Advertisment

Coimbatore, Madurai, Trichy News: பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pamban cloud burst

கோவை, திருச்சி, மதுரை முக்கிய செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் திறப்பு விழா, புதிய திட்டப் பணிகள் தொடக்கவிழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) ஈரோடு புதிய பஸ் நிலைய வளாகத்தில் நடக்கிறது.

Advertisment

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 50,088 பேருக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் ரூ.951 கோடியே 20 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 559 திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.133 கோடியே 66 லட்சம் மதிப்பில் 222 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தும் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 20, 2024 21:59 IST

    பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்.



  • Dec 20, 2024 20:36 IST

    அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

    தமிழகம் முழுவதும் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை பெய்ததால் பெரும்பாலான வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் ஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலைையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தும் இரவு நேரங்களில் பனிமூட்டம் இருந்து  வந்தது. இன்று மாலை சிவகங்கை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலான வாணியங்குடி, கண்டனி,சோழபுரம், பையூர், உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் துவங்கியது. அரை மணி நேரத்துக்கு மேலாக நீடித்த மழையின் காரணமாக  மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து மழைக்காக காத்திருந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



  • Advertisment
    Advertisement
  • Dec 20, 2024 19:49 IST

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கைது: தமிழிசை கண்டனம்

    குற்றவாளிகளுக்கு ஊர்வலம் நடத்த அனுமதி அதை தட்டிக் கேட்டால் கைது.. தமிழக அரசின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். கோவையில் அமைதியான முறையில் கண்டனத்தை தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட மற்ற நிர்வாகிகளையும் கலந்து கொண்ட சகோதர இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் கைது செய்திருப்பது தமிழக அரசின் அராஜகப் போக்கை காண்பிக்கிறது. குற்றவாளிகளுடன் கைகுலுக்குவது நேர்மையாளர்களை கைது செய்வது இதுதான் தமிழக அரசின் நியாயமற்ற நீதியற்ற நடைமுறை. வன்முறையாளர்களுக்கு ஆதரவு நன்முறையாளர்களுக்கு அனுமதி மறுப்பு என்ற தமிழக அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழிசை சௌந்திரராஜன் மு.க.ஸ்டாலினை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Dec 20, 2024 19:47 IST

    சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை

    சிவகங்கை மாவட்டத்தில் முத்துப்பட்டி வாணியங்குடி பையூர் காஞ்சிரங்குளம் போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.



  • Dec 20, 2024 18:40 IST

    நெல்லை நீதிமன்ற வளாகத்தில் கொலை: விசாரணைக்கு 3 தனிப்படைகள் அமைப்பு

    நெல்லை நீதிமன்ற வாசலில் மாயாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்  என்று, திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Dec 20, 2024 16:39 IST

    "கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலையை அறிவின் சிலையாக போற்றுவோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சமத்துவம் போற்றும் உலக பொதுமறை படைத்த வள்ளுவருக்கு சிலை அமைத்து 25 வருடங்கள் ஆகிறது. அதை அறிவின் சிலையாக போற்றுவோம் என்று x தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Dec 20, 2024 16:09 IST

    ராமநாதபுரம் - ஏலம் எடுப்பதில் தகராறு

    ராமநாதபுரத்தில் வாரச்சந்தை கடைகளை ஏலம் எடுப்பதில் தகராறு. பேரூராட்சி வளாகத்தில் இரு தரப்பு இடையே நாற்காலிகளை வீசி எறிந்து தாக்குதல். காவலர் ஒருவருக்கு காயம் என்று தகவல். இதனால் ஏலம் எடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



  • Dec 20, 2024 16:06 IST

    சாப்பாடு போட்டு வளர்த்த குடும்பத்தையே கொல்ல முயன்ற சாமியார்.

    சின்னசேலம் அருகே கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற சாமியார், ஒரு குடும்பத்தையே கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



  • Dec 20, 2024 16:01 IST

    50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் 50,௦௮௮ பயனாளிகளுக்கு 284 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



  • Dec 20, 2024 15:32 IST

    புல்லட் யானையை விரட்ட களமிறங்கிய கும்கிகள்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புல்லட் யானையின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே மதுபாட்டில்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் புல்லட் யானை, இதுவரை 28 வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சேரங்கோடு பகுதியில் வீடுகளுக்கு அருகே மதுபாட்டில்களை கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. யானை வந்து மதுபாட்டில்கள் மீது உரசும் பட்சத்தில் சத்தம் உண்டாகும் என்றும், அந்த சத்தத்தை வைத்து யானை வந்துவிட்டத்தை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



  • Dec 20, 2024 14:42 IST

    "2026 சட்டமன்ற தேர்தலில் 200 எனும் இலக்கை நாங்கள் வைத்துள்ளோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    “2026 சட்டமன்ற தேர்தலில் 200 எனும் இலக்கை நாங்கள் வைத்துள்ளோம். ஈரோட்டில் கள ஆய்வுக்குப் பின், 200-ஐயும் தாண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. காலி குடம் உருண்டால் சத்தம் அதிகமாக வரும். அதுபோல் எடப்பாடி பழனிச்சாமி உருண்டு புரண்டு சத்தம்போட்டாலும் அதில் உண்மை ஒரு துளியும் கிடையாது. பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முடியாது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



  • Dec 20, 2024 14:01 IST

    நெல்லை இளைஞர் கொலை – இ.பி.எஸ் கண்டனம்

    எங்கும் கொலை எதிலும் கொலை என்ற அவல நிலைக்கு, இன்று நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல. நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதற்கு சாட்சி இது. சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள அரசின் காவல்துறை மீதோ குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லாத நிலை உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை கொலைக்கு எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்



  • Dec 20, 2024 13:46 IST

    குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 12 அடி நீள மலைப்பாம்பு

    பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிக்குள் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 12 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் மீட்ட இளைஞர்கள் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.



  • Dec 20, 2024 13:26 IST

    ஈரோடு கிழக்கு தொகுதி; காங்கிரசுடன் ஆலோசித்து வேட்பாளர் அறிவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

    ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க கூட்டணி வசமாகும். தொகுதியில் யார் போட்டியிட வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்



  • Dec 20, 2024 12:45 IST

    நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் கொலை; 4 பேர் கைது

    நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளான்ர். நெல்லை தாலுகா காவல் நிலைய எல்லையில் வைத்து சிவா, மனோராஜ், தங்க மகேஷ் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர். மற்றொரு தனிப்படை முதலில் பிடிபட்ட ராமகிருஷ்ணனை தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறது. கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



  • Dec 20, 2024 12:20 IST

    செந்தில் காமெடி போல இ.பி.எஸ் தவறான தகவலை திரும்ப திரும்ப சொல்கிறார் - ஸ்டாலின்

    தி.மு.க அரசின் வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி புலம்புகிறார். ஃபெஞ்சல் புயல் பாதிப்பு பகுதிகளை இரவு பகல் பார்க்காமல் அரசு இயந்திரம் செயல்பட்டதால் தான் மக்கள் ஓரிரு நாளில் இயல்புநிலைக்கு திரும்பினர். வயிற்று எரிச்சலால் புலம்புகிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. செந்தில் காமெடி போல இ.பி.எஸ் தவறான தகவலை திரும்ப திரும்ப சொல்கிறார். அவர் பேச்சில் உண்மை இல்லை. எங்களை பார்த்து இவ்வளவு பேசும் இ.பி.எஸ்., மத்திய அரசை பார்த்து கீச்சுக் குரலில் கூட பேச வில்லை என ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்



  • Dec 20, 2024 11:56 IST

    மருத்துவக் கழிவுகள்; கேரள குழு நெல்லை வருகை

    கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அம்மாநில குழு இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி வருகிறது



  • Dec 20, 2024 11:53 IST

    அனல்மின் நிலையத்தில் 2 பேர் மரணம்; ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தர்ணா

    அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சரிந்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு முறையான நிவாரணம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அனல் மின் நிலைய நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது



  • Dec 20, 2024 11:23 IST

    ஒசூர் அருகே மின்சாரம் பாய்ந்து 10வயது சிறுமி மரணம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மின்சாரம் பாய்ந்து 10வயது சிறுமி உயிரிழந்தார். காட்டு யானைகள் வராமல் தடுக்க வைக்கப்பட்டிருந்த மின் வயரை தொட்டதால் இந்த விபரீதம் நேர்ந்துள்ளது. தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து, சிறுமி திவ்யாஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்



  • Dec 20, 2024 11:10 IST

    ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பிலான 599 திட்டங்களை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

    ஈரோட்டில் ரூ.951 கோடி மதிப்பிலான முடிவுற்ற 599 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் மாற்று திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களையும் வழங்கினார்.



  • Dec 20, 2024 10:52 IST

    நெல்லை கோர்ட் வாசலில் பயங்கரம்

    திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வாலிபரை வெட்டி விட்டு 4 பேர் கும்பல் காரில் தப்பியோடியது. 



  • Dec 20, 2024 10:24 IST

    தமிழ் பெயர்ப்பலகை; கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ்

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் என்ற விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விரைவில் பெயர்ப்பலகையை தமிழிலும் அமைக்க வேண்டும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது



  • Dec 20, 2024 10:04 IST

    ‘புல்லட்’ காட்டு யானையை, வனத்திற்குள் விரட்ட அழைத்து வரப்பட்டுள்ள கும்கி யானை

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் இரவு நேரத்தில் வீடுகளை தாக்கும் ‘புல்லட்’ காட்டு யானையை, அடர்வனத்திற்குள் விரட்ட கும்கி யானை அழைத்து வரப்பட்டுள்ளது



  • Dec 20, 2024 09:44 IST

    தமிழகத்தில் 74 கிராமங்களுக்கு ஸ்டார் ஆரோக்யா டி.ஜி சேவா திட்டம் அறிமுகம்

    ஸ்டார் ஹெல்த் காப்பீடு நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த 42,000 வாடிக்கையாளர்களுக்கு 238 கோடி ரூபாய்க்கு மேல் க்ளைம் வழங்கியுள்ளதாகயும், 74 கிராமங்களுக்கு ஸ்டார் ஆரோக்யா டி.ஜி சேவா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், காப்பீடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் ஜெயின் தெரிவித்துள்ளார்



  • Dec 20, 2024 09:30 IST

    வி.சி.க ரயில் மறியல் போராட்டம்

    அம்பேத்கரை அவமதித்து அமித்ஷா பேசியதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ரயில் நிலையத்தில் வி.சி.க.,வினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் 



Trichy Coimbatore Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment