/indian-express-tamil/media/media_files/2025/07/11/palani-rope-car-2025-07-11-16-04-39.jpg)
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும், பரிசல் சவாரி செய்வதற்கும், அருவிகளில் குளிக்கவும் 17 நாட்களாக தடை நீடிக்கிறது.
-
Jul 11, 2025 16:27 IST
தார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஆசூர் பகுதியில் இயங்கி வரும் தார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தார் உருக்கும் பணியின் போது அதிவெப்பத்தால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தார் கொழுந்துவிட்டு எரிவதால் வானுயர கரும்புகை எழுந்துள்ளது. ஆசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியுற்று வருகிறார்கள். இதனிடையே, உத்திரமேரூர் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
-
Jul 11, 2025 16:05 IST
பழனி ரோப்கார் ஒருமாதம் இயங்காது - கோயில் நிர்வாகம் அறிவிப்பு
பழனி முருகன் கோயிலில் ரோப் கார் ஒரு மாதத்துக்கு இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 15 முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
-
Jul 11, 2025 15:23 IST
கனமழை
நீலகிரி: குன்னூர் மற்றும் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது
-
Jul 11, 2025 15:14 IST
தார் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து
Video: Sun News
காஞ்சிபுரம் மாவட்டம் ஆசூர் பகுதியில் இயங்கிவரும் தார் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து
— Sun News (@sunnewstamil) July 11, 2025
தார் என்பதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் நீடிக்கிறது. தீயணைப்புப் படையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்#SunNews | #Kanchipuram | #FireAccident pic.twitter.com/8qeThGU44Z -
Jul 11, 2025 15:03 IST
கோவை குண்டுவெடிப்பு: திடுக்கிடும் தகவல்கள்
1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா 29 ஆண்டுகளுக்குப் பிறகு கைது. பெயரை ஷாஜகான் என மாற்றிக்கொண்டு மிளகாய் வியாபாரம் செய்து வந்த டெய்லர் ராஜாவுக்கு சாதிக் ராஜா என்ற பெயரும் உண்டு
அல் உம்மா இயக்க தலைவர் பாஷாவின் வலதுகரம் டெய்லர் ராஜா மீது பல்வேறு கொலை வழக்குகளும் உள்ளன. கர்நாடகாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
-
Jul 11, 2025 14:30 IST
சட்டவிரோத குவாரிகள்: நீதிமன்றம் சரமாரி கேள்வி
திண்டுக்கல், வேடசந்தூரில் செயல்பட்டு வரும் சட்டவிரோத குவாரியை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஜூலை 16ல் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவு
அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்ட விரோத குவாரி தொடர்கிறதா? அல்லது வேறுவிதமாக நடக்கின்றனவா?அதிகாரிகளின் இவ்வாறான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை“ - நீதிமன்றம் -
Jul 11, 2025 13:06 IST
நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு
ஜூலை 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Jul 11, 2025 11:32 IST
அவிநாசி ரிதன்யா வழக்கு - மாமியாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
அவிநாசியில் புதுமணப்பெண் ரிதன்யாவின் தற்கொலை வழக்கில் கைதான மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனுவை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
-
Jul 11, 2025 10:42 IST
கிளீனரின் செயலால் பறிபோன 2 உயிர்
திருவள்ளூரில் கிளீனர் இயக்கிய சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர், காவலாளி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 18 வயதான கிளீனரை கைது செய்த சோழவரம் காவல்துறை, விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது.
-
Jul 11, 2025 10:22 IST
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
ஆனி மாத பௌர்மணி கிரிவலத்தை முடித்து கொண்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பதர்கள் கூட்டம் அலைமோதியது. ராமேஸ்வரம் -திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் ஏற பக்தர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Jul 11, 2025 10:12 IST
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு - ஸ்டாலின் புகழாரம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். குன்றக்குடி அடிகளார் ஒரு சமத்துவச் சிந்தனையாளர் என்றும், அவர் பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயத்தைப் போற்றினார் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அடிகளாரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும், சோவியத் யூனியன் பயணத்தால் உந்தப்பட்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் பாராட்டப்பட்ட 'குன்றக்குடிக் கிராமத் திட்டம்' உருவாவதற்குக் காரணமாக அமைந்தன. இத்திட்டம், அடிகளாரின் பொதுவுடைமைச் சிந்தனைகளுக்கு ஒரு சான்றாக விளங்கியது. குன்றக்குடி அடிகளாரின் புகழ் என்றும் வாழும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புகழாரத்தில் தெரிவித்துள்ளார்.
-
Jul 11, 2025 07:57 IST
திருவண்ணாமலை கிரிவலம் - 10 லட்சம் பேர் பங்கேற்பு
ஆனி மாத பெளர்ணமியை ஒட்டி திருவண்ணாமலையில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் சென்ற நிலையில், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
-
Jul 11, 2025 07:54 IST
வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
புதுக்கோட்டை, விராலிமலையில் பெண் தலைமை காவலர் வீட்டின் பூட்டை உடைத்து 1.5 சவரன் தங்க நகை, 20,000 பணம் கொள்ளை
-
Jul 11, 2025 07:52 IST
ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து
ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 28000 கன அடியாக குறைவு! பரிசல் சவாரி செய்வதற்கும், அருவிகளில் குளிக்கவும் 17 நாட்களாக தடை நீடிக்கிறது.
-
Jul 11, 2025 07:26 IST
ஒசூரில் அதிகரிக்கும் நாய் தொல்லை: பொதுமக்கள் கடும் அவதி
ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுவரை நாய் கடியால் ஒரு சிறுவன் உட்பட 8 பேர், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-
Jul 11, 2025 07:24 IST
பள்ளி மாணவர்கள் மீது கார் மோதி விபத்து
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில், நேற்று மாலை 4 வழி சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கிணத்துக்கடவு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.