/indian-express-tamil/media/media_files/2025/06/25/eps-meet-2025-06-25-10-43-19.jpg)
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் 91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
-
Jul 07, 2025 10:39 IST
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்
"அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் உங்கள் மன குளிரும் வகையில் செயல்படுத்தப்படும்" என இபிஎஸ் கூறினார். மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
-
Jul 07, 2025 10:38 IST
தேர்தல் பரப்புரையை தொடங்கினார் பழனிசாமி
2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை கோவையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். Zபிளஸ் பாதுகாப்புடன் கோவை வந்த பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் பழனிசாமி வழிபாடு செய்தார்.
-
Jul 07, 2025 10:10 IST
சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். வனபத்திரகாளி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய இபிஎஸ் பரப்புரை ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவுபெறும். இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி 33 சட்டமன்றத் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
-
Jul 07, 2025 10:08 IST
ராஜநாகத்தை பிடித்த வனத்துறை பெண் ஊழியர்
திருவனந்தபுரம் பகுதியில் பெரிய ராஜநாகம் முதன்முதலாக சிக்கியிருப்பது இதுவே முதன்முறை18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவமகாக வனத்துறை பெண் ஊழியர் பிடித்தார்.
-
Jul 07, 2025 08:08 IST
5 மாவட்டங்களில் மழை - வானிலை மையம்
கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, குமரியில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Jul 07, 2025 07:51 IST
இனிதே தொடங்கிய திருச்செந்தூர் குடமுழுக்கு - ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு
திருச்செந்தூர் குடமுழுக்கு விழா இன்று தொடங்கிய நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் கூடி இருந்த பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. திருச்செந்தூர் கடற்கரை, கோவில் வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்
-
Jul 07, 2025 07:41 IST
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
2026 தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் இபிஎஸ் பரப்புரை ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவு பெறுகிறது. இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
-
Jul 07, 2025 07:15 IST
இனிதே தொடங்கிய திருச்செந்தூர் குடமுழுக்கு
அறுபடை வீடுகளில் 2 ஆவது படைவீடான திருச்செந்தூர் கோயிலில் இன்று காலை 6.15 முதல் 6.50 க்குள் புனித நீர் ஊற்றி கோயில் நடைபெற்றது. திருச்செந்தூரில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. "கந்தனுக்கு அரோகரா...முருகனுக்கு அரோகரா" எனக் கோஷமிட்டு பக்தர்கள் பக்திப் பரவசமடைந்தார்கள்.
இந்த குடமுழுக்கு விழாவை காண திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே வந்து குவியத் தொடங்கினர். இன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகம், நகர்ப்பகுதியில் என ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.