பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.
-
Dec 24, 2024 21:56 IST
லாட்டரி சீட்டு விற்றவர் வீட்டில் ரூ.2.5 கோடி பறிமுதல் - கோவை போலீஸ் அதிரடி
கோவை சூலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற நாகராஜ் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்த நிலையில், நாகராஜன் வீட்டில் இரண்டரை கோடி அளவில் ரூபாய் நோட்டுகளும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
Dec 24, 2024 21:26 IST
100 நாட்கள் திட்டத்தில், வேலை வாய்ப்பு வழங்க சீமானின் அம்மா கோரிக்கை!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் அம்மா அன்னம்மாள், தங்கள் கிராம மக்களுக்கு 100 நாட்கள் திட்டத்தில், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
-
Dec 24, 2024 20:20 IST
கன்னியாகுமரியில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில், விழா மேடை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் சாமிநாதன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
-
Dec 24, 2024 19:23 IST
டங்ஸ்டன் சுரங்க ஏலம் - மறு ஆய்வுக்கு மத்திய அரசு பரிந்துரை
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது
-
Dec 24, 2024 18:52 IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த மணி
வெம்பக்கோட்டை அகழாய்வில் சோடினைப்பீங்கானால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி கிடைத்தது.
-
Dec 24, 2024 18:49 IST
திருவண்ணாமலையில் தற்காலிகமாக அரசின் நிலத்தில் வீடுகள் அமைத்துக் கொடுக்க ஏற்பாடு
திருவண்ணாமலையின் தீபமலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த நிலையில், 20 வீடுகள் ஆபத்தான பகுதியில் இருப்பதால், தற்காலிகமாக அரசின் நிலத்தில் வீடுகள் அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
-
Dec 24, 2024 15:45 IST
ராமேஸ்வரம் - டிரஸ்ஸிங் ரூமில் ரகசிய கேமரா
ராமேஸ்வரத்தில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்கள் உடை மாற்றுவதை படம் எடுத்த விவகாரத்தில், "சம்பந்தப்பட்ட விடுதியின் உரிமத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
-
Dec 24, 2024 15:14 IST
தவெக பொறுப்பாளர்களுக்கு கத்திக்குத்து
அரியலூர்: எம். ஜி. ஆர் சிலைக்கு மாலை அணிவித்து சென்றபோது தவெக கட்சி பொறுப்பாளர்களுக்கு கத்திக்குத்து. தவெக கிளை பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் கிளை செயலாளர் சிவகுமார் பைக்கில் சென்றபோது அவரைகளை பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர்கள் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். இதனை குறித்து காவல் துறை விசாரணையை தொடங்கியது.
-
Dec 24, 2024 14:53 IST
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி கடிதம்.
இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 17 ராமேஸ்வரம் மீனவர்களையும் அவரது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
-
Dec 24, 2024 14:43 IST
அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா. அதிமுக கவுன்சிலர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றிய தி.மு.க கவுன்சிலர்கள்.
-
Dec 24, 2024 13:54 IST
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மோதல்
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகி, அ.தி.மு.க கவுன்சிலர் இடையே மோதல். எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னால் யார் நிற்பது? என போட்டாபோட்டி. ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகியை அ.தி.மு.க கவுன்சிலர் கீழே தள்ளி விட்டதாக தகவல். ஒருவருக்கொருவர் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Dec 24, 2024 13:43 IST
ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் உடைமாற்றும் அறையில் கேமரா
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கைரையில் நீராடிய பெண் பக்தர் ஒருவர், கடற்கரைக்கு அருகே இருந்த லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையில் உடை மாற்றச் சென்றுள்ளார். போலீசார் அக்னிதீர்த்த கடற்கரையிலிருந்த அந்த தனியார் உடை மாற்றும் அறையை ஆய்வு செய்ததில் அங்கு கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறையில் தனி தனியாக மூன்று ரகசிய கோமராக்கள் பொறுத்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லெட்சுமி டீ ஸ்டால் மற்றும் உடை மாற்றும் அறையை நடத்தி வந்த ராமேஸ்வரம் தம்பியான் கொல்லையை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
Dec 24, 2024 13:36 IST
ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக் கூடாது
அனைத்து தனியார் பள்ளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி சுற்றறிக்கை. "பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளை தவிர்க்க வேண்டும். பாத பூஜை தொடர்பான புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை பாயும்" என்று மாவட்ட கல்வி அலுவலரின் சுற்றறிக்கையால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
Dec 24, 2024 13:17 IST
விடுப்பு கேட்டு வீடியோ - மேல்முறையீடு மனு தள்ளுபடி.
காவலர் பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - மதுரை கிளை உயர் நீதிமன்றம். மதுரையை சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்பவர் விடுப்பு கேட்டு வீடியோ வெளியிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார். பல காவல்துறை அதிகாரிகள் ரீலிஸ் வீடியோ வெளியிட்ட நிலையில் ஏன் இப்ராஹிம் மீது நடவடிக்கை என்று நீதிபதிகள் கேள்வி.
-
Dec 24, 2024 12:53 IST
பா.ம.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பா.ம.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
Dec 24, 2024 12:33 IST
பொறுப்பு துணை வேந்தர் மீது மாணவர்கள் புகார்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். தேசிய அளவிலான தடகள போட்டியில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
-
Dec 24, 2024 10:53 IST
எடைக்கு போடப்பட்ட விடைத்தாள்கள்
சிவகங்கை மாவட்டம், கல்குறிச்சியில் பழைய பொருள்களுடன், 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எடைக்கு போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அரவைக்கு செல்லும் முன் விடைத்தாள்களை ஆசிரியர்கள் மீட்டனர்.
-
Dec 24, 2024 10:26 IST
அரிய வகை ஆந்தை மீட்பு
நாகை மாவட்டத்தில், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது. பட்டத்தின் நூலில் சிக்கியிருந்த ஆந்தையை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
-
Dec 24, 2024 09:10 IST
பெண் யானையின் சடலம் மீட்பு
கோவை மாவட்டம், வரப்பாளையம் பகுதியில் பெண் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு பிறந்து 1 மாதமே ஆன குட்டி யானை உள்ளதால், அதனை யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை முயன்று வருகின்றனர்.
-
Dec 24, 2024 08:58 IST
குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மாயம்
திருச்சி, அய்யாளம்மன் காவிரி படித்துறையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மாயமடைந்த நிலையில், தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஜாகிர் உசேன் என்ற ஒரு மாணவர் உடல் மட்டும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.