/indian-express-tamil/media/media_files/2025/03/27/xvp8LXTQMfpQVwXMzCsH.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Aug 08, 2025 14:16 IST
மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கூண்டுகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில், புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வனத்துறையினர் இரவு, பகலாக ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்
-
Aug 08, 2025 13:01 IST
சட்டவிரோத குவாரி விபத்தில் 6 பேர் இறந்த சம்பவம் - அறிக்கை தர மதுரை ஐகோர்ட் உத்தரவு
சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளைத் தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கிராமத்தில் கல்குவாரி விபத்தில் 6 பேர் இறந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், கல்குவாரி விபத்தில் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
-
Aug 08, 2025 13:00 IST
ஆவணி அவிட்டம்: திருத்தணி முருகன் கோயில் நடை நாளை அடைப்பு
ஆவணி அவிட்டம் முன்னிட்டு திருத்தணி முருகன் கோயில் நடை நாளை அடைக்கப்படுகிறது. திருத்தணி முருகன் கோயில் நடை நாளை நண்பகல் 12 - 3.30 மணி வரை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Aug 08, 2025 12:32 IST
வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு - கடலூர் கலெக்டர் அறிவிப்பு
"2025-26ஆம் ஆண்டிற்கு கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்ட அலுவலத்தின் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 09.08.2025 சனிக்கிழமை அன்று பெண்ணாடம், லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை நடைபெற இருந்தது. இம்முகாம் சில நிர்வாக காரணங்களினால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது" என்று மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர்
-
Aug 08, 2025 11:40 IST
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 08, 2025 10:35 IST
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, காஞ்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னைய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Aug 08, 2025 10:11 IST
மதுரையில் வீடு புகுந்து சிறுவனை கடித்த தெருநாய்
மதுரையில் பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை வீட்டிற்குள் புகுந்த தெருநாய் கடித்தது. செந்தில் (8) அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற தந்தை முத்துசாமியையும் நாய் கடித்துள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தெருநாய் பிடிபட்டது.
-
Aug 08, 2025 09:20 IST
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 50% நிறைவு: மத்திய அரசு தகவல்
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவுபடுத்த தாக்கலான வழக்கில், 2026 ஜனவரியில் முதற்கட்ட திட்டப் பணி நிறைவடையும். தற்போது 50 சதவீத பணி முடிந்துள்ளது என மத்திய அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
-
Aug 08, 2025 08:47 IST
நெல்லை: திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுககனி திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார். திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரப்படி நேற்று (7.8.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
-
Aug 08, 2025 08:40 IST
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூருக்கு ஆரஞ்சு அலர்ட்
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஆக.8) முதல் ஆக.13 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று திருவண்ணாமலை, வேலூா் மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழையும், சென்னையில் இன்று ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு ய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.