Coimbatore, Madurai, Trichy News Live Updates: கேட் திறந்துதான் இருந்தது - காயமடைந்த மாணவரும் தகவல்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
accident school1

Tamilnadu Districts Live Update In tamil: தூத்துக்குடி விவேகானந்தர் காலனி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு ஃபைபர் படகு மூலம் கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான சுமார் 1200 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்திய ஃபைபர் படகுகளையும் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

  • Jul 08, 2025 13:30 IST

    கேட் திறந்துதான் இருந்தது; நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை - பள்ளி வேன் ஓட்டுநர்

    "நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை; கேட் கீப்பர் அந்த இடத்தில் இல்லை. நான் செல்லும்போது கேட் திறந்திருந்தது; அதனால்தான் வாகனத்தை இயக்கினேன்" என்று பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் கூறியுள்ளார். 



  • Jul 08, 2025 13:20 IST

    பள்ளி வேனில் நாள்தோறும் பயணிக்கும் மாணவன் பேட்டி

    வழக்கமாக வேன் வரும்போது கேட் மூடப்பட்டிருக்கும்; இன்று திறந்துதான் இருந்தது என்று விபத்துக்குள்ளான பள்ளி வேனில் நாள்தோறும் பயணிக்கும் மாணவன் பேட்டியளித்துள்ளார்.



  • Advertisment
  • Jul 08, 2025 13:11 IST

    இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை: கனிமொழி எம்.பி சாடல்

    கடலூரில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; ‘கடலூரில் பள்ளி வாகனம் மீது இரயில் மோதிய விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.


    இத்துயர்மிகு வேளையில், அக்குடும்பங்களின் கரம்பற்றி எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளும் விரைந்து நலம்பெற விழைகிறேன்.

    இந்த நாட்டில் மொத்தமுள்ள 68,584 கி.மீ தூரம் ரயில்வே வழித்தடத்தில் வெறும் 1,548 கி.மீ மட்டுமே ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டிவிட்டோம்.

    இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், ஒன்றிய அரசுக்கு இதில் துளியளவும் கவலை இல்லை” என தெரிவித்துள்ளார்.



  • Jul 08, 2025 12:38 IST

    கடலூர் ஆட்சியர் மீது தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு

    செம்மங்குப்பத்தில் சுரங்கப்பாதை அமைக்க ஒரு வருடமாக ஆட்சியர் அனுமதி கொடுக்கவில்லை. சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் அனுமதி தரவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 



  • Advertisment
    Advertisements
  • Jul 08, 2025 12:19 IST

    கேட் திறந்துதான் இருந்தது: மாணவர் விஸ்வேஷ்

    வழக்கமாக செல்லும் பாதையில் சென்றபோது கேட் திறந்துதான் இருந்தது, சிக்னல் எதுவும் போடப்படவில்லை, ரயில் வரும் சத்தம் கூட கேட்கவில்லை, பள்ளி வேன் கடந்து சென்றபோது ரயில் மோதியது என விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ் தெரிவித்துள்ளார். 



  • Jul 08, 2025 11:59 IST

    கேட் திறந்து தான் இருந்தது - பள்ளி வேன் ஓட்டுநர்

    ரயில்வே கேட் திறந்து தான் இருந்தது; அதனால் தான் பள்ளி வேனை இயக்கினேன். ரயில் போய்விட்டது என நினைத்துக் கொண்டு நான் பள்ளி வேனை இயக்கினேன் என பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் கூறியுள்ளார்.



  • Jul 08, 2025 11:46 IST

    அஜித்குமார் வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்

    மடப்புரம் அஜீத்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். டிஜிபி தரப்பிலும் நிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக கோர்ட் கிளையில் அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அஜீத்குமார் கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் ஐகோர்ட் கிளையில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.



  • Jul 08, 2025 11:44 IST

    “தமிழ் தெரியாத கேட் கீப்பர்...”

    அந்த கேட் கீப்பர் மது அருந்திவிட்டு தூங்கிவிட்டார் என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமின்றி அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் மொழி பிரச்சனை இருந்துள்ளது. முதலில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை இதுபோன்ற முக்கிய இடங்களில் பணியமர்த்துங்கள்; ரயில்வேயில் கவனக்குறைவுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு முக்கிய காரணம் என சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் கூறியுள்ளார்.  



  • Jul 08, 2025 11:11 IST

    ஒரே குடும்பத்தில் சகோதரன், சகோதரி உயிரிழந்த சோகம்

    கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்க்கப்பட்ட மாணவர் செழியன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செழியனின் சகோதரி சாருமதியும் உயிரிழந்த நிலையில் செழியனும் உயிரிழந்தார்.



  • Jul 08, 2025 11:08 IST

    கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது

    கடலூர் செம்மங்குப்பம் விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்தது காவல்துறை. ரயில்வே கேட்டை மூடாததால் 3 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Jul 08, 2025 10:58 IST

    கடலூர் பள்ளி வேன் விபத்து - ஸ்டாலின் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு 

    கடலூர், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவியுள்ளார். 

    படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50000 வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். 



  • Jul 08, 2025 10:18 IST

    கடலூர் வேன் விபத்து - சம்பவ இடத்திற்கு விரையும் அமைச்சர்கள் 

    கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகுள்ளனாது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்



  • Jul 08, 2025 10:18 IST

    கடலூர் பள்ளி வேன் விபத்து - கேட் கீப்பர் சஸ்பெண்ட்

    கடலூர் செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.



  • Jul 08, 2025 10:12 IST

    பள்ளி வேன் விபத்து - 3 குழந்தைகள் பலி

    "கடலூர், செம்மங்குப்பத்தில் பள்ளி  வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 



  • Jul 08, 2025 09:42 IST

    ரயில் - பள்ளி வேன் மோதி விபத்து: முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

    கடலூர் அருகே மூடப்படாத ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரயில் மோதிய விபத்து எதிரொலி காரணமாக முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



  • Jul 08, 2025 09:36 IST

    ரயில் விபத்து - சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு குழு

    கடலூர், செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து சம்பவ இடத்திற்கு  விரைந்தது ரயில்வே பாதுகாப்பு குழு. குறிப்பிட்ட நேரத்தில் கேட் கீப்பர் எங்கு  சென்றார் என்பது குறித்து விசாரணை. விபத்தில் 6 பேர் படுகாயம் - திருச்சி ரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு



  • Jul 08, 2025 09:16 IST

    கேட் கீப்பரில் அலச்சியத்தால் தான் ரயில் – பள்ளி வேன் மோதி விபத்து

    கேட் கீப்பரில் அலச்சியத்தால் தான் ரயில் – பள்ளி வேன் மோதி விபத்து நடந்தது என்று விபத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால், பள்ளி வேன் கடந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. கேட் கீப்பர் அலச்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். செம்மங்குப்பம் ரயில்வே கேட் மூடப்படாததால், விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



  • Jul 08, 2025 08:58 IST

    கோவையில் நடைபயிற்சியின் போது பொதுமக்களுடன் ஈ.பி.எஸ். சந்திப்பு

    மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கோவையில் பிரச்சாரம் தொடங்கியுள் எடப்பாடி பழனிச்சாமி, கோவையில் நடைபயிற்சியின் போது பொதுமக்களுடன் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.அதிமுகவுக்கு கோவை ராசியான மாவட்டம்; அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை நிறைவேற்றினோம், 2026 தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம்.  சுற்றுப்பயணத்தில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர், திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று கூறியுள்ளார்.



  • Jul 08, 2025 08:54 IST

    பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து

    கடலூர் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து. படுகாயம் அடைந்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது  விபத்து - போலீசார் விசாரணை



Tamilnadu Madurai Coimbatore Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: