/indian-express-tamil/media/media_files/2025/07/02/vijay-meets-ajith-family-2025-07-02-19-53-53.jpg)
மேட்டூர் அணையில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 56,000 கனஅடியில் இருந்து 35,000 கன அடியாக இன்று காலை 8 மணியளவில் குறைக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்திற்காக 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 12,500 கனஅடி உபரி நீரும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Jul 02, 2025 21:56 IST
அஜித் குமார் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் அரசு நிதி - ஸ்டாலின் அறிவிப்பு
திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
-
Jul 02, 2025 20:38 IST
'கவலைப்பட வேண்டாம், த.வெ.க துணை நிற்கும்'; விஜய் ஆறுதல் கூறியதாக அஜித் குமார் குடும்பத்தினர் தகவல்
போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு, த.வெ.க துணையாக நின்று வேண்டிய உதவிகளை செய்யும் என்று அக்கட்சி தலைவர் விஜய் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செய்தியாளர்களை சந்தித்த அஜித் குமாரின் சகோதரர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், விஜய் நிதியுதவி அளித்ததாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
-
Jul 02, 2025 20:17 IST
ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்
திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்த அஜித் குமாரின் குடும்பத்தினரை, த.வெ.க தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரூ. 2 லட்சத்தை நிதியுதவியாக அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு அவர் வழங்கினார்.
-
Jul 02, 2025 19:56 IST
போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்த விஜய்
திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரை, த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
-
Jul 02, 2025 19:49 IST
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு - சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்படி, சென்னை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
-
Jul 02, 2025 19:13 IST
கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை
தஞ்சையில, கும்பாபிஷேக கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பக்தரின் 9 சவரன் செயின் பறிப்பு சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை கையும் களவுமாக பிடித்த மக்கள்; கைவரிசை காட்டிய வெள்ளையம்மாள் என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை
-
Jul 02, 2025 18:58 IST
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் மரணம்
விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி என்பவர் இன்று உயிரிழப்பு. சிவகாசி அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்
-
Jul 02, 2025 18:16 IST
சிறுவனை போலீஸ் தாக்கியதாக புகார்: தூத்துக்குடி எஸ்.பி அல்பர்ட் ஜான்
நெல்லை சந்திப்பில் 17 வயது சிறுவனை ஸ்ரீவைகுண்டம் தனிப்படை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. வழக்கு தொடர்பாக தந்தையை தேடி வந்த நிலையில், தந்தை இல்லாததால் 17 வயது மகன் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது, இது குறித்து முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு பிரிவினர் நெல்லைக்கு விசாரணைக்கு வரவில்லை, திருச்செந்தூர் குடமுழுக்கு பாதுகாப்பு பணிக்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான போலீசார் அனுப்பி வைப்பு தூத்துக்குடி எஸ்.பி அல்பர்ட் ஜான் விளக்கம்
-
Jul 02, 2025 17:18 IST
சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் - தூத்துக்குடி எஸ்.பி. விளக்கம்
நெல்லை மாநகர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் மீது பல வழக்குகள் இருக்கும் நிலையில், அவரது 17 வயது மகன், சீருடை அணியாத ஸ்ரீவைகுண்டம் தனிப்படை காவலர்கள் தன்னை தாக்கியதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் கூறும் இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என நெல்லை மாநகர ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்காக அதிகளவில் காவலர்கள் அங்கே இருப்பதால், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் இருந்து யாரும் சம்பவம் நடந்த இடத்திற்கு வரவில்லை என தூத்துக்குடி எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
-
Jul 02, 2025 16:55 IST
உதகையில் மழை
உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. உதகை - கூடலூர் சாலையில் உள்ள சோலூர் சந்திப்பு பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
Jul 02, 2025 16:23 IST
விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் காவலர்களால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் காவலர்களால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியான நிலையில், காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 5 பேர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் என்பவர் ஜனவரி 14ம் தேதி மதுபோதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட புகாரில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். தற்போது இவ்விவகாரம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க கூடுதல் எஸ்.பி.யை நியமித்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jul 02, 2025 16:22 IST
ட்ராக்டரில் சிக்கி நபர் ஒருவர் பலி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கீழ்கொல்லப்பள்ளி அருகே ட்ராக்டரில் சிக்கி சுதாகர் (45) என்பவர் உயிரிழப்பு. தனது நிலத்தில் நடக்கும் கட்டடப் பணிகளுக்கு கற்கள் ஏற்றி வந்த போது, மேடான பகுதியில் ஏற்றும் முயற்சியில் ட்ராக்டர் செங்குத்தாக தூக்கியதால், பின்னால் இருந்த ட்ரைலருக்கும் ட்ராக்டருக்கும் இடையே சிக்கி அவர் உயிரிழப்பு.
-
Jul 02, 2025 15:41 IST
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 35,000 கன அடியில் இருந்து இன்று மாலை 31,000 கன அடியாக குறைக்கப்படும் என நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
Jul 02, 2025 14:53 IST
அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
Jul 02, 2025 14:14 IST
தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Jul 02, 2025 13:30 IST
மதுரை ஆதீனத்திற்கு மீண்டும் சம்மன்: ஜூலை 5-ஆம் தேதி ஆஜராக உத்தரவு
தன்னை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் சொன்ன வழக்கில் மதுரை ஆதீனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஆஜராகும்படி இந்த சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஆஜராகும்படி மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Jul 02, 2025 13:28 IST
சீமான் வழக்கு: திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பதிலளிக்க உத்தரவு
சீமான் தொடர்ந்த வழக்கில் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு; சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டது.
-
Jul 02, 2025 13:19 IST
அஜித்குமார் லாக் அப் மரணம்: திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நீதிபதி நேரில் சென்று விசாரணை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக் அப் மரணம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று நீதிபதி விசாரணை நடத்தினார். இறந்த அஜித்தின் வழக்கை விசாரிக்க நீதிபதி ஜான் சுந்தர் தற்போது திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
-
Jul 02, 2025 13:03 IST
அஜித்குமார் லாக் அப் மரணம் எதிரொலி: தமிழகம் முழுவதும் தனிப்படைகளைக் கலைக்க டி.ஜி.பி உத்தரவு
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் நிலைய மரணம் விவகார எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள தனிப்படைகளை உடனடியாக கலைக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 02, 2025 12:19 IST
திருப்புவனம் இளைஞர் மரணம்: மாவட்ட நீதிபதி விசாரணை
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணமடைந்த விவகாரம் : கோவிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமராக்களின் DVR பதிவுகள், பென் டிரைவ்-கள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்புவனம் ஏடிஎஸ்பி சுகுமார் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோரிடம் விசாரணை தொடங்கியது. விசாரணை அதிகாரியான மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்
-
Jul 02, 2025 12:04 IST
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி பதவி பறிபோனது
சங்கரன்கோவில் நகராட்சி திமுக நகர்மன்ற தலைவி உமா மகேஷ்வரி மீது நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். 30 நகர்மன்ற உறுப்பினர்களில் 28 உறுப்பினர்களின் ஆதரவோடு நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் உமா மகேஷ்வரி பதவி பறிபோனது.
-
Jul 02, 2025 11:33 IST
கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஆட்சியர் அலுவலக வளாகம், கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார், மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
-
Jul 02, 2025 11:29 IST
அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க DGP உத்தரவு
திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் அதிகாரிகளுக்கு கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க DGP உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 02, 2025 11:27 IST
நெல்லை மாவட்டத்தில் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு
திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் டிஎஸ்பி-க்கள், உதவி ஆணையர்கள் கீழ் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகள் கலைப்பு.
தனிப்படையில் பணியாற்றிய காவல்துறையினர் அந்தந்த காவல் நிலையங்களில் வேறு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர்.
-
Jul 02, 2025 11:24 IST
காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை
திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்; நீதிபதி ஜான் சுந்தர் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
-
Jul 02, 2025 10:55 IST
திருப்புவனம் இளைஞர் மரணம்- சகோதரர் நவீன் குமாருக்கு அரசுப் பணி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிடுமாறு உத்தரவிடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமாருக்கு அரசுப்பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். -
Jul 02, 2025 10:31 IST
முக்கொம்பு அணையில் 47,000 கனஅடி நீர் வரத்து
டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து காவேரி நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி முக்கொம்பு அணையில் (மேல் அணைக்கட்டு) 47,000 கனஅடி நீர் வரத்து பதிவாகியுள்ளது.
இதில், காவேரி ஆற்றில் 24,700 கனஅடி, கொள்ளிடம் ஆற்றில் 21,600 கனஅடி, கிளை கால்வாய்களில் 700 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
#WATCH | Trichy, Tamil Nadu | Drone visuals of 47,000 cusecs of water inflow recorded at Mukkombu Dam (Upper Anicut) as of this morning following the release of Kaveri water from the Mettur Dam for irrigation in the Delta districts.
— ANI (@ANI) July 2, 2025
Of this, 24,700 cusecs is being released into… pic.twitter.com/nNhsd73xRm -
Jul 02, 2025 10:29 IST
தண்ணீர் ட்ரக் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து
ராமநாதபுரம்: மண்டபம் வடக்கு கடற்கரை மீன்பிடி துறைமுக பாலத்தில் சென்ற தண்ணீர் ட்ரக், பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
செங்குத்தாக நிற்கும் வாகனத்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். -
Jul 02, 2025 10:27 IST
திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு மகா அபிஷேகம்
Video: Sun News
#WATCH | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, விமர்சையாக நடைபெற்ற சிறப்பு மகா அபிஷேகம்!#SunNews | #Tiruvannamalai pic.twitter.com/wl7dIJsRaR
— Sun News (@sunnewstamil) July 2, 2025 -
Jul 02, 2025 09:24 IST
வீட்டு மாடியில் இருந்த செல்போன் டவரில் தீ - பரபரப்பு
கன்னியாகுமரி தக்கலை பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் செல்போன் டவர் ஒன்று இருந்தது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மின்கசிவு காரணமாக திடீரென செல்போன் டவரில் தீ ஏற்பட்டது. இந்த தீயானது சிறிது நேரத்திலேயே மளமளவென எரியத்தொடங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துரையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்பட வில்லை.
-
Jul 02, 2025 09:14 IST
விருதுநகர் ஜவுளி பூங்கா: ரூ.1894 கோடி ஒதுக்கியது மத்திய அரசு
விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள ஜவுளி பூங்காவிற்கு வளர்ச்சி மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.1,894 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளன. இதில் 51% மத்திய அரசும், 49% மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது.
-
Jul 02, 2025 09:13 IST
மேட்டூர் அணையில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 56,000 கனஅடியில் இருந்து 35,000 கன அடியாக இன்று காலை 8 மணியளவில் குறைக்கப்படவுள்ளது. டெல்டா பாசனத்திற்காக 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 12,500 கனஅடி உபரி நீரும் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Jul 02, 2025 09:13 IST
மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
கோவை மேட்டுப்பாளையம்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:- 06030) 6-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தடையும். இதேபோல மேட்டுப்பாளையம்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:-06029) 7-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.