Advertisment

Coimbatore, Madurai, Trichy News Updates: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சேவாக் சாமி தரிசனம்!

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shewag

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு:

Advertisment

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2,701 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 2,886 கன அடியில் இருந்து, 2,701 கன அடி என்ற அளவில் சற்று குறைந்து காணப்படுகிறது.

  • Dec 28, 2024 19:40 IST
    கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சேவாக் சாமி தரிசனம்!

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



  • Dec 28, 2024 18:00 IST
    மார்கழி மாத பிரதோஷ தினம்: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!

    திருவண்ணாமலையில் மார்கழி மாத பிரதோஷ தினத்தையொட்டி அண்ணாமலையார்  கோயிலில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்



  • Advertisment
    Advertisement
  • Dec 28, 2024 17:59 IST
    புதுக்கோட்டை மாணவி மர்ம மரணம்: நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பயின்று வரும் மாணவி, வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், அருகிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

    மாணவியின் பெற்றோர்கள், மணிகண்டன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி, குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மறுத்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். 

    இந்த மணிகண்டன் என்ற நபர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக ஒன்றிய செயலாளர் தவ பாஞ்சாலன் என்பவரின் உறவினர் என்பதால், காவல்துறைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது. 

    காவல்துறை எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், உண்மைக் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.



  • Dec 28, 2024 17:26 IST
    திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் பணி தீவிரம்

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும், இணைப்பு பாலத்தில் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • Dec 28, 2024 16:04 IST
    குடி குடியை கெடுக்குமென விளம்பரம் செய்வதில் என்ன பயன்? - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

    இருக்கும் மதுக்கடைகளை குறைப்பதற்கு வழியை பாருங்கள். அதை விடுத்தது மதுக்கடைகளை அதிகப்படுத்திவிட்டு, குடி குடியை கெடுக்கும் என்று விளம்பரப்படுத்துவடதில் என்ன பயன் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி விடுத்துள்ளது.   



  • Dec 28, 2024 14:43 IST
    சனீஸ்வரர் கோயிலில் மனம் உருகி பக்தி பாடல் பாடிய பாடகர் மனோ

    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில், சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் கூடினர்.பக்தர்களுக்கு வெள்ளிக்கவச அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் அருள் பாலித்தார். பக்தர்கள் நளதீர்த்தத்தில் புனித நீராடி தோஷங்களை தீர்த்துக்கொண்டனர். தொடர்விடுமுறையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கூடியதால் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. திருநள்ளாறு கோவிலில், பாடகர் மனோ தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது மனம் உருகி பக்தி பாடலையும் பாடினார்.



  • Dec 28, 2024 14:08 IST
    மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதா?

    ஆட்சியாளருக்கு எதிராக சுழற்ற வேண்டிய 'சாட்டையை' தனக்குத்தானே சுழற்றி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதா? - புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம். வேடிக்கை போராட்டங்கள் நடத்துவது பிரெச்சனைகளின் தன்மையை நீர்த்து போக செய்வதற்கும், அதை மடைமாற்றம் செய்வதற்கும் மட்டுமே உதவும் என்று கருது தெரிவித்துள்ளார்.  



  • Dec 28, 2024 13:47 IST
    பேராவூரணி பேரூராட்சி முறைகேடு -  தஞ்சாவூரில் 3-ம் தேதி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், 'பேராவூரணி பேரூராட்சி மன்றம்' திமுகவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது. பேராவூரணி பேரூராட்சி திமுக செயலாளர் பொறுப்பு, பேரூாட்சி மன்றத் தலைவர் பதவி முதலானவை ஒரு திமுக குடும்பத்தின் வசமாகி, ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வதில் அரசு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    ஒப்பந்தப் பணிகளை செய்யாமலேயே அதிகாரிகள் துணையுடன் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு, முறைகேடுகள் நடைபெற்றது ஊர்ஜிதம் செய்யப்பட்டு விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவிடாமல் துறை அமைச்சர் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிய வருகின்றன.

    இந்த நிலையில், பேராவூரணி பேரூராட்சி மன்றத்தில் திமுகவினரால் நிகழ்த்தப்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல், தவறிழைத்த திமுகவினருக்கு ஆதரவாக இருந்து வரும் திமுக அரசையும், பேரூராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து, அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், (3.1.2025) வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ், எம்.எல்.ஏ., தலைமையிலும்; தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி.வி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், 3 முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    குடும்ப ஆட்சி நடத்தும் திமுக அரசையும், ஊழல்கள் மலிந்துள்ள பேராவூரணி பேரூராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



  • Dec 28, 2024 13:40 IST
    தலைவன் வழியில் தொண்டன்

    தலைவன் வழியில் தொண்டன் எந்த வரியை உண்மையாக்க அண்ணாமலை போல் சாட்டையை சுழற்றிய கோவை பா.ஜ.க நிர்வாகி. அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அண்ணாமலை சாட்டையால் அடித்து போராட்டம் செய்தது போல கோவையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவரும் சாட்டையால் அடித்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.



  • Dec 28, 2024 13:26 IST
    ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டது

    மதுரை வடக்கு தொகுதி கோரிப்பாளையத்தில் தந்தையை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளரும் குழந்தைகளுக்கு  கல்விக்காகவும்  அவர்கள் குடும்பத்திற்காகவும் உதவித்தொகையும்  ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டது. 

     



  • Dec 28, 2024 11:11 IST
    பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட புல்லட் யானை

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி சேரம்பாடி சேரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் புல்லட் யானை என்று அழைக்கப்படும் காட்டு யானை ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வன பகுதியில் விட கொண்டு சென்ற வனத்துறையினர். வனத்துறை வாகனங்கள் சூழ பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.



  • Dec 28, 2024 10:46 IST
    ஜன் சதாப்தி விரைவு ரயில் - கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்

    21 ஆண்டுகள் பழமையான கோவை - மயிலாடுதுறை வரை செல்லும் ஜன் சதாப்தி விரைவு ரயில் :  புதுப்பொலிவுடன் அதிக வசதிகள் கொண்டு இன்று முதல் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில், ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். 

     



  • Dec 28, 2024 10:33 IST
    மதுரை: துணை தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    மதுரையில் மோசடி வழக்கில் சொத்துக்களை ஏலம் விடும் விவகாரத்தில் ரூ.1.65 லட்சம் பெற்றதாக எழுந்த புகாரில் பெண் துணை தாசில்தார் தனபாண்டி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். 



  • Dec 28, 2024 09:28 IST
    அதிகாலையில் நடந்த கோர விபத்து - 3 பேர் பலி; 18 பேர் படுகாயம்: தேனியில் அதிர்ச்சி

    தேனி அருகே ஏற்காடுக்கு சுற்றுலா சென்ற வேன் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கேரளம் மாநிலம், கோட்டயைத்தைச் சேர்ந்த சிலர் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களது வேன் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேன் மற்றும் கார் அப்பளம் போல் நொருங்கியது. 


    கார் வந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் வேனில் இருந்த 18 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tamil News Update Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment