Advertisment

Coimbatore, Madurai, Trichy News Updates: கன்னியாகுமரியில் போலீஸ் என கூறி டம்மி துப்பாக்கி வைத்து வழிப்பறி செய்தவர் கைது

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gun

பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்:

Advertisment

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ100.90-க்கும், டீசல் விலை ரூ92.48-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Dec 24, 2024 00:05 IST

    மாற்றுத்திறனாளி மாணவி கோரிக்கை: உடனடியாக நிறைவேற்றிய ஆட்சியர்

     நாமக்கல் செல்லப்பம்பட்டியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான சக்தி செல்லம்மாள் என்பவர் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கண் கண்ணாடி மற்றும் ஊன்றுகோல் வழங்க வேண்டும் என ஆட்சியர் உமாவிடம் கோரிக்கை வைத்தார். உடனடியாக அவரின் கோரிக்கையை ஏற்ற ஆட்சியர், அடுத்த நிமிடமே மாணவிக்கு கண் கண்ணாடி மற்றும் ஊன்றுகோலை வழங்கினார். மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.



  • Dec 23, 2024 20:37 IST

    டம்மி துப்பாக்கி வைத்து வழிப்பறி: கன்னியாகுமரியில் ஒருவர் கைது

    கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் பகுதியில், வாகன ஓட்டியை வழிமறித்து, போலீஸ் என்று கூறி டம்மி துப்பாக்கியை வைத்து, பணம் மற்றும் இரு சக்கரவாகனத்தை பறித்த இரவரை பொதுமக்களே இருவரையும் மடக்கி பிடித்த நிலையில், ஒருவர் தப்பி ஓடியுள்ளனர். மற்றொருவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.



  • Advertisment
    Advertisement
  • Dec 23, 2024 19:21 IST

    திமிங்கல கழிவை விற்க முயன்ற  2 பேர் கைது - கிருஷ்ணகிரி போலீஸ் அதிரடி

    கிருஷ்ணகிரியில் அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் கழிவை, விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கைதான முகமது பாஹித் (23), கரன் குமார் (24) இருவரும் கன்னியாகுமரியில் இருந்து இதனை வாங்கி வந்து, கள்ளச்சந்தையில் விற்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Dec 23, 2024 19:14 IST

    திருச்சி: காவிரி ஆறு படித்துறையில் குளித்த 3 மாணவர் மாயம்  

    திருச்சி: காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மூவர் மாயமாகியுள்ளனர். தீயணைப்புப் படையினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்



  • Dec 23, 2024 17:18 IST

    கிறிஸ்துமஸ் விடுமுறை ஞாயிறு அட்டவணைப்படி ரயில் இயக்கம் 

    கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வரும் 25ம் தேதி சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Dec 23, 2024 17:09 IST

     480 டன் மருத்துவ கழிவுகள் அகற்றம்!

    நெல்லையில் கடந்த 2 நாட்களில், கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட சுமார் 480 டன் மருத்துவ கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Dec 23, 2024 17:08 IST

    பக்கிங்காம் -  மேலும் ஒருவரின் உடல் மீட்பு

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்க சென்றபோது மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், ஏற்கனவே லோகேஷ் என்பவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் தற்போது விக்ரம் என்பவரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் சூரியா என்பவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். 

     



  • Dec 23, 2024 16:19 IST

    வேலூர்: கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

    வேலூர் மாவட்ட பா.ஜ.க பிரமுகர் கொலை வழக்கில் கைதான கிராம உதவியாளர் தரணிகுமார் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைதாகி சிறை சென்றதால் அவரை பணியிடை நீக்கம் செய்து கே.வி.குப்பம் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 



  • Dec 23, 2024 16:18 IST

    சிவகங்கையில் சிப்காட் தொழில் பூங்கா - சுற்றுச்சூழல் அனுமதி

    சிவகங்கை மாவட்டத்தில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இலுப்பைக்குடி, அரசனூர் கிராமங்களில் 775 ஏக்கரில் ரூ.342 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைய உள்ளது.

    தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களில் சிப்காட் தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறது. சிப்காட் தொழில் பூங்காக்கள் இல்லாத மாவட்டங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டமான சிவகங்கையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சிப்காட் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அதன்படி இலுப்பைக்குடி மற்றும் அரசனூர் கிராமங்களில் 775 ஏக்கரில் ரூ.342 கோடியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

    தொழில் பூங்கா மூலம் 36,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. குறிப்பாக ஆட்டோ மொபைல்ஸ் உதிரி பாகங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகள் சார்ந்த தொழிற்சாலைகள் சிப்காட்டில் அமைய உள்ளது

     



  • Dec 23, 2024 15:56 IST

    2 பெண்கள், மாணவனை மீட்ட  தீயணைப்பு வீரர்கள்   

    பொள்ளாச்சி அடுத்த குமரன் நகரில் உள்ள வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் கதவைத் திறக்க முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். நீண்ட நேரமாக வெளியே வரமுடியாயமல் தவித்த நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து 2 பெண்கள் மற்றும் ஒரு பள்ளி மாணவனை மீட்டனர். மேலும் அந்த மாணவனை சரியான நேரத்திற்கு தேர்வு எழுத பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.



  • Dec 23, 2024 15:55 IST

    ஸ்டாலின் சுற்றுப்பயண விவரம்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி சென்று, அங்கு ரூ. 30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்கை திறந்து வைக்கிறார்.

    வரும் 30ம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமை பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார். 

    அதனை தொடர்ந்து அங்கிருந்து கன்னியாகுமரி செல்லும் முதலமைச்சர், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் ரூ. 37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார். 

    வரும் 31ம் தேதி காலை திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி, கன்னியாகுமரியில் நடைபெறும் வெள்ளி விழாவில் பங்கேற்கிறார்.



  • Dec 23, 2024 15:46 IST

    தூத்துக்குடி, குமரி செல்லும் ஸ்டாலின் - தேதிகள் வெளியீடு 

    டிச.29, 30, 31 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு
    செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தூத்துக்குடியில் புதிதாக அமைந்துள்ள டைடல் நியோ பார்க் மற்றும் கன்னியாகுமரியில் கண்ணாடி கூண்டு பாலத்தை திறந்து வைக்க உள்ளார்

     



  • Dec 23, 2024 14:52 IST

    ஹாஸ்டலில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்திய மூதாட்டி.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள சீர்மரபினர் மாணவிகள் விடுதியில் இருந்து, இரண்டு அரிசி மூட்டைகள் ஆட்டோவில் கடத்தப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. பள்ளி மாணவிகளை சாக்கு முட்டையை தூக்க வைத்து, அரிசியை கடத்திச் செல்லும் சமையலர் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த விடுதிக்காப்பாளர் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



  • Dec 23, 2024 14:11 IST

    கேரள உயர்நீதிமன்றம், அம்மாநில அரசுக்கு உத்தரவு

    "தமிழகத்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" கேரள உயர்நீதிமன்றம், அம்மாநில அரசுக்கு உத்தரவு.



  • Dec 23, 2024 13:44 IST

    பரமக்குடியில் தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

    பரமக்குடியில் தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம். ஆப்பநாடு மறவர் சங்கத்தை தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம். அங்கு போலீஸ் குவிந்துள்ளனர். இமானுவேல் சேகரன் மணிமண்டபதிற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  போலீசாரின் அனுமதியை மீறி போராட்டம் தொடர்கிறது. 500க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளதால் பதற்றமான சூழல். போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்.



  • Dec 23, 2024 13:19 IST

    டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோடீஸ்

    திருச்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியான விவகாரத்தில் 2 வார காலத்தில் பதிலளிக்க டிஜிபிக்கு நோட்டீஸ். தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு விசாரணை. 



  • Dec 23, 2024 13:03 IST

    நெல்லையில் இரண்டாவது நாளாக தொடரும் கழிவுகளை அகற்றும் பணி.

    நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கேரள மாநில மருத்துவக் கழிவுகளை இரண்டாவது நாளாக அகற்றும் பணி தீவிரம். நெல்லையில் கொட்டப்பட்டுள்ள கேரள மாநில மருத்துவக் கழிவுகளை இரண்டாவது நாளாக இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது. கேரளாவில் இருந்து வந்த 30 பேர் கொண்ட குழு தற்போது 6 குழுக்களாக பிரிந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.



  • Dec 23, 2024 12:50 IST

    ஆசிரியரின் காலில் விழுந்த எம்.எல்.ஏ

    சேலத்தில் பா.ம.க எம்.எல்.ஏ அருள், ஆசிரியரின் காலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரமங்கலம் அருகே தனியார் பள்ளி மூடப்படுவதாக கருதி பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பா.ம.க எம்.எல்.ஏ அருள் பங்கேற்று, பள்ளியை மூடக்கூடாது என வலியுறுத்தினார். குறிப்பாக, ஆசிரியரின் காலில் விழுந்து பள்ளியை மூடக் கூடாது என அவர் அறிவுறுத்தினார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Dec 23, 2024 12:08 IST

    தண்டவாளத்தில் திடீர் விரிசல் - ரயில்கள் நிறுத்தம்

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. ஓங்கூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தில் இருந்து அதிக சத்தம் வந்ததால் ரயிலை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இதனால், சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.



  • Dec 23, 2024 11:36 IST

    தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அழைப்பு

    கடலூர் கொத்தட்டை சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.



  • Dec 23, 2024 10:56 IST

    தனியார் வாகன நிறுத்துமிடம் சேதம்

    ராஜபாளையத்தில் பெய்த கனமழையால், தனியார் வாகன நிறுத்துமிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கார்களும் சேதமடைந்தன.



  • Dec 23, 2024 10:43 IST

    மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி

    நெல்லையில் மருத்துவ கழிவுகளை அகற்றும் பணிகள், இரண்டாவது நாளாக தொடங்கியது. கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கே எடுத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 5 லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.



  • Dec 23, 2024 10:36 IST

    மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை

    மதுரையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. குறிப்பாக, கீழமாசி வீதி, வெத்தலைபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சாலையில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



  • Dec 23, 2024 09:59 IST

    மஞ்சப்பை விற்பனை திட்டம் தொடக்கம்

    சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் சேவை தொடங்கப்பட்டது. இதனை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்.



  • Dec 23, 2024 09:43 IST

    மாயமான 3 பேரில் ஒருவர் சடலமாக மீட்பு

    விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பக்கிங்கம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பேரில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று, பக்கிங்கம் கால்வாயில் மீன்பிடித்த சகோதரர்கள் லோகேஷ், சூர்யா, விக்ரம் ஆகியோர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் லோகேஷ் சடலமாக மீட்கப்பட்டார். மற்ற இருவரை தேடும் பணி நடைபெறுகிறது.



  • Dec 23, 2024 08:59 IST

    சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட துப்பாக்கி பறிமுதல்

    பீகாரில் இருந்து கோவைக்கு சட்டவிரோதமாக வாங்கி வரப்பட்ட துப்பாக்கி, 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர் மணிகண்ட பிரபு என்பவருக்காக துப்பாக்கி வாங்கி வரப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 



Tamil News Update Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment