வனத் துறை அறிவிப்பு
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் கோவை குற்றாலம் அருவி பாதுகாப்புக் கருதி மூடப்பட்டது. இந்நிலையில் அருவிக்கு வரும் நீரின் வேகம் சீராக உள்ளதால் மீண்டும் இன்று முதல் கோவை குற்றாலம் திறக்கப்படுவதாக வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.