Coimbatore, Madurai, Trichy Live News: திருப்பூர் அருகே பயங்கரம்: அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்- வீடுகள் தரைமட்டம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tiruppur

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

  • Jul 09, 2025 16:53 IST

    ராமேஸ்வரம் கோயிலில் ஜப்பானியர்கள் வழிபாடு

    வீடியோ: சன் நியூஸ்



  • Jul 09, 2025 16:30 IST

    மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 42,250 கன அடி நீர்வரத்து

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 42,250 கன அடியாக உள்ளது.

    அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 42,250 கன அடியாகவும் உள்ளது



  • Advertisment
  • Jul 09, 2025 15:57 IST

    பாலக்கரை அருகே கரை ஒதுங்கிய இளைஞரின் உடல்

    ஞ்சை: கடந்த 5ம் தேதி திருவையாறு அருகே காவிரி ஆற்றில் குளிக்கும் போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் இன்று பாலக்கரை அருகே கரை ஒதுங்கியது

    உயிரிழந்த சத்தியசீலனின் (22) உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



  • Jul 09, 2025 15:37 IST

    அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்: 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டம்

    திருப்பூர்: கல்லூரி சாலை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததில் 42 தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின.
    புலம்பெயர் தொழிலாளர்கள் தகர கொட்டகை வீடுகளில் தங்கியிருந்த நிலையில், தொடர்ச்சியாக 4 சிலிண்டர்கள் வெடித்துள்ளன. உயிர்ச்சேதம் இல்லை என தகவல்



  • Advertisment
    Advertisements
  • Jul 09, 2025 15:36 IST

    ராஜினாமா ஏற்பு

    மதுரை மாநகராட்சியில் 5 மண்டலத் தலைவர்கள், 2 குழுத் தலைவர்களின் ராஜினாமாவை ஆணையர் ஏற்றுக்கொண்டார்



  • Jul 09, 2025 15:26 IST

    பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு பத்திரப்பதிவு

    பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு 5 கிராமங்களை சேர்ந்த 19 நில உரிமையாளர்கள் நிலம் வழங்குவதற்கு சம்மதம்.

    காஞ்சிபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.9.22 கோடி மதிப்புடைய நிலத்திற்கு பத்திரப்பதிவு தொடங்கியது



  • Jul 09, 2025 14:38 IST

    சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் மருத்துவமனையில் அனுமதி

    ராமநாதபுரம் மாவட்டத்தில், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் சிவாஜி, காவல்துறையினரால் தாக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.



  • Jul 09, 2025 14:27 IST

    சிவகிரி இரட்டை கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்

    ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. 



  • Jul 09, 2025 13:42 IST

    கடலூரில் கேட் கீப்பராக தமிழர் நியமனம்

    கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விவகாரத்தில், புதிய கேட் கீப்பராக தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Jul 09, 2025 12:53 IST

    parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..? ஐகோர்ட் கிளை கேள்வி

    parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..? என ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. parental window மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி 2019-ல் ஐகோர்டில் மனு தக்கல் செய்யப்பட்டது.



  • Jul 09, 2025 12:44 IST

    செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமனம்!

    செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது சர்ச்சையான நிலையில் தமிழர் நியமிக்கப்பட்டார்.



  • Jul 09, 2025 12:37 IST

    ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

    ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மனு மீதான விசாரணையை 11ம் தேதிக்கு திருப்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜாமின் வழங்க கூடாது என ரிதன்யாவின் தந்தை சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.



  • Jul 09, 2025 11:57 IST

    தஞ்சாவூர் – கும்பகோணம் புறவழிச் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    தஞ்சாவூர் – கும்பகோணம் புறவழிச் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. டாடா ஏஸ் வாகனத்தில் அமர்ந்து வந்த இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காரும் சரக்கு வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.



  • Jul 09, 2025 11:56 IST

    கடலூர் பள்ளி வேன் விபத்து - 13 பேருக்கு சம்மன்

    பள்ளி வேன் விபத்து - 13 பேருக்கு சம்மன். கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக ரயில்வே துறை சார்பில் விசாரணைக் குழு. கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேர் ஆஜராக ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 



  • Jul 09, 2025 11:35 IST

    ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

    ரிதன்யாவின் மாமியார் ஜாமின் மனு மீதான விசாரணையை 11 ஆம் தேதிக்கு திருப்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜாமீன் வழங்க கூடாது என ரிதன்யாவின் தந்தை சார்பில் இடையீட்டு மனு தக்கல் செய்யப்பட்டிருந்தது.



  • Jul 09, 2025 11:32 IST

    காற்றாலை உடைந்து விழுந்து விபத்து

    திருப்பூர் தாராபுரம் அருகே முறையான பராமரிப்பின்றி இயங்கி வந்த காற்றாலை உடைந்து விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் காற்றாலை உடைந்து 6 துண்டுகளாகச் சிதறியதால் அருகே இருந்த மின் கம்பிகள் சேதமடைந்தன. காற்றாலைகள் முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Jul 09, 2025 11:30 IST

    கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்

    செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Jul 09, 2025 10:48 IST

    தொலைபேசி அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்

    கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து சம்பவத்தில் வெளியான புதிய தகவலின்படி பயணிகள் ரயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்தும் பங்கஜ் சர்மா பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரி விமல் தொலைபேசியில் அழைத்த நிலையில் கேட்கீப்பர் பங்கஜ் எடுக்கவில்லை என தகவல்



  • Jul 09, 2025 10:18 IST

    செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்!

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார். ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாட்டில் நியமித்தது சர்ச்சையான நிலையில் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.   



  • Jul 09, 2025 09:27 IST

    2 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்

    திருவாரூரில் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார். 2 நாள் பயணமாக இன்று திருவாரூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்



  • Jul 09, 2025 09:26 IST

    ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இளைஞர் படுகாயம்

    கடலூர் அருகே,  ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது, தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற  இளைஞர், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் மயங்கிய அவர், மயக்கம் தெளிந்த பின் ரத்தம் சொட்ட சொட்ட நடந்து வந்து கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்ர்.  விடுமுறைக்காக சொந்த ஊர் புறப்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.



  • Jul 09, 2025 09:26 IST

    தென்கரை பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் திடீர் தீ விபத்து

    மதுரை வைகை தென்கரை பகுதியில் உள்ள பழைய பேப்பர் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் குடோனில் நிற்கவைக்கப்பட்ட இரண்டு சரக்கு வாகனங்கள் முழுமையாக தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு படை வீர விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: