Coimbatore, Madurai, Trichy News: அமெரிக்காவின் 50% வரி விதிப்பால், புதுக்கோட்டை மீனவர்கள் கடும் பாதிப்பு

Coimbatore, Madurai, Trichy News Live- 30 August 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live- 30 August 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
puducherry fisheries department announcement to fishermen fishermen not to venture into the sea for 2 days Tamil News

கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை: கோவை, நரசீபுரம் வனப்பகுதியில் இருந்து வெள்ளிமலை பட்டினம் அருகே திடீரென புகுந்த ஒற்றை கொம்பு யானை அங்கிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் காரை சேதப்படுத்தியுள்ளது. காட்டு யானை தாக்கியதில் சப்தகிரி (90) என்ற முதியவரின் இரு கால்களில் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment
  • Aug 30, 2025 21:24 IST

    கரூரில் ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ 

    கரூரில் தனியார் பேருந்து கூண்டுகள் சேகரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேலான பேருந்து கூண்டுகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.



  • Aug 30, 2025 20:09 IST

    பள்ளி மாணவரை கடித்துக் குதறிய நாய் - ஊர்மக்கள் அதிர்ச்சி 

    ஓமலூர் அருகே பள்ளி மாணவரை நாய் கடித்து குதறியதால், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாய் உரிமையாளர் மிரட்டியதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளது,



  • Advertisment
    Advertisements
  • Aug 30, 2025 20:06 IST

    அமெரிக்காவின் 50% வரி விதிப்பால், புதுக்கோட்டை மீனவர்கள் கடும் பாதிப்பு

    அமெரிக்காவின் 50% வரி விதிப்பால், புதுக்கோட்டை மீனவர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், வாழ்வாதாரத்தை காக்க வரி பிரச்சனைக்கு மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது,



  • Aug 30, 2025 19:21 IST

    கரூர்: பழைய பேருந்து கூண்டுகளை சேகரிக்கும் கிடங்கில் பயங்கர தீ விபத்து

    கரூர் அருகே பழைய பேருந்து கூண்டுகளை சேகரிக்கும் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சின்னமநாயக்கன்பட்டியில் தீ விபத்தில் 23 பேருந்து கூண்டுகள் முழுமையாக எரிந்து கருகின. அனுமதி பெறாத இடத்தில் பேருந்து கூண்டுகள் இருந்ததால் தீயணைப்பு வசதி இல்லை என தகவல் தெரிவித்துள்ளது.



  • Aug 30, 2025 18:36 IST

    த.வெ.க நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க பிரமுகர்

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், சமூகவலைதளங்களில் த.வெ.க, அ.தி.மு.க நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, த.வெ.க நிர்வாகியை வரவழைத்து தாக்கிய அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Aug 30, 2025 18:35 IST

    சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர் பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் லியாகத் அலி வழக்கம்போல இன்று காலை ஆட்டுப்பண்ணைக்குச் சென்ற போது ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிகாலையில் ஆட்டுப்பண்ணைக்குள் புகுந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது.

    குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் நடந்துள்ள இந்த நாய் கடி சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக லியாகத் அலி தெரிவித்துள்ளார். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • Aug 30, 2025 18:14 IST

    இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

    தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சை, நாகை, நாமக்கல்லில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 30, 2025 18:06 IST

    புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை - திருத்தணியில் சீமான் பேச்சு

    திருத்தணியில் நடைபெற்ற மரங்கள் மாநாட்டில் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "மண்ணில் மரங்களை நட்டால், ஆண்களும் தாயாக முடியும். ஒரு மரத்தை வெட்டியவனுக்கு 1 லட்சம் மரங்களை நட்டுவைக்க சொன்னவர் என் தலைவர். இயற்கைதான் செல்வம். நீ வைத்திருப்பது காந்தி படம் போட்ட தாள். தண்ணீரை தொடர்ந்து காற்றையும்கூட இவர்கள் விற்பாளர்கள் டெல்லியை போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலைவரும். புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.  



  • Aug 30, 2025 17:30 IST

    பட்டியலின சாதிச் சான்றிதழை ரத்து செய்த நீதிபதிகள் 

    குமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சித் தலைவி அமுத ராணியின் பட்டியலின சாதிச் சான்றிதழை ரத்து செய்த உயர் நீதிமன்றக் கிளை தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு. அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமுதராணி கிறிஸ்தவ மதத்திற்கு மாறியது ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதால், பட்டியலின சலுகைகளை அவர் அனுபவிக்க முடியாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    ”ஒரு மதத்தில் இருந்து வேறொரு மதத்திற்கு மாறுவது என்பது அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமை. ஆனால், தனது புதிய அடையாளத்தை மறைத்து, அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்க பாசாங்கு செய்யும்போதுதான் சிக்கல் எழுகிறது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார். 



  • Aug 30, 2025 16:53 IST

    அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி கைது

    விழுப்புரத்தில் அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் பால்வில்சனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.

     



  • Aug 30, 2025 16:06 IST

    கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் மர்மம் நீடிப்பு

    நாமக்கல்லில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 



  • Aug 30, 2025 15:59 IST

    தேரூர் பேரூராட்சி அதிமுக முன்னாள் தலைவர் சாதி சான்றிதழ் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

    தேரூர் பேரூராட்சி அதிமுக முன்னாள் தலைவர் சாதி சான்றிதழை ரத்து செய்த தனிநீதிபதி உத்தரவை உறுதி செய்த ஐகோர்ட் கிளை, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. சாதி சான்றிதழை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமுதராணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையில், மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை தழுவி உள்ளார் என்பது ஆதாரங்களுடன் நிரூபணமாகி உள்ளது. ஒருவர் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவது என்பது அடிப்படை உரிமை என்றும், தனது புதிய அடையாளத்தை மறைத்து, பழைய நிலை தொடர்வது போல காட்டி அரசமைப்பு தந்த உரிமைகளை அனுபவிக்க நினைக்கும்போதுதான் சிக்கல் எழுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.



  • Aug 30, 2025 15:43 IST

    நெல்லை மனோன்மணியம் பல்கலை. செப். 01 முதல் வகுப்புகள் செயல்படும்: துணை வேந்தர் அறிவிப்பு

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு செப். 01 முதல் வகுப்புகள் வழக்கமாக செயல்படும் என துணை வேந்தர் அறிவித்துள்ளார். மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



  • Aug 30, 2025 14:33 IST

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு செப்.7ல் திருச்செந்தூரில் பிற்பகல் வரை அனுமதி: கோயில் நிர்வாகம்

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு செப்.7ல் திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செப்.7ல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். செப்.8ம் தேதி அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • Aug 30, 2025 13:29 IST

    பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சியராக மிருணாளினி இன்று பொறுப்பேற்பு

    பெரம்பலூர் மாவட்டத்தின் 18வது ஆட்சியராக மிருணாளினி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்



  • Aug 30, 2025 12:28 IST

    மரங்கள் மாநாடு தொடங்கியது!

    திருவள்ளூர்: திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களின் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் நம்மாழ்வார், அப்துல் கலாம் உட்பட 5 பேரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.



  • Aug 30, 2025 12:13 IST

    மனுக்களை ஆற்றில் வீசியது யார்? திருப்புவனம் வட்டாட்சியர் புகார்

    'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்களை ஆற்றில் வீசியவர்களை கண்டுபிடித்து தர கோரி காவல்நிலையத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் புகார் அளித்துள்ளார். 

    ஆற்றில் வீசப்பட்ட மனுக்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டதாக திருப்புவனம் வட்டாட்சியர் விளக்கம்



  • Aug 30, 2025 11:44 IST

    வெள்ளிமலை பட்டினம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை

    கோவை: நரசீபுரம் வெள்ளிமலை பட்டினம் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை, குடியிருப்பு பகுதியிலிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதால் அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.

    Video: Sun News



  • Aug 30, 2025 11:17 IST

    3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    கோவை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஆக.30) மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.



  • Aug 30, 2025 10:46 IST

    குற்றால மெயின் அருவியில் மட்டும் குளிக்கத் தடை விதிப்பு

    தென்காசி குற்றால அருவிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.



  • Aug 30, 2025 10:45 IST

    தாம்பரம்-பல்லாவரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் கவிழ்ந்த சிமெண்ட் கம்போஸ்ட் டேங்கர் லாரி, 10 மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறக்கு நிலை நிறுத்தப்பட்டது. தாம்பரம் - பல்லாவரம் மார்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது.



  • Aug 30, 2025 10:09 IST

    ராமேசுவரம் செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

    கோவை-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண்.16618/16617) வருகிற 2-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 29-ந் தேதி வரை ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இரு மார்க்கங்களிலும் இணைக்கப்படுகிறது. அதேபோல, வடகிழக்கு ரயில்வே மண்டலத்தின் சார்பில் இயக்கப்படும் பனாரஸ்-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண்.22536/22535) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, ஒரு மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி நிரந்தரமாக இரு மார்க்கங்களிலும் இணைக்கப்படுகின்றன.



  • Aug 30, 2025 09:39 IST

    திருத்தணி அருகே நா.த.க. சார்பில் இன்று மரங்கள் மாநாடு

    நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் இன்று (30.08.2025) காலை 10 மணிக்கு திருத்தணி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தில் "மரங்களின் மாநாடு" நடைபெற உள்ளது.



  • Aug 30, 2025 09:36 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,828 கனஅடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,828 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 118.65 அடியாகவும், நீர் இருப்பு 91.334 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 15,850 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • Aug 30, 2025 09:18 IST

    கோவை: ஒற்றை காட்டு யானை தாக்கி முதியவர் காயம்

    கோவை மாவட்டம் வெள்ளிமலைபட்டினம் அருகே திடீரென ஊருக்குள் புகுந்த ஒற்றை கொம்பு யானை, அங்கிருந்த இருசக்க வாகனங்கள் மற்றும் காரை சேதப்படுத்தி உள்ளது. காட்டு யானை தாக்கியதில் சப்தகிரி (90) என்ற முதியவரின் இரு கால்களில் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 



  • Aug 30, 2025 09:17 IST

    தமிழகத்தில் செப்.4ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துடுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

     



  • Aug 30, 2025 09:17 IST

    நெல்லை: மர்மமான முறையில் எரிக்கப்பட்ட மனித உடல்

    நெல்லை மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள இடுகாட்டில் மர்மமான முறையில் எரிக்கப்பட்ட மனித உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். தென்னை மட்டைகளைக் கொண்டு அவசர அவசரமாக உடல் எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடல் எலும்புக்கூடுகளிலிருந்து சில தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: