Coimbatore, Madurai, Trichy Live News: திருப்புவனம் அஜித் மரணம் - வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBI enquiry

புராதன சின்னமாக செஞ்சி கோட்டை: தமிழகத்தின் செஞ்சி கோட்டையை புராதன சின்னமாக யுனிஸ்கோ அறிவித்துள்ளது. கோட்டையில், கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள், நெற்களஞ்சியங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. 

  • Jul 12, 2025 14:48 IST

    ரிதன்யா தந்தை ஐ.ஜி அலுவலகத்தில் மனு

    திருப்பூரில், புதிதாக திருமணம் ஆன ரிதன்யா தற்கொலை செய்த வழக்கில், விசாரணை அதிகாரியை மாற்றக் கோரி அவரது தந்தை அண்ணாதுரை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். விசாரணை தாமதமாக நடப்பதாக கூறிய அவர், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



  • Jul 12, 2025 14:28 IST

    திருப்புவனம் அஜித் மரணம் - வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ

    திருப்புவனம் அஜித் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ, தற்போது விசாரணையை தொடங்கியது. முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



  • Advertisment
  • Jul 12, 2025 13:44 IST

    இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு

    வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி-தனலெட்சுமி தம்பதியின் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் மருந்தகங்களில் வாங்கிய ஆங்கில மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. பின் நாட்டு மருந்தும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து மூச்சுத்திணறி உயிரிழப்பு



  • Jul 12, 2025 13:07 IST

    நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

    நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தது போலீஸ். போலீசார் வருவதை கண்டதும் தப்பிய கடல் அட்டை வியாபாரி உள்ளிட்டோருக்கு வலைவீசப்பட்டுள்ளது. போலீசார் பறிமுதல் செய்த 150 கிலோ கடல் அட்டையை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.



  • Advertisment
    Advertisements
  • Jul 12, 2025 12:55 IST

    விக்கிரவாண்டியில் தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம்

    விக்கிரவாண்டியில் தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தென்னரசு என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதில் அவரது தாய், மனைவி, தம்பி கவலைக்கிடமாக உள்ளனர். ஆன்லைன் மூலம் தென்னரசு ஏர் கன் துப்பாக்கி வாங்கியதாக போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.



  • Jul 12, 2025 12:50 IST

    மதுரை மாநகராட்சி முறைகேடு - புதூரில் பா.ஜ.க. ஆர்ப்பாடம் 

    மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து பா.ஜ.க., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் புதூர் பகுதியில் ஆர்ப்பாடம் நடைபெற்று வருகிறது.



  • Jul 12, 2025 11:35 IST

    குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

    தஞ்சாவூர், திருவேங்கட உடையான்பட்டியில்  குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 8ம் வகுப்பு மாணவன் ஜஸ்வந்த், 5ம் வகுப்பு மாணவர்கள் பாலமுருகன், மாதவன் ஆகிய 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். பள்ளியிலிருந்து வெகுநேரமாகியும் திரும்பாத சிறுவர்களை  பெற்றோர் தேடியபொழுது நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்படுள்ளனர். 



  • Jul 12, 2025 11:21 IST

    மதுரை சரித்திர பதிவேடு குற்றவாளி சிவமணி கொலை 

    மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சிவமணி, தனக்கு கீழ் உள்ள ரவுடிகளை இழிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரவுடி சிவமணியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய கூட்டாளிகள், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று போதையில் இருந்த சிவமணியை காருக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பான போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. 



  • Jul 12, 2025 10:37 IST

    லேட்டா வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு 

    ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வு எழுத நேரம் தவறி வந்த தேர்வர்கள்,10க்கும் மேற்பட்டோரை தேர்வெழுத அனுமதிக்காமல், அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதேபோல், ஆம்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால்,  தேர்வர்கள் பலரும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்னர். 



  • Jul 12, 2025 09:29 IST

    அ.தி.மு.க தொண்டர்களை குழப்பிய எடப்பாடி பழனிச்சாமி

    2026 தேர்தல் முடிந்தவுடன் 30 லட்சம் மக்களுக்கான மகளிர் உரிமைத்தொகையை நிறுத்திவிடுவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செஞ்சியில் பேசியது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,



  • Jul 12, 2025 08:39 IST

    கடலூர் ரயில் விபத்து: கேட் மூடாததை ஒப்புக்கொண்ட கேட் கீப்பர்

    கடலூர் ரயில் விபத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை மூடாமலே, மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஸ்டேஷன் மாஸ்டருக்கு அனுப்பியுள்ளார். விபத்துக்கு பின் ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என்று ஒப்புக்கொண்டது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது,



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: